Day: January 6, 2025
சத்தீஸ்கரில் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; 9 பேர் உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் சென்ற வாகனத்தை நக்சலைட் பிரிவினைவாதிகள் வெடிகுண்டு மூலம் வெடிக்கச் செய்துள்ளனர். இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG ) ஜவான்களும், சாரதியும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். இந்த பயணத்தின் போது அவர் சீன ஜனாதிபதி மற்றும்மேலும் படிக்க...
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மற்றுமொரு பிடியாணை

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது மர்மமான முறையில் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா, அவரது இராணுவ ஆலோசகர், இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் எனமேலும் படிக்க...
எந்தவொரு அதிகார அரசியல் நகர்விலும் பங்காளியாகச் செயற்படேன் ; கரு ஜயசூரிய

நாட்டு மக்களின் நலனை இலக்காகக்கொண்டு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் தற்போது மிகுந்த அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு அப்பால், தாம் எந்தவொரு அதிகார அரசியல் செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவத்தை வழங்கப்போவதில்லை என அவ்வியக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கியமேலும் படிக்க...
ரஷ்ய படையில் இலங்கையர்கள் வலிந்து இணைப்பு குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் விரைவில் பேச்சு – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

ரஷ்யப்படையில் வடபகுதி இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை உட்பட இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பில் ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன் அமைச்சர் விஜித ஹேரத் விரைவில் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா போராட்டக்காரர்களுடனானமேலும் படிக்க...
Clean Sri Lanka வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர்

Clean Sri Lanka வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் சிறிலங்கா அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார் நீண்டகாலமாக விசாரணையின் பேரில்மேலும் படிக்க...
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் பாரிய தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன், ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பகுதியில் புதிய தாக்குதல்களை நடத்தப்பட்டுள்ளதாக இருபுறமும் அறிவித்துள்ளன. உக்ரைனின் ட்னிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk) பகுதியில் ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார். ஜெர்மனியில் ராம்ஸ்டெயின் விமான தளத்தில் இந்த வாரம் நடைபெறும் கூட்டணிமேலும் படிக்க...
இங்கிலாந்தை தாக்கிய பனி மற்றும் வெள்ளம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் கடுமையான வானிலை நிலவரம் பரவியுள்ளது. பனி மற்றும் மழை பல பகுதிகளை பாதிக்கின்றன, குறிப்பாக தெற்கு இங்கிலாந்தில், இதனால் வெள்ள எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் 200க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் எட்டியுள்ளன.மேலும் படிக்க...
குஜராத்தில் கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் பலி

குஜராத் மாநிலம் போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று ஒரு பரிதாபகரமான விபத்து ஏற்பட்டது. வழக்கமான பயிற்சியின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான இலகுரக துருவ் ஹெலிகாப்டர் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 பைலட்டுகளுடன்மேலும் படிக்க...
பல்கலை உப வேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் நிர்வாகச் சிக்கல்கள், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் வெற்றிடங்கள், மாணவர்களின் குடியிருப்புப்மேலும் படிக்க...
கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த கனடா பிரதமர்

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரம் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சி கூட்டத்திற்கு முன்னதாக அவர் பதவி விலகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், கட்சியின் தலைமையிலிருந்து ட்ரூடோ உடனடியாக விலகுவாரா ? அல்லதுமேலும் படிக்க...
இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன்படி சீனாவின் வடக்கு மாகாணங்களில் குறித்தமேலும் படிக்க...
இடைநிலை தூர ஏவுகணைச் சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா, அதன் கிழக்கு கடற்பிராந்தியத்தை நோக்கி இடைநிலை தூர ஏவுகணை ஒன்றை இரண்டு மாதங்களின் பின்னர் இன்று ஏவியுள்ளது. எனினும் குறித்த ஏவுகணை ஜப்பானிய நேரப்படி இன்று மதியம் கடலில் வீழ்ந்துள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர்மேலும் படிக்க...
தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அரசியல் நல்லெண்ண சமிக்ஞைகளை NPP இதுவரை வெளியிடவில்லை -பேராசிரியர் ரகுராம்

ஈழத்தமிழர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு ஆக்கபூர்வமான அல்லது மனச்சுத்தியுடனான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என பேராசிரியர் ரகுராம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுப்பேருரையை ஆற்றிய பேராசிரியர் ரகுராம் இதனைமேலும் படிக்க...
சர்வ மதத் தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார் சபாநாயகர்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த சனிக்கிழமை (04) வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டு ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இந்த வழிபாட்டில் தியவடன நிலமே நிலங்க தேல பண்டாரவும் இணைந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து மல்வத்து மகா விகாரைக்குச்மேலும் படிக்க...
புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளை அரசாங்கம் தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித்
புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தாமதமின்றி ஈடுபடவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய அரசமைப்பினை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கம் தனது பதவிக்காலம்மேலும் படிக்க...

