Friday, January 18th, 2019

 

பிரேசிலில் துப்பாக்கி கொள்வனவு சட்டம் தளர்த்தப்பட்டது!

பிரேசிலின் புதிய ஜனாதிபதி ஜெயர் போல்சோனாரோ, பொதுமக்கள் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வது தொடர்பான சட்டத்தை தற்காலிகமாக தளர்த்தியுள்ளார். இது தொடர்பான கட்டளைப் பத்திரம் ஒன்றில் அவர் கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்தியுள்ளார். எவ்வாறாயினும், துப்பாக்கிப் பாவனை பிரேசிலில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களை தூண்டும் என்று ஏற்கனவே பல தரப்பினரும் எச்சரித்து வருகின்றனர். இதனிடையே, புதிய கட்டளைப் பத்திரத்திற்கு அமைவாக குற்றவியல் பதிவு இல்லாத வயது வந்தவர்கள் துப்பாக்கிகளை கொள்வனவு செய்து தமது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த ஆயுதங்களை பொது இடங்களிலோ, வௌியிலோ எடுத்துச் செல்ல முடியாது. இது பொலிஸ், பொது அல்லது தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் இராணுவத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கியை கொள்வனவு செய்பவர் கட்டாயமாக 25 வயதுக்கு மேற்பட்டவராகவும், துப்பாக்கி சுடுதல் பயிற்சி கழகங்களில் பயின்றவராகவும், உடல் உளமேலும் படிக்க…


கைதிகள் தாக்கப் பட்டமைக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் கடந்த 2018ஆம் ஆண்டு சிறைச்சாலைக்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சிறைச்சாலை தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்தது. இருப்பினும் அதற்கான நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாத நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


ராகுல் காந்தி தலைமையிலேயே ராமர் கோயில் கட்டப்படும் – ஹரிஷ் ராவத்

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பாஜகவினர் எப்போதுமே மற்றவர்களின் மாண்பைக் குலைப்பார்கள். மற்றவர்கள் மாண்பைச் சிதைப்பவர்கள் எப்படி ராமரின் பக்தராக இருக்க இயலும். நாங்கள் தான் அரசியல் சாசனத்தை மதிக்கத் தெரிந்தவர்கள். நாங்களே அடுத்தவர் மாண்பினை மதிப்பவர்கள். எனவே, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தான் ராமர் கோயில் கட்டப்படும்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும் போது”2025-ல் ராமர் கோயிலைக் கட்டும் பணியைத் தொடங்கும்போது நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும். 1952-ல் சோம்நாத் கோயில் கட்டப்பட்ட பின்னரே தேசத்தின்மேலும் படிக்க…


கூட்டமைப்புடன் எந்த இரகசிய உடன்பாடும் இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்பாடும் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பாக, நாம் நிபுணர்களின் அறிக்கையொன்றைத் தான் சமர்ப்பித்துள்ளோம். இன்னும் வரைபொன்றைக் கூட நாம் தயாரிக்கவில்லை. இது அரசியலமைப்பல்ல. அரசியலமைப்புச் சபைத் தான் அரசியலமைப்பை தயாரிக்கும் பணியை மேற்கொள்ளும். எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல, இது பின்கதவால் கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல. ஒற்றையாட்சி முறைமை மாறாது என்ற சரத்துக்கு இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழ்த் தரப்பினர் ஆதரவு வழங்கியுள்ளனர். இதில், ஏக்கிய எனும் பதம் மூன்று மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்படாது அவ்வாறு இடம்பெறும். அதேபோல், பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்தக்மேலும் படிக்க…


கூட்டமைப்பின் நடவடிக்கைகள் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றன: கெஹலிய

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என கூட்டமைப்பினர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற குழப்ப நிலையையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியினருடன் சில உடன்பாடுகள் எட்டப்பட்டதாக சுமந்திரனே பகிரங்கமாக இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.  அமைச்சரவையின் முடிவுகளை எடுக்கும் முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்துரையாட வேண்டும் என்று நாடாளுமன்றிலும், வெளியிடங்களிலும் அவர் தெரிவித்து வருகிறார். இதற்கு அரசாங்கத்தரப்பிலிருக்கும் ஒருவர் கூட இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவ்வாறுமேலும் படிக்க…


இந்தியன் 2’ படப்பிடிப்பிற்கு இந்தியன் தாத்தாவாக வந்தார் கமல்ஹாசன்!

லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கும் கமல்ஹாஷனின் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது. குறித்த படத்தின் பூஜையின் போது கமல்ஹாசன், இந்தியன் முதல்பாகத்தில் தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றிருந்தார். இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று பூஜையுடன் படத்தின் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் பிரமாண்டத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் நிறுவுனர் அல்லிராஜா சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் எனப் பலரும் கலந்துகொண்டனர். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பதுடன், ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.


முல்லைத்தீவு முள்ளியவளை வடக்கு பகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 107 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள். 17.01.2019 அன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் முள்ளியவளை வடக்கு பொதுநோக்கு மண்டப கட்டிடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் றேகன்,கரைத்துறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் அமலன், லண்டனை சேர்ந்த கட்சி உறுப்பினர் பரமேஸ், கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சி உறுப்பினர் குகன்,இப் பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்,மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை  TRT வானொலியின் சமூகப் பணி வழங்கியிருந்தமை  குறிப்பிடத்தக்கதாகும்.


முல்லைத்தீவு வன்னி விளாங்குளம் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட வன்னிவிளாங்குளம்  பகுதியில்  தெரிவுசெய்யப்பட்ட 45  பாடசாலைமாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள்  17.01.2019 அன்று மு/வன்னிவிளாங்குளம் பாடசாலையின் மண்டப கட்டிடத்தில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில்  பாடசாலை அதிபர்  திரு  ஜெயமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை பிரானஸ் நாட்டைச் சேர்ந்த திருமதி அன்ரியம்மா குடும்பத்தினர் TRT வானொலியின் சமூகப்பணியின் ஊடாக பெரும்தொகை நிதியுதவிபுாிந்த அன்ரியம்மா குடும்பத்தினருக்கும்,ரீ.ஆா்.ரி வானெலிக்கும் அனைவரும் நன்றியை தொிவித்துக் கொண்டனா்.  


எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

எச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண், மதுரை ராஜாஜி அரச வைத்தியசாலையில் பெண் குழுந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) பிறந்த குறித்த குழந்தைக்கு தனியான விசேட பிரிவில் வைத்து வைத்தியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்றுடன் கூடிய இரத்தம் ஏற்றப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு, மதுரை அரச இராஜாஜி வைத்தியசாலையில், தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு நேற்று மாலை பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது. ஜனவரி 30ஆம் திகதி குழந்தைப் பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், நேற்று சுகப்பிரசவத்துடன் குழந்தைப் பிறந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அரச இராஜாஜி வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளதாவது, “குறித்த குழந்தை 1.75 நிறையை கொண்டுள்ளது. சாதாரணமாக ஒரு குழந்தைமேலும் படிக்க…


லைக்காவின் மற்றுமொரு பிரம்மாண்ட தயாரிப்பிற்கு பூஜை!

லைக்காவின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் தொடக்கவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்னையில் நடைபெற்றது. கடந்த 1996-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான ‘இந்தியன்’ படம் வசூலைக் குவித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2-வது பாகத்தை 22 வருடங்களுக்குப் பின்பு இயக்குநர் ஷங்கர் தற்போது இயக்குகிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். படத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்று பூஜையுடன் படத்தின் முதல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் நிறுவுனர் அல்லிராஜா சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் மற்றும் படக்குழுவினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


பிரித்தானிய கோமகன் பயணித்த வாகனம் விபத்து!

பிரித்தானிய எடின்பர்க் கோமகன் பிலிப் (வயது-97) பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும், இவ்விபத்தில் கோமகன் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. கோமகன் பயணித்த வாகனம் நேற்று (வியாழக்கிழமை) குயின்ஸ் சான்ரிங்கம் பகுதியில்  வீதியைவிட்டு விலகி விபத்திற்குள்ளாகியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்தையடுத்து வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது. அதன்படி, நடைபெறவுள்ள சபைக் கூட்டத்தின் பின்னர் இந்நடவடிக்கையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய, மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற தற்போதைய அதிகபட்ச வேக வரம்பை, 50 கிலோமீற்றராக குறைப்பதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், வேகக் கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் ஔிப்படக் கருவிகளும் வீதிகளில் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கொலம்பிய கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு!

கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 54 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். ஜெனரல் சன்டென்டர் பொலிஸ் கல்லூரியை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கல்லூரியின் சுவரில் மோதி வெடிக்க வைக்கப்பட்ட நிலையில் அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பயிலுனர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், குறித்த நபர் ஜோஸ் அல்டேமார் ரோஜாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த சாரதி சாம்பல் நிற நிஸான் ரக கார் ஒன்றை செலுத்தி வந்ததாகவும் அதில் 80 கிலோகிராம் உயர் தாக்கம் மிக்க பென்டோலைட் வெடிப் பொருட்கள் இருந்தாகமேலும் படிக்க…


கொங்கோ ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தாமதப்படுத்துமாறு வலியுறுத்தல்!

கொங்கோ ஜனநாயக குடியரசில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் இறுதி முடிவுகளை தாமதப்படுத்துமாறு ஆபிரிக்க ஒன்றியம் கொங்கோ அரசிடம் வலியுறுத்தியுள்ளது. ஒற்றுமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் பேன் ஆபிரிக்க அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இந்தநிலையில், கடந்த வாரம் கொங்கோ தேர்தல் ஆணையகம் வெளியிட்ட தேர்தல் முடிவுகள் தீவிர சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஆபிரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சி வேட்பாளர் பெலிக்ஸ் ஷிசேகெடிக்கு வெற்றியை அளித்துள்ள போதிலும், தற்போதைய அரச நிர்வாகத்தின் எதிர்ப்பாளரான மார்ட்டின் ஃபயூலு, தானே வென்றதாக வலியுறுத்துகிறார். எவ்வாறாயினும் இன்று மாலை அளவில் இறுதிப்படுத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் வௌியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம்

பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில் வசித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை (50). இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 16ம் திகதி 110 கிமீ வேகத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், செல்லத்துரையின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. புதிய வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதியில்லாத செல்லத்துரையின் குடும்பத்தினர், தங்குவதற்கு வேறு இடமின்றி அருகில் உள்ள சுடுகாட்டில் அமைந்துள்ள சமாதியில் வசித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி செல்லத்துரை கூறியதாவது; “கஜா புயல் எங்களுடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. வீட்டை இழந்த நாங்கள் சுடுகாட்டில் உள்ளமேலும் படிக்க…


சபரிமலை விவகாரம்: பாதுகாப்பு கோரிய பெண்களின் வழக்கு விசாரணை

சபரிமலைக்கு சென்ற இரு பெண்கள், தங்களுக்கு பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாமென உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக கடும் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல்படுத்தும் செயற்பாட்டில் கேரள அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா (வயது-44), பிந்து (வயது-42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பனை அண்மையில் வழிபட்டதுடன் இருவருக்கும் மாநில அரசு தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்கி வருகின்றது. இவ்வாறான சூழலிலும்கூட கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஆகையால் சபரிமலைக்குச் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கருதி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். குறித்தமேலும் படிக்க…


புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

  புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொற்றுப்பேற்றுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார். அதன்படி சமய வழிபாடுகளை தொடர்ந்து இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ஷ இன்று கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார்.. எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்ட போதிலும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை ஒப்படைக்காத நிலையில் புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்பதில் தாமதம் நிலவி வந்தது. அந்தவகையில், மஹிந்த தற்போது அலுவலகத்தை பொறுப்பேற்று கடமைகளை ஆரம்பித்தார்.


எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் – சிவாஜிலிங்கம்

ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுப்பதில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைசிறந்த தலைவராக விளங்கியதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கையில் 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து மிகப்பெரும் கடையடைப்பை முன்னெடுத்து வெற்றிக்கண்டவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவுதினம் நேற்று (வியாழக்கிழமை) யாழில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மறைந்த எம்.ஜி.ஆர், வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட எங்களுடைய தலைவர்கள் தங்கதுரை மற்றும் குட்டிமணி ஆகியோரது குடும்பங்களுக்கு, அப்போதைய பிரதமராகவிருந்த மறைந்த இந்திராகாந்தியின் பணிப்புரைக்கு அமைய, தமிழக அரசின் செலவில் தொடர்மாடி வீடுகளை அமைத்துக்கொடுத்தவர். அதுமட்டுமல்லாது தனது சொந்த பணத்தினை விடுதலை இயக்கங்களுக்கு அள்ளிக்கொடுத்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின்மேலும் படிக்க…


விடுதலை போராட்டத்திற்கு உரமூட்டியவர் எம்.ஜி.ஆர் – யாழ். மாநகர மேயர்

ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு உரமூட்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பல்வேறு கோணங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவுதினம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கண்டியில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் இந்தியாவிற்கு சென்று சினிமாவில் கால்பதித்ததோடு அரசியலிலும் கால்பதித்து வெற்றிக்கண்டார். அரசியலில்  மாற்றத்தை எற்படுத்தி, திராவிட முன்னேற்ற கழகத்தை அரசியல் நிலைக்கு ஏற்றிய ஜாம்பவான் என்ற பெருமை அவரையே சாறும். அதுமட்டுமல்லாது, தனது திரைப்படங்களினூடாக எவ்வாறு வாழ வேண்டுமென்பதை வாழ்ந்துக்காட்டியவர்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் பிரச்சினையில் கரிசனை கொள்ளாத அரசாங்கத்தை எதிர்ப்போம்: எதிர்க்கட்சி தலைவர்

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிக்காத அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க தயாராகவிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘நான்கு வருடங்களின் பின்னர் இன்று நாம் எதிர்க்கட்சியாக நாட்டு மக்களுக்கு சேவை வழங்கவுள்ளோம். இதுவரை காலமும் எதிர்க்கட்சி தலைவர் பதவி பிரதேச பிரச்சினைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இன்று முதல் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மலையகம் என நாட்டின் சகல பகுதி மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தவுள்ளோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளின் குறைகளைச் சுடடிக்காட்டி, மக்களுக்கு நியாயம் கிடைக்க எதிர்க்கட்சித் தலைவர் அவலுவலகம் அரப்பணிப்புடன் செயற்படும். சிங்கள, தமிழ்,மேலும் படிக்க…


இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை!

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, தூதுரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்பொன்றைச் சார்ந்த மயூரன் சதானந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கின் முறைப்பாட்டாளராக பல்லிய குருகே மற்றும் வினோத் பி பிரியந்த பெரேரா ஆகிய இருவரும் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கியே கழுத்தைமேலும் படிக்க…


லதா ரஜனிகாந்த் நேர்காணல்


Super Star Rajinikanth’s Speech | PETTA Audio Launch


ரயில் தண்டவாளத்தை ஒட்டகம் கடந்ததால் பிரான்சில் போக்குவரத்து தடை

வடமத்திய பிரான்சின் மெலுன் மற்றும் மொன்டாஜிஸ் நகரங்களை இணைக்கும் லைன் ஆர் ரயில் பாதையில் ஒட்டகம் ஒன்று கடந்து சென்றதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக தடைபட்டிருந்தன. அந்த பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அபூர்வமான வகையில் ஒட்டகம் ஒன்று கடந்து சென்றதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. குறித்த ரயில் மொன்டாஜிஸ் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென வேகம் கட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டதால் தாம் அதிர்ச்சியுற்றதாக பயணி ஒருவர் தெரிவித்தார். சில மணி நேரங்கள் போக்குவரத்து தடை நீடித்த நிலையில், அதற்குள் பல பயணிகள் இந்த சம்பவத்தை ஔிப்படம் எடுத்துள்ளனர். ரயில் பாதையை ஒட்டகம் வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையாளர் தேடப்பட்டு வருகிறார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !