2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய தேர்தல்கள்!
இந்த ஆண்டு பல்வேறு சர்வதேச நாடுகளிலும் முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதற்கமைய
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:
தேர்தல் மாதம்: நவம்பர் 2020
தற்போதைய ஜனாதிபதி : டொனால்ட் ட்ரம்ப்
உலகமே எதிர்பார்க்கும் தேர்தலாக இருப்பது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். தற்போது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார்.
எனினும் அவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துப் பிரதமர் தேர்தல்:
தேர்தல் மாதம்: செப்டம்பர் 2020
தற்போதைய பிரதமர் : ஜெசிண்டா ஆர்டன்
கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல், White Islands எரிமலை வெடிப்பு என சில நெருக்கடிகளுக்கு உள்ளான பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், இம்முறையும் தேர்தலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தைவானில் ஜனாதிபதி, சட்டமன்றத் தேர்தல்கள்:
தேர்தல் மாதம்: ஜனவரி 2020
தற்போதைய ஜனாதிபதி: சாய் இங்-வென்
தைவான் இந்த மாதம் அதன் அடுத்த ஜனாதிபதி தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் நடத்தவுள்ளது.
தென் கொரிய நாடாளுமன்றத் தேர்தல்:
தேர்தல் மாதம்: ஏப்ரல் 2020
தென் கொரியாவின் நாடாளுமன்றத் தேர்தல் இவ்வாண்டு ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெறும். நாடாளுமன்றத்தின் 300 இடங்களுக்கு போட்டி நடைபெறும்.
ஹொங் கொங் சட்டமன்றத் தேர்தல்:
தேர்தல் மாதம்: செப்டம்பர் 2020
கடந்த 7 மாதங்களாக ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளது ஹொங் கொங், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுவருவதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி என்ற கேள்வி எழுந்துள்ளது.
பகிரவும்...