Day: March 29, 2025
வெகுவிரைவில் ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப் படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தேசிய உப்பு நிறுவனத்தின் ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலையில், மேசை உப்புமேலும் படிக்க...
பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதை முகாம்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் : பிமல் ரத்நாயக்க

பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா, குடியிருப்பு பகுதியில்மேலும் படிக்க...
மியான்மர் பூகம்ப பலி 1,644 ஆக அதிகரிப்பு: நூற்றுக் கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கித் தவிப்பு

மியான்மரில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,644 ஆக அதிகரித்துள்ளது என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல்கள்மேலும் படிக்க...
‘பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு இந்தியா உறுதுணை’ – பிரதமர் மோடி

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுடன் இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட மியான்மர் பகுதிகளுக்கு உடனடி நிவாரணம் மற்றும் உதவி வழங்குவதற்கான முன்முயற்சியான ‘ஆபரேஷன் பிரம்மா’வை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுமேலும் படிக்க...
பிரதமரின் திறப்பு விழா நிகழ்வுக்காக பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை

வரும் ஏப்.6-ம் தேதி, பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைக்க உள்ளதை முன்னிட்டு தென்னக ரயில்வே அதிகாரிகள் ரயில் மற்றும் கப்பலை இயக்கி சோதனை நடத்தினர். மண்டபம் நிலப் பரப்பையும் ராமேசுவரம் தீவையும் இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம்மேலும் படிக்க...
மாத்தளையில் இயங்கிய வதைகூடங்கள் : கோட்டா பொறுப்புக்கூற வேண்டுமென காணாமல் ஆக்கப் பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் தெரிவிப்பு

நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற நபர்களை காணமலாக்கிய பல்வேறு சம்பவங்களில், அப்போது இராணுவத்தின் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
ஆனையிறவு உப்புத் தொழிற்சாலை இன்று மக்கள் பாவனைக்கு

தேசிய உப்புக் கம்பெனியின் கீழ் இயங்கும் ஆனையிறவு உப்பளத்தின் தேசிய உப்புத் தொழிற்சாலையை இன்று (29) முதல் மக்கள் பாவனைக்கு வழங்குவதாக தொழிற்சாலையின் தலைவர் கயான் வெள்ளால தெரிவித்தார். “ரஜ லுணு” எனும் பெயரில் சமையல் உப்பு வர்த்தக பேருடன் அறிமுகப்படுத்தப்படுவதுடன்மேலும் படிக்க...
15 – 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி

நாட்டிலுள்ள இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கிடைப்பட்ட 115 பேருக்கு எச்.ஐ.வி தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில்மேலும் படிக்க...
தேசபந்துவுக்கு உதவிய இருவர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமேமேலும் படிக்க...


