Day: February 14, 2025
பாகிஸ்தானில் சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வெடிக்குண்டு தாக்குதல் – 11 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் . 6 பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பின் போது 17 சுரங்க தொழிலாளர்கள் வாகனத்திலிருந்ததாக வெளிநாட்டுமேலும் படிக்க...
ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்

2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்மேலும் படிக்க...
தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதியோம் – அமைச்சர் சந்திரசேகர்

உறக்கத்தில் உள்ள இனவாதத்தை மீண்டும் எழும்ப அனுமதிக்க முடியாது. அதனால் தையிட்டி விகாரை விவகாரத்தை விரைவில் தீர்த்து வைப்போம் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பானமேலும் படிக்க...
பிரான்ஸ் முன்னாள் பிரதமர் Jean Castex கைது

முன்னாள் பிரதமர் Jean Castex, கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நேற்று பெப்ரவரி 13, வியாக்கிழமை காலை Montpellier நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். “தனிப்பட்ட தேவைக்குமேலும் படிக்க...
செர்னோபில் அணுஉலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
செர்னோபில் அணுமின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதல், ஏற்கெனவே அழிக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் முன்பு செயலில் இருந்த நான்காவது அணு உலை மீது நேற்றிரவுமேலும் படிக்க...
ஜனாதிபதி செயலாளருக்கும் துருக்கி தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட் (Semih Lütfü Turgut) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (14) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளைமேலும் படிக்க...
மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக ராமேசுவரத்தில் பிப்.16-ல் திமுக ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பாக பிப்.16-ம் தேதி, ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இலங்கை கடற்படையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
ரணில் – மைத்திரி சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் நேற்றுப் (13) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷனமேலும் படிக்க...
யோஷித,டேசி ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேசி போரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளார். 2012 மற்றும் 2015க்குமேலும் படிக்க...
யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் (14)யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய தினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்டமேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று வெள்ளிக்கிழமை (14) பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்துக்கு சென்று கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலில் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், முன்னாள்மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் ; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாமல் ராஜபகஷ சட்டப் பரீட்சையை முடித்ததில் கிடைக்கப்பபெற்றமேலும் படிக்க...
நடிகர் விஜய்க்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு; மத்திய அரசு முடிவு

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் நடிகர் விஜய்க்கு, ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம்மேலும் படிக்க...
பா.ஜ., ஆளாத மாநிலங்களை புறக்கணிக்கவில்லை: நிர்மலா

பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது; எந்த மாநிலத்தையும் மத்திய அரசு புறக்கணிக்கவில்லை,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் கூறினார். ராஜ்யசபாவில் நேற்று தி.மு.க., – எம்.பி.,க்கள், ‘மத்தியமேலும் படிக்க...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றில் அறிவித்தார் சபாநாயகர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அதனை நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றில் அறிவித்த சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின்மேலும் படிக்க...
யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்குமேலும் படிக்க...
நாமல் மீதான வழக்கு விசாரணை : சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான வழக்கு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடு இன்று கொழும்புமேலும் படிக்க...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு நீதிமன்றத்தால் தீர்வு கிட்டாது; போராட்டமே இதற்கான வழி! – வேலன் சுவாமிகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது மதவாதமோ இனவாதமோ அல்ல. இது தமிழ் மக்களின் அரசியல் சார்ந்த பிரச்சினை என பொத்துவில் பொலிகண்டி அமைப்பின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். இந்த விடயத்தில் நீதிமன்றத்தில் எமக்கான நீதியை எதிர்பார்க்கமேலும் படிக்க...
சாகும் வரை உண்ணாவிரதம்! – முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை, சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை இன்று (14) காலை ஆரம்பித்துள்ளார். ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி அழகரெத்தினம் வனகுலராசா இன்றைய தினம்மேலும் படிக்க...

