Tuesday, December 25th, 2018

 

திருப்பதியில் தேங்கியுள்ள 52 டன் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் திணறல்

தேங்கி கிடக்கும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் திணறி வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்கள், தங்கம், வெள்ளிப்பொருட்கள், செல்போன் உள்பட பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்திய ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கோவிலுக்குப் பின் பக்கமுள்ள, ‘‘பரகாமணி சேவா குலு’’ அறையில் உடனுக்குடன் எண்ணப்படுகின்றன. இந்தியா மற்றும் வெளிநாட்டு சில்லரை நாணயங்கள் மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை மூட்டைகளில் கட்டி, வாகனங்களில் திருமலையில் இருந்து திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கு, இந்திய சில்லரை நாணயங்கள் எண்ணப்படுகின்றன. வெளிநாட்டு சில்லரை நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் எண்ணப்படாமல் தேங்கி கிடக்கின்றன. அந்த நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் கோணிப்பைகளில்மேலும் படிக்க…


இந்தோனேசியா சுனாமி பலி எண்ணிக்கை 429 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா பகுதிகளை தாக்கிய சுனாமி பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா நாட்டின் மேற்கு ஜாவா தீவில்  உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை கடந்த 22-ம் தேதி இரவு வெடித்து சிதறியது. எரிமலையில் இருந்து கரும்புகையும், நெருப்புக் குழம்பும் வெளியானது. இதனால், அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். சுனாமி தாக்குதலில்மேலும் படிக்க…


பி.எம்.டபுள்யூ. நிறுவனத்துக்கு ரூ.99 லட்சம் டாலர்களை அபராதமாக விதிக்கும் தென்கொரியா

பிரபல கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ-க்கு ரூ.99 லட்சம் டாலர்களை அபராதமாக விதிக்க தென்கொரிய அரசு முடிவு செய்துள்ளது. தென்கொரியாவில் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சுமார் 40 கார்களில் தீப்பிடித்து எரிந்தது. இந்த ஆண்டு முழுக்க பி.எம்.டபுள்யூ. விற்பனை செய்த கார்களில் கோளாறு இருந்து வந்தது. இது தொடர்பாக தென்கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு நடத்த முடிவு செய்தது. ஆய்வில் காரில் உள்ள இ.ஜி.ஆர். எனும் பாகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனங்களில் தீபிடித்து எரிந்ததும், பிரச்சனையை மூடி மறைக்க பி.எம்.டபுள்யூ. நிறுவனம் முயற்சித்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பி.எம்.டபுள்யூ. கார்களின் இ.ஜி.ஆர். (எக்சாஸ்ட் கியாஸ் ரீசர்குலேஷன்) பாகத்தில் கண்டறியப்பட்ட கோளாறு, கார் தொடர்ச்சியாக அதிவேகத்தில் இயக்கப்படும் போது, தீப்பிடிக்க காரணமாக அமைந்தது. கார்களில் ஏற்பட்ட கோளாறை விரைந்து சரி செய்யாத காரணத்தால் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்திற்கு சுமார் ரூ.99 லட்சம் டாலர்கள் அபராதம்மேலும் படிக்க…


மெக்சிகோ புவெப்லாவின் முதல் பெண் ஆளுநர் விமான விபத்தில் உயிரிழப்பு!

மெக்சிகோவின் புவெப்லா மாநிலத்தின் முதலாவது பெண் ஆளுநரான மார்தா எறிகோ அலொன்சோ விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். புவெப்லா மாநிலத் தலைநகரில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விபத்தில் அவரும் அவரது கணவரான செனட் சபை உறுப்பினரான ரஃபேல் மோரேனோ வால்லேவும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 45 வயதான அலொன்சோ கடந்த 14ஆம் திகதி புவெப்லா மாநிலத்தின் முதலாவது பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், வெறும் பத்து தினங்கள் மாத்திரமே தனது பதவியில் சேவையாற்றிய நிலையில் நேற்று விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பை மெக்சிகோவின் புதிய ஜனாதிபதியான ஆன்ட்ரெஸ் மனுவெல் லோபஸ் ஒபடோர் உறுதிபடுத்தியுள்ளார். இந்நிலையில், அவர்களது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்ட ஜனாதிபதி, விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அவர் பணித்துள்ளார். விபத்தில் விமானியும் உயிரிழந்துள்ளாரா என்பது இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம்: பிரதமர் நெதன்யாஹு அறிவிப்பு

இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைத்து முன்கூட்டிய தேர்தலை நடத்துவதற்கு, பிரதமர் பென்சமின் நெதன்யாஹு தீர்மானித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அங்கத்தவர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நெதன்யாஹு இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். தீவிர கட்டுப்பாடுடைய யூதர்களை இராணுவத்தில் இணைப்பதை இலக்காக கொண்ட சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்றுவதற்கு தேவையான ஆதரவை பெறுவதில் ஆளும் கட்சி தோல்வியடைந்த நிலையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 120 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 61 ஆசனங்களுடன் பெரும்பான்மையை நிரூபித்து நெதன்யாஹு நான்காவது முறையாக பிரதமராக சேவையாற்றி வருகிறார். இந்நிலையில், அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் தன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படின் பதவி விலகுவதுமேலும் படிக்க…


வடகொரியாவிடம் அமெரிக்கா நட்டஈடு!

அமெரிக்க கல்லூரி மாணவன் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக 501 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக செலுத்துமாறு, வடகொரியாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவனின் பெற்றோர் வடகொரியாவிற்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு கொலம்பிய மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு வடகொரியாவே பொறுப்பு கூற வேண்டும் என நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவை பலப்படுத்தும் நோக்கிலான சந்திப்புகள் இடம்பெற்று வருகின்ற முக்கிய தருணமொன்றில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. 22 வயதான அமெரிக்க கல்லூரி மாணவனான ஒட்டோ வாம்பியர் வடகொரிய சிறையிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்படும் போது கோமா நிலையிலிருந்த மாணவன், விடுவிக்கப்பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்தார். ஒக்சீசன் மற்றும்மேலும் படிக்க…


சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இனம் மற்றும் மதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களின் காரணமாகவே பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெறுகின்றன. ஆகையால் அவற்றை தடுக்கும் நோக்குடனே சட்ட விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக அவ்வமைச்சு சுட்டிகாட்டியுள்ளது. அந்தவகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் விரைவாக திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதுடன் அதனை இணைத்தளத்தில் வெளியிட்டு, மக்களின் கருத்தினை 15ஆம் திகதிக்குள் பெற்றுகொள்ளவுள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த விடயத்தில்  மக்களின் கருத்தின் அடிப்படையில் இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


தேர்தலை நடத்தாத தமிழக அரசாங்கத்தை ஆளுநர் கலைக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ்

உள்ளூராட்சி தேர்தலை நடத்தாத தமிழக அரசாங்கத்தை ஆளுநர் கலைக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். திண்டுக்கலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழகத்தில் வெற்றிடமாகவுள்ள 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துகின்றது. மேலும், மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 6 ஆயிரம் கோடி இந்திய ரூபாயை இதனால் நிறுத்தி வைத்துள்ளது. ஆகையால் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசாங்கத்தை கலைத்து விட்டு, உள்ளூராட்சி தேர்தலை நடத்தலாம். இதேவேளை உள்ளூராட்சியில் பிரதிநிதிகள் இல்லாததால்தான் சில பகுதிகளில் கஜா புயல் மீட்பு பணிகள் தாமதமடைகின்றன” என அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் – சுகிர்தன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இவ்வாறு காணிகளை விடுவிப்பதன் மூலமாக மீள்குடியேற்றம் முழுமையடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி விடுவிப்புத் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் 2018 ஆம் ஆண்டு அதாவது இந்த வருட இறுதிக்குள் முழுமையாக விடுவிக்கப்படுமென ஐனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் தற்போதும் பல ஆயிரக்கணக்கான பொது மக்களின் காணிகள் படையினர் வசம் உள்ளன. அவற்றில்மேலும் படிக்க…


நத்தார் பண்டிகைக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து

நத்தார் பண்டிகையை கொண்டாடி வருகின்ற இலங்கைவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், அமைதி, கருணை, மனித நேயம் போன்ற உலக வாழ்க்கையில் உயர்விற்கான பண்புகளை போதிக்கும் இயேசுபிரானின் போதனைகளும் மனிதாபிமானம், சகவாழ்வு, தியாகம் பற்றிய அவரது நற்செய்திகளும் இந்த நத்தார் காலத்தில் நாடெங்கும் பரவட்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உயரிய நோக்கத்தை கொண்ட உன்னதமானவரின் அளவற்ற நற்குணங்களை மீண்டும் மீண்டும் நினைவுகூரும் காலமாக இது அமைந்துள்ளதால், இயேசு கிறிஸ்துவின் கொள்கையை நிலைநாட்ட திடசங்கட்பம் கொள்வது அனைவரினதும் கடமையென ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறியுள்ளார். அத்தோடு, இன மத பேதமின்றி, அனைத்து இலங்கையர்களும் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டிய தருணம் இதுவென பிரதமர் ரணில் விக்ரமசிங்கமேலும் படிக்க…


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பகுதிகளிலுமிருந்து நிவாரணம் – வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநரின் ஊடக சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவோர் கொழும்பில் உள்ள அலுவலகத்திலும், கிளிநொச்சியில் உள்ள ஆளுநர் விடுதியிலும் வழங்க முடியுமென அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் சிறப்பாக செயற்பட்டு மக்களை பாதுகாத்தமை தொடர்பில் அவர்களின் பணியையும் பாராட்டியுள்ளார்.


தண்ணீரில் இயங்கும் புதிய மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த மதுரை இளம் விஞ்ஞானி

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ள மதுரையை சேர்ந்த இளம் விஞ்ஞானியான முருகன் என்பவர் சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் குறித்த மோட்டார் சைக்கிளை இயக்கிக் காட்டி பாராட்டை பெற்றுள்ளார் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி அதற்கான செயல்விளக்கத்தை வழங்கியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி முருகன், மதுரை அரசு ஐடிஐ கல்லூரியில் 2ஆம் வருடத்தில் கல்வி கற்று வருகிறார். சிறிய வயதிலேயே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட அவர் தனது கண்டுபிடிப்புகளுக்காக பல பரிசல்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளாhர். தண்ணீர் மேல் செலுத்தும் துவிச்சக்கர வண்டியையும் இவர் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‘தண்ணீர் மோட்டார் வண்டி’ குறித்து முருகன் கூறியதாவது: இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோல் தேவை. எனவே, வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது மட்டும் பெட்ரோலைமேலும் படிக்க…


பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை மீள்சுழற்சி செய்வதற்கான நிலையம் சாவகச்சேரியில்

சாவகச்சேரியில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை மீள்சுழற்சி செய்வதற்கான நிலையம் அமைக்க சாவகச்சேரி நகர சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்கு அண்மையில் சென்ற  வேள்ட் விஷன் அதிகாரிகள் நகரசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி செயற்பாட்டை பார்வையிட்டிருந்தனர். இதன்போது தரம் பிரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் பிளாஸ்ரிக் மீள்சுழற்சி நிறுவனங்கள் போதியளவில் இல்லை. அதனால் தரம் பிரிக்கப்பட்ட அதிகளவான பிளாஸ்ரிக் பொருள்கள் தேங்கிக்கிடப்பதாக நகராட்சி மன்ற தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதனால் வேள்ட் விஷன் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியிலேயே பிளாஸ்ரிக் கழிவுகளை துகள்களாக்கி மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் நிலையம் ஒன்றை அமைக்கவும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த மீள்சுழற்சி நிலையத்தை பொது அமைப்பு ஒன்றினால் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேள்ட் விஷன் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டதுமேலும் படிக்க…


தமிழ் மக்களை பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள்- மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை

தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் லாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அரசியல் கட்சிகளிடமும் யாழ்ப்பாண ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு ஆயரால் அனுப்பிவைக்கப்பட்ட கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, 2018ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதிலும் இன மத நிற மொழி வேறுபாடின்றி கொண்டாடப்படும் வேளை பாலக இயேசுவின் அன்பும் அருளும் ஆசீரும் இவ்விழாவை கொண்டாடும் அனைவரோடும் என்றும் இருப்பதாக என இறை ஆசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சிமேலும் படிக்க…


“நான் கொல்வதற்குத் திட்டமிட்ட ஒரு மனிதர் என்றால் அது பிரபாகரனே”- சரத் பொன்சேகா

அமைச்சுப் பதவி வேண்டுமென்றால், மன்னிப்புக் கோர வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக, இலங்கையின் முன்னாள் முன்னாள் ராணுவத் தளபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேசத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஓர் அமைச்சுப் பதவிக்காக ஜனாதிபதியிடம் தான் மன்னிப்புக் கோரப் போவதில்லை எனவும் இதன்போது அவர் தெரிவித்தார். இலங்கையில் அண்மையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்து வந்தார். இதன் காரணமாக, அண்மையில் ஐக்கிய தேசியக் கூட்டணியின் அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது, சரத் பொன்சேகாவுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு, பிரதமர் ரணில் வி்க்ரமசிங்க ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்த போதிலும், சரத் பொன்சேகாவின் பெயரை, ஜனாதிபதி அகற்றி விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிலையான அபிவிருத்தி மற்றும் வனமேலும் படிக்க…


நியூசிலாந்து – இலங்கைக்கிடையிலான 2வது டெஸ்ட் நாளை ஆரம்பம்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நிலையில் இரண்டாவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. தொடரை வெல்லும் நோக்குடன் இலங்கை அணி சில மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர் பார்க்கப்படுகின்ற நிலையில் வேகமாக பந்துவீசக்கூடிய வேகப்பந்துவீச்சாளரான துஷ்மந்த சமீரவை வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவுக்கு பதிலாக களமிறக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை நியூசிலாந்து அணி மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படாது முதலாவது டெஸ்டில் விளையாடிய அணியே விளையாடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. முதலாவது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மைதானம் முக்கியம் பெறுகின்pற நிலையில் இது முதலாவது டெஸ்டை விட வேகமானதாகவும் முடிவைத் தரக்கூடியதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது


வடக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை, தடுத்து நிறுத்துங்கள்- சீ.வி.கே. சிவஞானம்

தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் உணர்வுகளை மதிக்காமல் தொல்லியல் திணைக்களம், மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் என எழுத்துமூல கோரிக்கை ஒன்றிணை வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் அனு ப்பிவைத்திருக்கின்றார். அந்த எழுத்துமூல கோரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக வன்னி பெருநிலபரப்பில் இடம் பெறுவதால் மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. எங்கெங்கே மலைப்பகுதி காணப்படுகின்றதோ அங்கெல்லாம் பௌத்த ஆலயங்களை அடாத்தாக அமைக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது ஒருபுறமும், தமிழர்களின் பாரம்பரிய இந்து ஆலய பிரதேசங்களை பௌத்த பிரதேசங்களாக மாற்றுவதும், அவற்றின் செயற்பாடுகளுக்கு இடையூறு செய்வதுமாகவே இத் திணைக்களத்தின் செயற்பாடுகள் உள்ளன. உதாரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலர்மேலும் படிக்க…


நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை – பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய நத்தார் தின நள்ளிரவு திருப்பலி

நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நத்தார் தின நள்ளிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை சௌவுல் நாதன் அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.  அதேவேளை மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நத்தார் தின நள்ளிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை எஸ்.கே.தேவராஜா அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதன் போது அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்  குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் என   ஆயிரக்கணக்கானோர் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


தெற்கு மக்களின் ஆதரவை பெற்றவரால்தான் தமிழருக்கு அதிகார பகிர்வை வழங்க முடியும் – கெஹெலிய ரம்புக்வெல்ல

தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார பகிர்வை தெற்கு மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் தலைவரினால் மாத்திரமே வழங்க முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தெற்கு மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரினால் மாத்திரமே முடியுமென்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில், இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை எனவும் எனினும் தற்போதைய சூழ்நிலையில் அதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தினால்தான் நாட்டில் தொடர்ச்சியாக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் எனக் கூறிய அவர், இதனால், மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கமாட்டோம்மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !