Main Menu

22வது ஆண்டு நினைவு தினம் – அமரர் நடிப்பிசை காவலர் கிறகரி தங்கராசா (30/01/2022)

தாயகத்தில் யாழ்ப்பானம் சுண்டுக்குழியை சேர்ந்த பிரான்ஸ்
Aubervilliers இல் வசித்தவருமான அமரர் நடிப்பிசை காவலர்
கிறகரி தங்கராசா அவர்களின் 22வது ஆண்டு நினைவுதினம்
6 ஆம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை அன்று வந்த நினைவு தினத்தை 30ஆம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை நினைவு கூருகின்றார்கள்.

அமரர் நடிப்பிசை காவலர் கிறகரி தங்கராசா அவர்களின் 22வது
ஆண்டு நினைவு தினத்தை அன்பு பிள்ளைகள் உஜித்தா France, விஜித்தா France, மக்சி France, பிரின்ஸ் France, அன்பு மருமக்கள் யோய் France, ராஜா, சசி France, பிந்து France, சகோதரர்கள் தேவராசா இலங்கை, புவனேஸ்வரி இலங்கை, ராஜேஸ்வரி France, ராஜ்குமார் France, செல்வகுமார் London, மச்சான்மார் மச்சாள்மார், அன்ரன் Australia,ஜெயவதி இலங்கை, ஜெயசோதி இலங்கை, Sister லுசியா இலங்கை, ஜெயக்குமார் Canada, ஜெயமலர் Australia, பேரப்பிள்ளைகள் ஜெனிபர், துசாரா, ஜெசன், அஸ்வின், ஜெவின், ஸ்வரன், இனியா, இயல், சுவாதி, ஈழன், மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகிறார்கள்.

அமரர் நடிப்பிசை காவலரை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள் .
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் உஜித்தா, விஜித்தா, மச்சி,பிரின்ஸ்

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள். 🙏

22ம் வருட நினைவு கவிதை
□□□□□□□□□□□□□□
ஈழத்தாய் பெற்றெடுத்த
காவியத் தலைவர்!
இயல் இசை நாடகம்
பயின்றவர்!
பெற்றவர் உள்ளம்
மகிழ்வித்தவர்!
கரம் பற்றியவள் நெஞ்சில்
நீங்கா இடம் பிடித்தவர்!
பிள்ளைகள் வாழ்வில்
முன்னேற்றம் கொடுத்தவர்!
மேடைகள் பல கண்டவர்!
நடிப்பிசை காவலர் எனும்
பட்டமும் பெற்றவர்!

ஆடல் பாடலோடு நாட்டுக்கூத்து என
நடித்து காட்டி,நடிப்பிசை காவலர் ஆனவர்.

வெள்ளி இரவுதோறும்
TRT தமிழ்ஒலி தொலைக்காட்சியில்
பாடுவோர் பாடலாம் நிகழ்வில் பாடி
பலரின் இதயங்களை கொள்ளை கொண்டவர்!

கலைக்கென தன்னை வருத்தி
மகிழ்ந்தவர்!
கலையால் அயல்நாடு சென்று
அனைவரையும் மகிழ்வித்தவர்!

தனக்கென வாழாமல்
பிறருக்கென வாழ்ந்தவர்!

ஆண்டுகள் 22 ஓடினால்தான் என்ன..
அனைவரின் உள்ளத்திலும் பலநூறு
ஆண்டுகள் என்றும் வாழும்
நடிப்பிசை காவலர் கிறகிரி தங்கராசா..
உங்கள் நாமம் என்றும் வாழும்..
ஓம் சாந்தி..ஓம் சாந்தி…ஓம் சாந்தி.

( கவி ஆக்கம் வேலணை ஊரான்.)