2038ஆம் ஆண்டிற்குள் நிலக்கரிப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வரும் ஜேர்மனி!

ஜேர்மனி, மின்சார உற்பத்திக்காக நிலக்கரியைப் பயன்படுத்துவதை 2038ஆம் ஆண்டுக்குள் நிறுத்திக் கொள்ளும் என அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் நிலக்கரியின் பயன்பாட்டைக் கட்டங்கட்டமாக முடிவுக்குக் கொண்டுவரும் 80 பில்லியன் யூரோ திட்டத்தை ஆணைக்குழு வெளியிட்டது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான கடப்பாட்டை வலுப்படுத்த ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஜேர்மனி கடுமையான நெருக்குதலை எதிர்நோக்கி வந்தது.

பல மாதக் காரசார விவாதத்துக்குப் பின்னர் நிலக்கரிப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு குறித்து ஆணைக்குழு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !