2020-ம் ஆண்டில் இருந்து சில ஆண்ட்ராய்ட் , ஐபோன்களில் வாட்ஸ் அப் செயலி நிறுத்தம்
2020-ம் ஆண்டில் இருந்து குறிப்பிட்ட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும் வாட்ஸ் அப் செயலி தனது செயல்பாட்டை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு பிப்ரவர் 1-ம் தேதியில் இருந்து பழைய மாடல் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள், மற்றும் ஐபோன்கள், விண்டோஸ் மொபைல் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது.
அதன்படி, ஆண்ட்ராய்ட் 2. 3.7 ஆகிய வெர்சன்களில் வாட்ஸ் அப் இயக்காது. ஐபோன்களில் ஐஓஸ் 8 பிரிவிலும் வாட்ஸ் அப் செயலி அடுத்த ஆண்டில் இருந்து இயங்காது. இந்த மாடல் ஸ்மார்ட் போன்களில் புதிய வாட்ஸ்அ ப் கணக்குகளைத் தொடங்க முடியாது, ஏற்கெனவே இருக்கும் வாட்ஸ் அப் கணக்குகளையும் அப்டேட் செய்யவும் முடியாது.
விண்டோஸ் ஸ்மார்ட் போன்களிலும் டிசம்பர் 31-ம் தேதி இரவில் இருந்து வாட்ஸ் அப் செயலி இயங்காது. விண்டோஸ் 10 ஓஎஸ் செயலியில் இயங்குவதற்கு வாட்ஸ் அப் அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதால் வரும் 31-ம் தேதிக்குப் பின் வாட்ஸ் அப் இயங்காது.
ஒருவேளை விண்டோஸ் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தங்களுடைய சாட் தகவல்கள் அனைத்தையும், எக்ஸ்போர்ட் ஆப்ஷன் மூலம் சேமித்துக் கொள்வது உத்தமம்.
ஜியோ போன், ஜியோ போன்2 ஆகியவற்றில் செயல்படும் கேஏஐஎஸ் 2.5.1 ஆகிய ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் வாட்ஸ் அப் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஆண்ட்ராய்ட் 4.0.3, அதற்கு அதிகமான வெர்ஷன்களிலும், ஐபோன் ஐஓஸ்9 அதற்கு அதிகமான வெர்ஷன்களிலும் வாட்ஸ் அப் தன்னுடைய மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கும். ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2 ஆகியவற்றில் இயங்கும் கேஏஐஓஎஸ் 2.5.1 அதற்கு மேம்பட்ட வெர்ஷன்களில் வாட்ஸ் அப் இயங்கும்.