Main Menu

25ம் ஆண்டு நினைவு தினம் – திரு.திருமதி.அந்தோனிப்பிள்ளை,மற்றும் எலிசம்மா செல்லத்துரை (19/12/2015)

தாயகத்தில் ஊர்காவற்றுறை கரம்பனை சேர்ந்த டேவிட் அந்தோனிப்பிள்ளை, அவர்களின் அன்பு மனைவி திருமதி.திரேசம்மா அந்தோனிப்பிள்ளை,மற்றும் எலிசம்மா செல்லத்துரை,ஆகிய மூவரின் 25வது ஆண்டு நினைவு 19ம் திகதி டிசம்பர் மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகிறது.

இம் மூவரின் ஆத்ம இளைப்பாற்று நிகழ்வினை கனடாவில் அன்பு மகன் அனுஷ்டிக்கின்றார். இந் நிகழ்வில் உற்றார் உறவினர் நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்.

இவ் வேளையில் தந்தை, தாய், சின்னம்மா அவர்களை அன்புப் பிள்ளைகள் மரிய நாயகம் அந்தோனிப்பிள்ளை, வலன்ரைன்  அந்தோனிப்பிள்ளை, யோசப்  அந்தோனிப்பிள்ளை, கஸ்னியர்  அந்தோனிப்பிள்ளை, இம்மானுவேல்  அந்தோனிப்பிள்ளை, ஜஸ்ரின் அந்தோனிப்பிள்ளை, ஜசிதா அந்தோனிப்பிள்ளை,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இம் மூவரையும் இன்றைய தினத்தில் நினைவு கூருகின்றார்கள்.

TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அனைவரும் மற்றும் அன்பு நேயர்களும் இம் மூவரையும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்  ஜெர்மனியில் வசிக்கும்  அன்பு மகன் திரு.ஜோசப் அந்தோனிப்பிள்ளை அவர்கள்.

அவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

4d43bbc4e34596ae4f9cd2699c0b00bb