29 ஆண்டுகளாக கடலில் சுற்றி கரை ஒதுங்கிய கடிதம்: ஜோர்ஜியாவில் ஆச்சர்யம்

சிறுமி எழுதிய ஒரு கடிதம் ஒன்று 29 ஆண்டுகளாக கடலில் சுற்றி தற்போது ஒரு தம்பதியினரின் கையில் கிடைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிரண்டா என்னும் சிறுமி ஒருவர் 29 ஆண்டுகளுக்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதி கடலில் விட்டுள்ளார். இத்தனை வருடமாக கடலில் சுற்றிய அந்த கடிதம் தற்போது வேறொருவரின் கைகளில் கிடைத்துள்ளது.

1988 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் எடிஸ்டோ என்னும் கடற்கரைக்கு சென்ற 8 வயதான மிரண்டா என்னும் சிறுமி தன் வீட்டு முகவரியை ஒரு காகிதத்தில் எழுதி பாட்டிலுள் வைத்து கடலில் வீசியுள்ளார். இந்த கடிதமானது தற்போது 29 வருடங்களுக்கு பிறகு ஜோர்ஜியாவில் உள்ள ஒரு கடற்பகுதியில் கிடைத்துள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றிய டேவிட், லிண்டா தம்பதியினர் சமுகவலைத்தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த கடிதம் எழுதிய மிரண்டா தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !