Day: February 28, 2025
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவு தீவில் நடைபெறும் இந்த திருவிழா,மேலும் படிக்க...
பிரான்ஸ்: சுகாதார காப்பீட்டினை முறைகேடாக பயன்படுத்தி மோசடி

சுகாதார காப்பீட்டினை முறைகேடாக பயன்படுத்தி, மோசடி செய்த மூன்று பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீஸ் (Nice) மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்டிருந்த விசாரணைகளில் இந்த மோசடி தெரியவந்துள்ளது. Roquebrune-Cap-Martin நகரைச் சேர்ந்த மூன்று தாதியர், கடந்த மூன்று ஆண்டுகளாக நோயாளிகளின் காப்புறுதிமேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவ கொலை – இரு முக்கிய சந்தேக நபர்கள் கைது

சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரு முக்கிய சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். கடந்த வாரம் புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தமைமேலும் படிக்க...
பொலிஸ் அழைப்பாணையை கிழித்ததாக சீமான் பணியாளர் கைது – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட பொலிஸ் அழைப்பாணையை கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் சென்னை வளசரவாக்கம் பொலிஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்டமேலும் படிக்க...
வடக்கில் இராணுவத்தினரால் இளைஞர்களுக்கு போதைப் பொருட்கள் வழங்கப் படுகின்றன – சிறிதரன்

இராணுவத்தில் நான்கில் மூன்று பங்கினர் வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உணவகம் ஒன்றை நடத்துவதுடன் அங்கு இராணுவத்தினரால் இளைஞர்களுக்கு போதைப்பொருட்களும் வழங்கப்படுகின்றன . சில இளைஞர்கள் அந்த இராணுவ முகாமில் ஆடையின்றி உள்ளாடைகளுடன்மேலும் படிக்க...
பொலிஸ் சேவையில் தமிழ் மொழி பேசுபவர்களை இணைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

நாட்டின் பாதுகாப்புக்கும் பொது மக்களின் பொது மக்களின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் திணைக்களத்தின் தேவைப்பாடுகளை பூர்த்தி செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது. தமிழ் மொழி மூலமான உறுப்பினர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறதென தேசியமேலும் படிக்க...
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் – ஜனாதிபதி

தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று கருத்துரைத்த போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
நாளை மறுதினம் இலங்கையில் நோன்பு ஆரம்பம்

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஷஹ்பான் மாதத்தை நாளை பூர்த்தி செய்யுமாறும், நாளை மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரமழான்மேலும் படிக்க...
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்வதில்லை – எரிபொருள் விநியோகத்தர்கள்

எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள பெட்ரோலியப் பொருட்களை மட்டுமே விநியோகிப்பதாக அந்த சங்கம்மேலும் படிக்க...
இனவாதம் , தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப் படாது ஜனாதிபதி

இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்ட கட்டமைப்பின் ஊடாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்றுமேலும் படிக்க...
2026இல் தமிழரா? திராவிடரா? : சீமான்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாவலரை பொலிஸார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில், சென்னை வளசரவாக்கம் போலீஸார் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்மேலும் படிக்க...
மத்திய பிரதேசை உலுக்கிய பாலியல் வன்புணர்வு; உயிருக்கு போராடும் 5 வயது சிறுமி

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடூரமான உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகிறார். உடலில் பல காயங்கள், அந்தரங்க உறுப்புகளில் காயங்களுடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும்மேலும் படிக்க...
பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்; 4 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் வெள்ளிக்கிழமை (28)நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளதாக கைபர் பக்துன்க்வா பொலிஸாரின் தகவல்களை மேற்கொள்காட்டி பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெஷாவருக்குமேலும் படிக்க...
போப் பிரான்சிஸின் உடல் நிலை முன்னேற்றம்
இரட்டை நிமோனியாவுடன் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புனித போப் பிரான்சிஸ், மற்றொரு அமைதியான இரவைக் கழித்ததாகவும், தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் வத்திக்கான் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்துள்ளது. 88 வயதான பிரான்சிஸ், பெப்ரவரி 14 அன்று ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் படிக்க...
கணேமுல்ல சஞ்சீவவின் மரணம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட்டின் விசாரணையின் முடிவில் மாஜிஸ்திரேட் இந்தமேலும் படிக்க...
ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையே இன்று சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. ட்ரம்பின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்துமேலும் படிக்க...
இலங்கையில் வறுமை 52 வீதத்தால் அதிகரிப்பு

கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் வறுமை 45 – 52 வீதத்துக்கு இடையே அதிகரித்துள்ளதாக வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA) புதிய அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, சமூக பாதுகாப்பு வலையமைப்பை மேலும் விரிவாக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் தொடர்பு உண்டு- குற்றம் சுமத்தும் சுனில் வட்டகல

முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களை மேற்கொள்வதற்காக பாதாள உலகக் குழுக்களை பயன்படுத்தியுள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல இன்று (28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, உயர் நீதிமன்ற நீதிபதிமேலும் படிக்க...
புனித ரமழான் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (28) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இப்பிறை தொடர்பான விடயங்கள் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இம் மாநாட்டில்மேலும் படிக்க...

