Day: December 15, 2024
அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவே `ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை பா.ஜ.க.கொண்டு வந்துள்ளது- திருமாவளவன்
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ஆதவ் அர்ஜீனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்கள் குறித்து கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கமேலும் படிக்க...
கிரீஸ்: கடலில் படகு கவிழ்ந்து 5 அகதிகள் பலி.. பலர் மாயம்

கிரீஸ் நாட்டின் கடற்பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கிரீஸ் நாட்டில் உள்ளதற்குத் தீவான கவ்டோஸ் பகுதியில் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] இரவு அகதிகளை ஏற்றி கொண்டுவந்த மரப் படகுமேலும் படிக்க...
தாய்லாந்து இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி-50 பேர் காயம்

தாய்லாந்தின் வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் நள்ளிரவில் இசை திருவிழா நடந்தது. இதில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்தது. இதனால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த குண்டுவெடிப்பில்மேலும் படிக்க...
இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்து விடப் போவதில்லை ; மாறாக நாம் வளர்வோம் – வேதநாயகன்

இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கைமேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்ப்புக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்கும் சர்வதேச ஊடக நிறுவனம்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு அவதூறு ஏற்படுத்தியமைக்காக சர்வதேச ஊடக நிறுவனமொன்று, அவருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த மார்ச் 10 ஆம் திகதி நேர்காணல் ஒன்றின்போது, குறித்த ஊடக நிறுவனத்தில் நெறியாளர்,மேலும் படிக்க...
சமூக விரோதிகளின் தலைநகரமாகி விட்டது டெல்லி: அமைச்சர் அமித் ஷாவுக்கு கேஜ்ரிவால் கடிதம்

‘‘பாலியல் வன்கொடுமையாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கொள்ளையர்களின் தலைநகரமாக டெல்லி மாறிவிட்டது’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்மேலும் படிக்க...
சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை

மிகவும் சிக்கலான மற்றும் சவாலான சர்வதேச இறையாண்மை பத்திர கடன் மறுசீரமைப்பை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள நிதியமைச்சு, இறையாண்மை பத்திர உரிமையாளர்களில் 98 சதவீதமானோர் பத்திர பரிமாற்றத்துக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக்மேலும் படிக்க...
தமிழரசு கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவர்

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று (14) தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும்மேலும் படிக்க...
யாழில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது, தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்க வேண்டுமெனக் கோரிக்கை

சமஷ்டி அரசியலமைப்பைக் கோருவதற்குத் தமிழ் மக்களுக்கு அவசியமான ஆதரவினை இந்தியா வழங்கவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியா செல்லவுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்மேலும் படிக்க...
முதல் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப் பயணமாக இன்று (15) பிற்பகல் இந்தியா சென்றுள்ளார். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி 17 ஆம் திகதி வரையில் இந்தியாவில் தங்கியிருப்பார்.மேலும் படிக்க...
