4 மணிக்கு முன்னர் அலரி மாளிகையை ஒப்படைக்கப் பணிப்பு!

இன்று 4 மணியாகும் போது அலரி மாளிகையை ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசு அறிவித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மான் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமனம் பெற்றத்தைத் தொடர்ந்து, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய கட்சியினர் தொடர்ந்தும் தங்கியிருக்க அனுமதி இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !