24 மணிநேரத்தில் மூன்றாவது காவல்துறை அதிகாரி தற்கொலை

நேற்று புதன்கிழமை BRF அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெறும் மூன்றாவது தற்கொலையாகும்.
முன்னதாக Haÿ-les-Roses (Val-de-Marne) இல் பணிபுரியும் BAC அதிஜாரி ஒருவர் சேவைத்துப்பாக்கியினை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டிருந்தார். அவரின் சடலம் Essonne இல் உள்ள அவரது வீட்டில் இருந்து மீட்கப்படிருந்தது. அதன் பின்னர் மேலும் ஒரு அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில்,  தற்போது மூன்றாவது அதிகாரியும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்த மேலதிக தகவலகள் எதுவும் வெளியாகவில்லை. என்றபோதும், அதிகாரி 37 வயதுடையவர் எனவும், BRF பிரிவைச் சேர்ந்தவர் எனவும், சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !