Main Menu

30 க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக கூடினால் £ 10,000 வரை அபராதம் – அரசாங்கம்

பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 30 க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக கூடினால் அதன் அமைப்பாளர்களுக்கு பொலிஸாரினால் £ 10,000 வரை அபராதம் விதிக்க முடியும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

அத்தோடு அந்த கூட்டங்களில் கலந்துகொள்பவர்களுக்கும், கட்டாயமாக முக்கவசங்கள் அணியாதவர்களுக்கும் £ 100 அபராதம் விதிக்கப்படலாம் என்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் £ 3,200 வரை அபராதம் இரட்டிப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை தங்களது சொந்த விதிகளை இதில் கடைபிடிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் திட்டங்களை முதலில் இந்தமாத தொடக்கத்தில் அரசாங்கம் வெளியிட்டது.

இருப்பினும் வடமேற்கு இங்கிலாந்தில் கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான கூடுதல் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கடுமையான விதிகள் அமுல்படுத்தப்பட்டன.

இதற்கு மத்தியில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நூற்றுக்கணக்கான சட்டவிரோத கூட்டங்களை கலைத்துள்ளதாக பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.