Main Menu

2020 ஆம் ஆண்டில் 300 திருத்தப்பணிகள்- SNCF

SNCF தரப்பில், 300  திருத்தப்பணிகள் 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தொடருந்து போக்குவரத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த பணிகள் இடம்பெற உள்ளன. 300 திருத்தப்பணிகள் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற உள்ளது. இவற்றில் பிரதானமாக தண்டவாளம் உருவாக்குதல், விஸ்தரித்தல், புனரமைத்தல் என பல பணிகள் இடம்பெற உள்ளன.  இதற்காக SNCF Réseau நிறுவனம் 2.4 பில்லியன் யூரோக்கள் நிதி ஒதுக்கியுள்ளன. SNCF Réseau இன் இல்-து-பிரான்சுக்கான நிர்வாக இயக்குனர் Guillaume Marbach இது குறித்து தெரிவிக்கும் போது, <<தின பயணங்கள் தடை இன்று இயங்க இந்த புதிய வேலைகளை மேற்கொள்ள உள்ளோம். பயணிகளுக்கு தொடருந்து சேவைகள் மேலும் இலகுவாகும்>> என குறிப்பிட்டார்.  இந்த திருத்தப்பணிகளின் போது RER சேவைகள் சில தடைப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வடக்கு பரிசில் அதிகளவான திருத்தப்பணிகள் இவ்வருடத்தில் இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.