31 ஆம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர்.கைலாசபிள்ளை ஜெயக்குமார் (08/02/2020)
தாயகத்தில் அரியாலை புங்கன் குளத்தைச் சேர்ந்தவரும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டவருமான அமரர் கைலாசபிள்ளை ஜெயக்குமார் (ஓய்வுபெற்ற மாநகர சபை ஊழியர்) அவர்களின் 31 ஆம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் 8ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று இல்லத்தில் அனுஷ்டிக்கிறார்கள்.
அமரர்.கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் அன்பு மனைவி காந்தி மலர், பிள்ளைகள் புஷ்பராணி (பேபி சிவா TRT தமிழ் ஒலி நேயர்) தெய்வலதா (பபா), பிரேமலதா (குட்டி) சகோதரர்கள் சந்திரகுமார் (யாழ்) ரூப குமாரி (யாழ்) சூரியகுமார் (யாழ்) சுகுமார் (யாழ்) மருமக்கள் சிவகுமார், சுப்பிரமணியம், லோகராஜா, மச்சான்மார் ஜெயகாந்தன் (யாழ்) விஜயகாந்தன் (லண்டன்) ஜோதிமலர் (யாழ்) பேரப்பிள்ளைகள் அஸ்வின், அலெக்ஷன், ஷாகீஷன், ஷபிஷா, சதுஷா, சாய்சரண் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்.
31 ஆம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி உறவுகளும் அன்பு நேயர்களும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஆண்டவனை பிரார்த்திக்கின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலி அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் பேபி சிவா, பிரேமலதா, தெய்வலதா.
அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள் .
இரங்கல் கவிதை
அரியாலை மண்ணில் அருந்தவப் புதல்வனே
அன்னை தந்தை சொல் கேட்டு வளர்ந்தவனே
அன்பு சகோதரர்களின் பாசத்துக்குரியவனே
பிறந்த மண்ணின் ஊழியனாய் திகழ்ந்தவனே
கை பிடித்தவளை கண்கலங்காமல் பார்த்தவனே
முக்கனிகள் மூன்றை தந்தவனே
மூ பத்து ஆண்டுகள் பிரான்ஸ் மண்ணில் வாழ்ந்தவனே !
தன்னைப்போல் பிறரை நேசித்தவனே
தர்மம் செய்வோம் என்று செய்து காட்டியவனே
காலத்தின் கோலத்தால் எங்களை கைவிட்டு சென்றவனே !
எங்கிருந்தாலும் எங்களை நேசிப்பவனே
அப்பா என்று எப்போதும் அழைப்போம் –
என்றும் உங்கள் ஆத்மா சாந்தி சாந்தி சாந்தி பெற பிரார்த்திப்போம்!!!
அன்புடன்,
அன்பு மனைவி, பிள்ளைகள்.