Thursday, January 10th, 2019

 

ஜேர்மனியில் அதிக பனிப்பொழிவு – அவசர நிலை அறிவிப்பு

தெற்கு ஜேர்மனியில் உள்ள பவேரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தில் அதிக பனிப்பொழிவு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பவேரியாவில் உள்ள பெர்செத்ச்கேடென் என்றநகரில், பனிமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதியின் பல இடங்களிலும் பனிமலை சூழ்ந்துள்ளது. மேலும் பனிப்படிவுகள் பாரிய அளவில் உள்ளதால், அந்த நகரத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது. அத்தோடு ஒஸ்திரியாவின் சல்ஸ்பர்க்கின் தெற்குப் பகுதியும் பெரும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இன்று (வியாழக்கிழமை) மேலும் அரை மீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இருந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 2006 ஆம் ஆண்டு கூரை மீது கடுமையான பனி சூழ்ந்து பின்னர் அது உடைந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தமையும் அவர்களில் பன்னிரண்டு குழந்தைகள் உள்ளடங்குகின்றமையும்மேலும் படிக்க…


இலங்கையில் ஜனநாயகம் தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்தாக உள்ளது – அனந்தி

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளதென வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “எங்கள் இனத்தின் மீதான படுகொலைகளின் நினைவேந்தல்களை அனுஸ்டிக்க தடைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. இந்த படுகொலை நடைபெற்று 45 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் அதற்கு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் என்றோ ஒரு நாள் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பி அதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கேமேலும் படிக்க…


முல்லைத்தீவில் இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களால் முறியடிப்பு!

இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி முல்லைத்தீவு மக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அலம்பிலில் நில அளவீட்டிற்கு சென்ற அதிகாரிகள் பிரதேச மக்களின் எதிர்ப்பினையடுத்து திரும்பிச் சென்றுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள 5 ஏக்கர் தனியார் காணியில், ஒரு பகுதியில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ளதுடன், காணியின் மற்றுமொரு பகுதியில் இராணுவ முகாம் காணப்படுகின்றது. இந்நிலையில், குறித்த காணியை இராணுவத்திற்கு வழங்கும் முகமாக இன்று (வியாழக்கிழமை) நில அளவை இடம்பெறவிருந்தது. இதற்காகச் சென்ற நில அளவையாளர்களும் உத்தியாகத்தர்களும் பிரதேசவாசிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியாரின் எதிர்ப்பினால் திரும்பிச்சென்றனர். குறித்த காணியில் இறந்தவர்களுக்கான நினைவிடமே அமையவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஹிஸ்புல்லாவுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு – முக்கிய விடயங்கள் ஆராய்வு

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடிய இரா.சம்பந்தன், சட்டத்திற்கும் நீதிக்கும் முரணான சம்பவங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுவதனை ஆளுநர் அனுமதிக்க கூடாது எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன் முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனையுடனான முடிவுகள் எட்டப்படுவதானது தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் என தெரிவித்தார். மேலும், அரச நிர்வாக நியமனங்கள் வழங்கப்படும்போது அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுதல், கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் வாழும் பல்லின மக்களிடையே காணப்பட்ட இன விரிசல்களை இல்லாமல் செய்வதற்கு உதவும் எனவும் தெரிவித்தார். அனைத்து இன மக்களின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஆளுநரும் அவரது நிர்வாகமும் செயற்படவேண்டும் எனமேலும் படிக்க…


படுகொலை நினைவேந்தல்கள் எமது உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமைய வேண்டும் – சுரேஷ்

தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமைய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மோசமான அடக்குமுறைக்குள், உலக தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வெளிநாட்டவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு அது கோலாகலமாக நடைபெற்றது. அதனை இலங்கை அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனாலே விழாவின் கடைசி நாளன்று பொலிஸார் தேவையற்ற விதத்தில் அதற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்மேலும் படிக்க…


இராசதுரை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதுடன், அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர்.மேலும் படிக்க…


முதலாவது வடக்கு மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள் கௌரவிப்பு

முதலாவது வடக்கு மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாகாண சபையில் நடைபெற்றது .மாகாண சபையின் பேரவைச் செயலக மாநாட்டு மண்டபத்தில் பேரவைத் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது மாகாண சபையின் கீதத்தை உருவாக்கிய அனைத்துக் கலைஞர்களும் பொன்னாடை போர்த்தியும் மாலை அணிவித்தும் நினைவுப் பரிசுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பத்திநாதன், முன்னாள் பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன் , முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, மாகாண  முன்னாள் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகள் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


ஜேர்மன் விமான நிலைய ஊழியர்கள் பணிநிறுத்தம் – 600 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ஜேர்மனிய விமான நிலையங்களில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்களின் பணிநிறுத்தப் போராட்டம் காரணமாக சுமார் 643 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துமாறு விமான நிலைய நிர்வாகங்களை வலியறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக ஜேர்மனியின் டஸ்ஸல்டோப், க்ளோங் மற்றும் ஸ்டட்காட் ஆகிய விமான நிலையங்களிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தமாக திட்டமிடப்பட்ட 1054 விமான பயணங்களில் 643 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன. அந்த விமான நிலையங்கள் ஒவ்வொன்றினதும் நாளாந்த பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 115,000 என்பதுடன் பிரதான பரிசோதனை மையங்களில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜேர்மனியில் உள்ள 23,000 பாதுகாப்பு பணியாளர்களிடமும் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெர்டி பொதுத் துறை ஒன்றியம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 23மேலும் படிக்க…


ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் சன்மானம் – ஜப்பான்

ஜப்பானில் பாரியளவில் வீழ்ச்சி கண்டு வரும் சனத்தொகையை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், மக்கள் தொகையைப் பெருக்கும் முயற்சியாகவும், ஐந்தாவது குழந்தையை பெற்றுக் கொண்டால் 2 லட்சம் ரூபா பெறுமதியான நிதியுதவி வழங்கப்படும் என்று ஜப்பானிய நகரம் ஒன்றில் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. சீனா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் பூதாகரமாக நிலவி வரும் பிரச்சினைகளில் மக்கள் தொகைப் பெருக்கம் பாரிய இடத்தை வகிக்கின்றது. ஆனால் இதற்கு நேர் எதிராக மக்கள் தொகை குறைந்து வருவதால் ஜப்பான் நாடு பெரும் அதிருப்தியில் உள்ளது. உலகில் உள்ள நாடுகளில் கடந்த 1970 களில் இருந்த மக்கள் தொகையை விட ஜப்பானிலேயே சனத்தொகை சடுதியாக குறைந்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சமாகும். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளதாகமேலும் படிக்க…


சவுதியின் இளம் புகலிடக் கோரியாளரின் வழக்கை தீர்மானிக்க காலக்கெடு இல்லை – அவுஸ்ரேலியா

தாய்லாந்து விமான நிலையத்தில் வைத்து குடும்பத்தை விட்டு தப்பி வந்து அவுஸ்ரேலிய புகலிடக் கோரிக்கையை பெறும் நோக்கில் அங்கு சென்ற இளம் பெண் தொடர்பான வழக்கை விசாரிக்க காலக்கெடு எதுவும் இல்லை என்று அவுஸ்ரேலிய வௌிவிவகார அமைச்சர் மாரிஸ் பைனே தெரிவித்துள்ளார். சவுதி பெண்மணியான ரஹஃப் மொஹம்மட் அல்-ஹூனன் என்பவர் மிக அச்சத்துடன் இருப்பதாகவும், மதம் மாறியதன் காரணமாக தனது குடும்பத்தினர் தன்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறினார். ஐ.நா, அகதிகள் மீள்குடியேற்றத்திற்கான முகவரகத்தின் கருத்தின்படி, ஹூனான்னை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைத்து அங்கு குடியுரிமை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பெங்கொக்கில் வைத்து அவர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளதுடன், ஹூனான் அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோருவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்ட பயணத்தையே அவர் தற்போது மேற்கொண்டுள்ளார். ஹூனன் தற்போது யூ.என்.எச்.சீ.ஆரின் பாதுகாப்பில்மேலும் படிக்க…


ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்களை அ.தி.மு.க.வே தண்டிக்கும் – ஜெயகுமார்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை அ.தி.மு.க. அரசே தண்டிக்கும் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது. அவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களை காட்டிலும் அதிக அக்கறை எங்களுக்கு உண்டு. யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்“ என தெரிவித்துள்ளார்.


மன்னார் மனித புதைகுழி விவகாரத்தில் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்: டக்ளஸ்

மன்னார் மனித புதைகுழி விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மன்னார் புதைக்குழி விவகாரம் வெறும் கண்காட்சியாகிவிடாது, உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமாத்திரமின்றி அங்கு புதைக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களின் மரணங்கள் ஆராயப்பட்டு, குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி. மன்றில் வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”நாடு என்ற வகையில் நாம் மனித உரிமைகளைப் பாதுக்காக்கவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை. நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறையில் இருந்ததை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இன்று யுத்தம் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்து விட்டன. தற்போதும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. ஆனால் அரசாங்கம் அதனை நீடித்து தன், அடக்கு முறைகளுக்கு பயன்படுத்துகிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் விசாரணைகள் இன்றி வருடக்கணக்கில் சிறையில் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள்மேலும் படிக்க…


அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தல் ஒரே தினத்தில் – சம்பிக்க

மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்பதே தற்போது காணப்படும் பிரச்சினையாகும். இந்த விடயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து அது குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றி ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஜனநாயக விரோத அரசுக்கு எதிராக செயற்பட்ட சிவில் சமூக அமைப்புக்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சிகள் ஒன்றிணைந்து இது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். ஒன்றில் புதிய முறையுடன் விகிதாசார முறைமையும் உள்ளடக்கி தேர்தலை நடத்த வேண்டும். அல்லது பழைய முறையில் தேர்தலை நடத்த வேண்டும். இவை இரண்டில் ஒன்றையேனும் பின்பற்றி விரைவில் ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் காட்சி வெளியீடு – அஜித் ரசிகர்கள் மோதல்!

அஜித் நடிப்பில் இன்று (வியாழக்கிழமை) வெளியாகி இருக்கும் விஸ்வாசம் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்ற அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு ரசிகர்கள் திரையரங்க்குள் சென்ற போது, வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்தவர் பிரசாத் (வயது 20). இவரது உறவினர் ரமேஷ் (30) இருவரும் அஜித் ரசிகர்கள். பிரசாத்துக்கும் மற்றொரு தரப்பில் வந்த அஜித் ரசிகர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கொபம்மடைந்த அந்த கும்பல் கத்தியால் பிரசாத், ரமேஷ் ஆகியோரை தாக்கினர். இதனால் திரையரங்குகளில் கடும்பதட்டம் ஏற்பட்டது. காயமடைந்த 2 பேரையும் பொலிஸார் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையலி, கத்தியால் குத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பொலிஸார் மேலதிகமேலும் படிக்க…


சிறுவர்களுக்கு இலவச போக்குவரத்து! – பரிஸ் நகர சபை அறிவிப்பு

பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவச போக்குவரத்து வழங்கப்பட உள்ளதாக பரிஸ் நகர சபை அறிவித்துள்ளது. நான்கு தொடக்கம் 11 வயதுடைய மாணவர்களுக்கு பரிசுக்குள் பயணப்பட இலவச பயணச்சிட்டைகளும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இந்த திட்டம் 20 வயது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் புதிய திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை இத்தகவலை பரிஸ் நகர சபை அறிவித்துள்ளது. அதேவேளை, உயர்கல்வி மாணவர்களின் மாதாந்த நவிகோ அட்டையில் 50% வீத விலைக்கழிவும் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 14 தொடக்கம் 18 வரை வயதுடையவர்களுக்கு இலவச Vélib சேவைகளும் வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 2019 இல் இருந்து இந்த புதிய வசதிகள் நடைமுறையில் இருக்கும். செப்டம்பரில் இருந்து வருட முடிவு வரையான பகுதிக்கு இந்த சேவைகளுக்கு 5 மில்லியன் யூரோக்களும், அதன் பின்னர் வருடத்துக்கு 15 மில்லியன் யூரோக்களும் இந்தமேலும் படிக்க…


மனித கடத்தல்கள் அதிகரிப்பதாக ஐ.நா கவலை!

உலகளாவிய ரீதியில் மனித கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மனிதக் கடத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகள் அவர்களது பொருளாதாரத் தேவைகளுக்காக பெண்களையும், குழந்தைகளையும் கடத்துகின்றனர். மேலும் உடல் உறுப்புகளைத் திருடுவதற்காக கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகின்ற்ன. கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகப் போதிய நடவடிக்கைகள் எடுக்காத நாடுகளில் தொடர்ந்து கடத்தல் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. கடந்த 7 ஆண்டுகளில் கடத்தல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் 2016-ம் ஆண்டில் கடத்த 13 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்தில் மனித உரிமை மீறல் தடுப்புச் சட்டம் பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கடத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும்மேலும் படிக்க…


சீனாவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் கல்லறைகள்!

சீனாவிலுள்ள பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் பழைமையான கல்லறைகள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்சீனாவின் குவாங்டோங் மாகாண குவாங்ஷோ நகரில் அமைந்துள்ள சண்-யட்-சென் பல்கலைக்கழக வளாகத்தில் இவ்வாறு 13 பழைமையான கல்லறைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்தோடு 37 பண்பாட்டு சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சீன மொழியில் சோங்ஷான் பல்கலைக்கழகம் என்று அறியப்படும் சண்-யாட்-சென் பல்கலைக்கழகம் சீனப் புரட்சியின் பெரும் தலைவர்களில் ஒருவரால் 1924ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1950 மற்றும் 1980களில் இரண்டு மாகாண அகழ்வுகளைத் தொடர்ந்து, வளாகத்தின் ஒரு பகுதியானது நிலத்தடி தொல்பொருளியல் நினைவுச்சின்னங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டது. அதன் காரணமாக நிர்மாணிப்பதற்கு முன்பாக குறித்த பகுதியில் ஒரு அகழ்வு தேவைப்பட்டது. ஆதன்படி கடந்த நவம்பர் மாதம் அகழ்வுப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போதே கல்லறைகளும், அற்புதமான வரலாற்றுச் சின்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் தகவல்களின் பிரகாரம், சீன வரலாற்றில்மேலும் படிக்க…


யுத்தத்தில் பங்கெடுத்தவர்கள் விசாரணையில் மத்தியஸ்தம் வகிக்க முடியாது: சுமந்திரன்

உள்நாட்டு யுத்தத்தில் பங்கெடுத்த தரப்பாக இலங்கை உள்ள நிலையில், அதில் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணையில் மத்தியஸ்தம் வகிக்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு இடம்பெறுமாயின் அது சுயாதீனமாகவும் நேர்மையானதாகவும் அமையாதென சுட்டிக்காட்டிய சுமந்திரன், சர்வதேச பொறிமுறையே அவசியம் என வலியுறுத்தியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில், குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சுமந்திரன் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளார். சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை செய்தால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுமென சிலர் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டிய சுமந்திரன், சர்வதேச நியமங்களுடன் இலங்கை ஒத்துப்போகின்றதென குறிப்பிட்டார். அவ்வாறு இருக்கும்போது சர்வதேச விசாரணையால் இலங்கையின் இறைமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென மேலும் தெரிவித்தார். இலங்கையில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் யாவும் கண்துடைப்புக்காகவே இடம்பெற்றதென்றும், குற்றமிழைத்தவர்கள் நீதிக்கு முன்மேலும் படிக்க…


சர்வதேச தலையீட்டின் மூலமே தமிழர்களுக்கு தீர்வு!- சிவாஜிலிங்கம்

சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியப்படும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதின நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதேபோல இலங்கை அரசாங்கம் செய்த இனப்படுகொலைகளுக்கும் இதுவரை நீதி கிடைக்கவில்லை. இன்று அரசியல் தீர்வு கேள்விக்குறியாக உள்ள நிலையில் சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே நாமும் அரசியல் தீர்வை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்பட வேண்டும் அதனை நாம் வென்றெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் – போலீசார் மோதலில் 18 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 8 போலீசார் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, நாட்டின் வடபகுதியில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் தக்கார்  மாகாணத்துக்குட்பட்ட காஜா கர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டேப்பா என்ற இடத்தில் காவல்துறை சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில்  சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் உயிரிழந்தனர்.மேலும் படிக்க…


ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்கிறேன். சில பொருட்களுக்கு வரி குறைப்பு, வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். ஜி.எஸ்.டி. தொகையினை மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது. அதனை தரவேண்டும் என்று வலியுறுத்துவேன். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ளது. அதில் எந்த ஒரு குறைவும் வராதமேலும் படிக்க…


மாறுவேடத்தில் வந்த போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் – வாகன சோதனையில் ருசிகர சம்பவம்

போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாறுவேடத்தில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் உள்ள தகவலை தெரிந்து கொள்ளலாம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பதி (வயது 47). இவர் சத்தியில் இருந்து பண்ணாரி, திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் லாரிகளை வாகன சோதனை செய்வது போல் தடுத்து நிறுத்தி டிரைவர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு வந்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதியை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் திட்டமிட்டார்கள். அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 2 பேர் டிரைவர், கிளீனர் போல் மாறுவேடத்தில் நேற்று முன்தினம் இரவு லாரியில் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி சென்றார்கள். அப்போது சிக்கரசம்பாளையம் அருகே அந்த போலீஸ்மேலும் படிக்க…


சிறையில் 1299 மரண தண்டனை கைதிகள்

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிவரை நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன் முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ள கைதிகள் என 1299 பேர் இருக்கின்றனர் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 1215 ஆண்களும் 84 பெண்களும் அடங்குகின்றனர். மேலும் மரணதண்டனை விதிக்கப்பட்ட 1299 கைதிகளில் 784 ஆண் கைதிகளும் 34 பெண் கைதிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்திருக்கின்றனர். அதன் பிரகாரம் நிரந்தரமாக மரண தண்டனை விதிக்கப்பட்ட 476கைதிகள் சிறைச்சாலைகளில் இருக்கின்றனர். அவர்களில் ஆண் கைதிகள் 426 பேரும் பெண் கைதிகள் 50பேரும்  அடங்குவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.


“சிறுநீரகம், உடல் உறுப்புக்களை வேறொருவருக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம்”

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சுக்கும் இலங்கை விமானப் படைக்குமிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் சுகாதாரம், போஷனை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப் பட்டோரின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம்

4வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது ஏற்பட்ட அசம்பாவீதத்தால் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் 11 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்க ப்பட்டுள்ள நினைவு தூபியில் இன்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.


வடக்கின் புதிய ஆளுநர் இரணைமடு நீர்த்தேக்கத்திற்கு திடீர் விஜயம்

கிளிநொச்சி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ள வடக்கு ஆளுநர்  கலாநிதி சுரேன் ராகவன் இன்று(10)நண்பகல் இரணைமடு நீர்தேக்கத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது இரணைமடு நீர்தேக்கத்தின் வான்கதவுகளில் சில குறைபாடுகள் உள்ளதாகவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகள் சரியான கண்காணிப்புக்களை மேற்கொள்ளாது அசமந்தப்போக்குடன் செயற்படுவதாகவும் அதனாலேயே அண்மையில் கிளிநொச்சி மக்கள் பாரிய அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாகவும் மக்களிடமிருந்து கிடைத்திருந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர்  இதுதொடர்பில் உடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார். இரணைமடு நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பில்  கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டிய இரு நிறுவனங்கள் இன்னமும் இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதனை அறிந்துகொண்ட ஆளுநர்  சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக தொடர்புகொண்டு உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அத்தோடு ஐந்துமேலும் படிக்க…


Difference between Ilaiyaraja, A.R.Rahman – An Exclusive Interview With Dr K.J. Yesudas


பத்மஸ்ரீ K.J.யேசுதாஸ் அவர்களுடனான நேர்காணல்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !