Main Menu

2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி விபரம் அறிவிப்பு

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2020 ஆண்டில் விளையாடும் போட்டிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஜனவரி 14-ந்தேதி முதல் ஜனவரி 19-ந்தேதி வரை மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.

இந்தியா அணி ஜனவரி 24-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. மார்ச் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தென் ஆப்பிரிக்கா இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இந்திய அணி தலா மூன்று ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் வரை இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது.

அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.