29 கட்சிகளுடன் பாரிய கூட்டணி அமையும் – பசில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து  பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு, 29 கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளன என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டம் மினுவங்கொடவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்திரமே செயற்பாட்டு ரீதியான கட்சியாக உள்ளது.

நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்று விட்டேன். 2015 ஜனவரி மாதமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி விட்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !