Main Menu

250 ஆண்டுகள் பழமையான பெட்டகம் பரிசில் ஏலம்

பிரெஞ்சு ராணி ஒருவரது 250 ஆண்டுகள் பழமையான பெட்டகம் ஒன்று பரிசில் ஏலம் விடப்பட உள்ளது.

Marie Antoinette எனும் ராணி பயன்படுத்திய பெட்டகமே ஏலத்துக்கு விடப்பட உள்ளது. வரும் நவம்பர் 22 ஆம் திகதி பரிசில் உள்ள ஏலம் விடப்படும் இல்லத்தில் இந்த ஏலம் இடம்பெற உள்ளது. €800,000 யூரோக்களில் இருந்து €1.2 மில்லியன் யூரோக்கள் வரை இந்த பெட்டகம் ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

chest of drawers என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ள இந்த பெட்டகமானது சீன கலாச்சாரத்தில் உந்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 1770 ஆம் ஆண்டு மேற்படி பெட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது