307 வறிய மாணவர்களுக்கு 110,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் வவுனியா கனகராயன்குளம் மத்திய மகாவித்தியாலயத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான “இணையும் கரங்கள்” அமைப்பின் தலைவர் முகுந்தசீலன் தலைமையில் (19.12.2016) நடைபெற்றது.
ரி.ஆர்.ரி. வானொலியின் அனுசரணையுடன் 307 வறிய மாணவர்களுக்கு 110,000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. அதற்கான நிதி உதவியினை புலம் பெயர் உறவுகளான இராஜரட்னம் (லண்டன்), சிவலிங்கம் (டென்மார்க்) மோகனதாஸ் (பிரான்ஸ்) ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...