2021 இற்குப் பின்னர் அரசியலில் இருந்து விலகுகிறார் அஞ்ஜெலா மெர்க்கல்

ஜேர்மனியின் நிதியமைச்சரான அஞ்ஜெலா மெர்க்கல் 2021 ஆம் ஆண்டில் முடிவுக்கு வரும் தனது பதவிக்காலத்தின் பின்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பிராந்திய தேர்தலில் அவரது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை தொடர்ந்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமது பதவிக் காலம் முடிந்த பிறகு, எந்த அரசியல் பதவியும் வகிக்க மாட்டேன் என பெர்லினில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் தலைவருக்கான தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

64 வயதான அஞ்ஜெலா மெர்க்கல் 2000ஆம் ஆண்டிலிருந்து அவர் இக்கட்சியின் தலைவராக உள்ளதுடன் 2005 ஆண்டிலிருந்து ஜெர்மனியின் நிதியமைச்சராக பதவி வகிக்கிறார்.

தனது கட்சியின் மோசமான செயல்திறனுக்கு தாமே முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாக மெர்கல் கூறியதோடு அடுத்த தலைவரை தாம் தேர்வு செய்யப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !