Main Menu

41வது நாள் ஆத்மசாந்தி பிராத்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – திருமதி.காந்திமலர் ஜெயக்குமார் (10/03/2022)

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் , பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் 41வது நாள் ஆத்மசாந்தி பிராத்தனையும், கண்ணீர் அஞ்சலியும் 10/03/22 வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று அமரர் ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் ஆத்மசாந்தி பிராத்தனையில், அன்பு பிள்ளைகள் புஸ்பராணி (பேபிசிவா, தமிழ் ஒலி அன்பு நேயர்) தெய்வலதா(வவா) பிரேமலதா, அன்பு மருமக்கள் சிவகுமார்(சிவா), சுப்ரமணியம், யோகராசா, அன்பு சகோதரர்கள் ஜெயகாந்தன் (யாழ்ப்பாணம்), விஜயகாந்தன் (லண்டன்) , சோதிமலர் (யாழ்ப்பாணம்), மைத்துனி ரூபகுமாரி (யாழ்ப்பாணம்), பேரப்பிள்ளைகள் அஸ்வின், அலைக்ஸ், சாஷகிசன், சபிசா, சதுசா, சாய்சரண் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு நினைவு கூருகின்றார்கள்.

41வது ஆத்மசாந்தி பிராத்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் இணைந்து கொள்கிறார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் பேபி சிவா,தெய்வலதா(வவா) பிரேமலதா.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.