Thursday, January 17th, 2019

 

சென்னையைச் சேர்ந்த 12 வயது குகேஷ் செஸ் கிராண்ட் மாஸ்டராகத் தேர்வு

சென்னையை சேர்ந்த 12 வயது மாணவர் குகேஸ் நாட்டின் மிக இளம் வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்று உள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் குகேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். 12 வயதில் இந்த பட்டத்தை பெற்றதன் மூலம் நாட்டிலேயே மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். மேலும் உலகிலேயே மிக இளைய வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதே தமது லட்சியமென கூறியுள்ளார்.


லஞ்சம் வாங்கிய புகாரில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் கைது!

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி லோதி சாலையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகார்களை அடுத்து, சிபிஐ விசாரணைக்கு அந்த ஆணையத்தின் தலைமை இயக்குநர் நீலம் கபூர் உத்தரவிட்டார். இதன் பேரில் கடந்த இரு மாதங்களாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டிருந்த சிபிஐ அதிகாரிகள், வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் டெல்லி லோதி சாலையில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஆணையத்தின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, ஆணையத்தில் ஒப்பந்த பணிகளை செய்த ஒப்பந்ததாரருக்கு கொடுக்க வேண்டிய 19 லட்ச ரூபாய்க்கு மூன்று சதவிகித தொகையை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து லஞ்சம் வாங்கியதாகமேலும் படிக்க…


குதிரைகளை நெருப்புக்குள் செலுத்தும் திருவிழாவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு!

ஸ்பெயின் நாட்டில் குதிரைகளை நெருப்புக்குள் செலுத்தும் திருவிழாவுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விலங்குகளின் புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாரின் நினைவாக ஜனவரி 16-ஆம் தேதி ஸ்பெயினின் சான் பர்த்தலோம் (San Bartolome) நகரில் விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா நடைபெறுகிறது. அப்போது சாலையில் நெருப்பை எரியவிட்டு அவற்றுக்கு நடுவே குதிரைகளை செலுத்திக் கொண்டு செல்கின்றனர். நெருப்பின் மூலம் விலங்குகள் சுத்தப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த திருவிழாவில் இந்த ஆண்டு 120 பேர் தங்கள் குதிரைகளுடன் கலந்துகொண்டனர்


சுவிட்ஸர்லாந்தில் இலங்கை பெண் மரணம்!

சுவிட்ஸர்லாந்தின் Adlikon – Regensdorf பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் செலுத்தி வந்த கார் கனரக வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் சர்வாணி சுரேஸ்குமார் 43 வயதுடைய பெண் ஒருவரே உயிரிந்துள்ளதுடன், 22 வயதான கனரக வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சுவிட்ஸர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் சூரிச் றேகன்ஸ்டோர்ப் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் எனவும் தெரிவிக்கப் படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  


இளம்பெண்கள் கொலை வழக்கில் இன்னொரு சுவிஸ் நாட்டவர் கைது!

ஸ்கேண்டினேவிய இளம்பெண்கள் இருவர் அட்லஸ் மலைப்பகுதியில் கொல்லப்பட்ட சம்பவத்தில், இரண்டாவது சுவிஸ் நாட்டவர் மொராக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய – சுவிஸ் இரட்டைக் குடியுரிமை கொண்ட அந்த நபர், Témara என்னுமிடத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக மொராக்கோ பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் கைது செய்யப்பட்ட நபருக்கு கொலையில் என்ன பங்கு என்பது இன்னும் தெரியவில்லை. அவரது கைது சம்பவத்தை உறுதி செய்துள்ள சுவிஸ் ஃபெடரல் பொலிசார், அவரை விசாரிப்பதற்கு தாங்கள் இதுவரை கேட்டுக் கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளதோடு, அந்த நபர் மொராக்கோவில்தான் வாழ்ந்து வந்துள்ளதாகவும், சமீப காலமாக அவர் சுவிட்சர்லாந்தில் வாழவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இவர், Marrakeshக்கு தெற்கே அமைந்துள்ள அட்லஸ் மலைப்பகுதியில் இறந்து கிடந்த டென்மார்க்கைச் சேர்ந்த மாணவியாகிய Louisa Vesterager Jespersen (24) மற்றும் நார்வேயைச் சேர்ந்த Maren Uelandமேலும் படிக்க…


ரொறான்ரோவில் விபத்து இருவர் காயம்.!

ரொறான்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது வடக்கு ரொறான்ரோ பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதியதாலேயே இந்த கோர விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஒன்ராறியோ மாகாணப் பொலிசார் தெரிவிக்கின்றனர். அத்துடன் காயமடைந்த நபர் 49 வயது மதிக்கதக்கவர் என்றும் பார்ரி பகுதியை சேந்தவர் எனவும் ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை மற்றைய வாகனத்தை செலுத்திய பெண் சாரதி சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ மாகாணப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


24 மணிநேரத்தில் மூன்றாவது காவல்துறை அதிகாரி தற்கொலை

நேற்று புதன்கிழமை BRF அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெறும் மூன்றாவது தற்கொலையாகும். முன்னதாக Haÿ-les-Roses (Val-de-Marne) இல் பணிபுரியும் BAC அதிஜாரி ஒருவர் சேவைத்துப்பாக்கியினை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டிருந்தார். அவரின் சடலம் Essonne இல் உள்ள அவரது வீட்டில் இருந்து மீட்கப்படிருந்தது. அதன் பின்னர் மேலும் ஒரு அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில்,  தற்போது மூன்றாவது அதிகாரியும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த மேலதிக தகவலகள் எதுவும் வெளியாகவில்லை. என்றபோதும், அதிகாரி 37 வயதுடையவர் எனவும், BRF பிரிவைச் சேர்ந்தவர் எனவும், சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேமரூனில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 36 பயணிகளும் விடுவிப்பு

கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பயணிகள் 36 பேரும் விடுவிக்கப்பட்டனர். மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில், பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் தடுத்து நிறுத்தியது. அதில் 36 பயணிகள் இருந்தனர். அவர்களின் அடையாள அட்டைகளை பறித்த அந்த கும்பல், அனைவரையும் கீழே இறக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. பேருந்து டிரைவரை, கும்பா பேருந்து நிலையத்திற்கு திரும்பி செல்லும்படி, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டி அனுப்பி உள்ளனர். பேருந்து டிரைவர் கொடுத்த தகலின் அடிப்படையில் கடத்தப்பட்ட பயணிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று, நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்து அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். ஆனால், கடத்தப்பட்டவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடத்தப்பட்ட 36 பேரும் மறுநாள், அதாவதுமேலும் படிக்க…


கென்யாவில் ஓட்டல் மீது தாக்குதல்- உயிரிழப்பு 21 ஆக உயர்வு

கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தினர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தியதால், பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடி ஆங்காங்கே பதுங்கினர். தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. பயங்கரவாதிகள் தாக்குதலை அடுத்து, அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் சுற்றி வளைத்ததும், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர். சுமார் 20 மணி நேரம் நடந்த இந்த சண்டை நேற்று காலை முடிவுக்குமேலும் படிக்க…


மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் முயற்சி – பா.ஜ.க. சாடல்

மக்களை திசைதிருப்ப காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பா.ஜ.க. குற்றம் சுமத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி குறித்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. நினைக்கவில்லை. ஒபரேஷன் தாமரையும் நடக்கவில்லை. ஆனால் மக்களை திசைதிருப்பவும், பா.ஜ.க.வுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தவும், சட்டமன்ற உறுப்பினர்களை கைப்பற்றவும் காங்கிரஸ் கட்சியினர் பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுகின்றனர். எங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் தங்கியுள்ளனர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இல்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டு கூறுவது தவறான விடயம்’ என குறிப்பிடப்பட்டுள்ளார். பா.ஜ.க. மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை, முதலமைச்சர் குமாரசாமி கைப்பற்ற முயற்சிப்பதாக கூறி,  பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த 3 நாட்களாக டெல்லிமேலும் படிக்க…


புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆரம்பம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பித்துள்ளன. குறித்த போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று, வீரர்கள் ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழியெடுத்தனர். அதன்பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொடியசைத்து திறந்து வைத்துள்ளார். அதன்படி, முதலில் கோயில் காளைகளும், பின்னர் ஏனைய காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. ஒரு மணிநேரத்திற்கு 75 பேர் என்ற வீதத்தில் மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டுவருகின்றனர். இந்த போட்டி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளதுடன், இதில் 1400 காளைகள், 848 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். பாதுகாப்பு பணியில் 1500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் மாடுகளின் பாதுகாப்பிற்காக 10 வைத்தியர்கள் அடங்கிய 13 மருத்துவக்குழுக்களும், 15 எம்புலன்ஸ்மேலும் படிக்க…


பலாலி இராணுவ முகாமில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை

யாழ்ப்பாணம் பலாலி இராணுவ முகாமில் இராணுவ பயிற்சிக்கு வந்த இளைஞர் தொலைத் தொடர்பு கேபிளினால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்த என்.ஜி. வை. ஆரியரட்ண (வயது 22) என்ற இளைஞரே இராணுவ முகாமில் உள்ள மரமொன்றில் நேற்று (16) மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பலாலியில் அமைந்துள்ள இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த நிலையில் நேற்று மாலை பயிற்சி முகாமில் உள்ள மரமொன்றில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்தமைக்கான காரணம் தெரியவில்லை. சடலம் தொடர்பான விசாரணைகளை பலாலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாலி இராணுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


தேர்தல் ஆணைக் குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்று (16) எழுத்து மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அதேநேரம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக பாராளுமன்றத்தில் விரைவான தீர்வுக்கு வருமாறு தேர்தல் ஆணைக்குழுவால் அந்த கடிதம் மூலம் ​கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவில் நடந்த அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சிறைக்கைதிகள் மீதான தாக்குதல்: விசாரணைக்குழு விரைந்தது!

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, விசாரணைக்குழு அங்கு செல்லவுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குறித்த குழு இன்று (வியாழக்கிழமை) அங்கு செல்லவுள்ளது. கைதிகள் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளியொன்று அண்மையில் வெளியாகியிருந்த நிலையில், அது தொடர்பில் பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கைதிகள் முழந்தாளிடப்பட்டு, பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி தாக்குவதும், முழந்தாளிலேயே செல்லுமாறு பணிப்பதும் அந்த காட்சியில் தெளிவாகியுள்ளது. இந்நிலையில், நீதியமைச்சர் தலதா அத்துகோரளவினால் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. குறித்த குழு அங்கு சென்று மேலதிக விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.


இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இணக்கம்

இலங்கையுடன் விரிவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள தமது நாடு எதிர்பார்ப்பதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸுக்கான நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை)  இடம்பெற்றது. அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  இரு நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக வலியுறுத்தியுள்ளார். அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் சவால்கள் பொதுவானதாகும் எனத் தெரிவித்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினையாக காணப்படும் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் போன்ற சவால்களிலும், சர்வதேச மட்டத்திலும் இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பிலிப்பைன்ஸ் தயாராகவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்திற்கு மைத்திரி விஜயம்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்யவுள்ளார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது முக்கிய ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளார். நேற்று முன்தினம் பிலிப்பைன்ஸை சென்றடைந்த ஜனாதிபதி, நேற்று அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அத்தோடு, ஐந்து ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


நல்லூரில் சிலப்பதிகார விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா நாளை(18.01.2019) வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை மாலை அமர்வுகளாக நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.


MGR ரசிகர்கள் முன்னால் நடிகை லதா – சங்கர் கணேஷ்


எம்.ஜி.ஆர்-ன் அண்ணன் மகளுடன் சிறப்பு நேர்காணல்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !