Monday, December 3rd, 2018

 

அந்தாலூசிய தேர்தல்: முதல் முறையாக வலதுசாரி கட்சி ஆசனங்களை கைப்பற்றியது

ஸ்பெயினின் அந்தாலூசியாவில் பல தசாப்தங்களின் பின்னர் முதல் முறையாக, ஸ்பெயினின் தீவிர வலதுசாரி கட்சியான வொக்ஸ் கட்சி 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 1970ஆம் ஆண்டு அந்தாலூசியா ஜனநாயக அந்தஸ்து பெற்றதை தொடர்ந்து வொக்ஸ் கட்சிக்கு கிடைத்த முதல் அரசியல் வெற்றியாக இது காணப்படுகிறது. 109 உறுப்பினர்களை கொண்ட பிராந்திய நாடாளுமன்றத்தில், சிறு கட்சியான வொக்ஸ் 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அந்தாலூசியா தேர்தலில் சோசலிச கட்சி 33 ஆசனங்களை பெற்றுள்ள போதிலும், ஆட்சியமைப்பதற்கு 55 ஆசனங்களை பெற்றிருத்தல் அவசியமாகும். ஐரோப்பாவின் மிக அதிகளவான வேலையின்மை வீதத்தை கொண்ட பிராந்தியமாக விளங்கும் அந்தாலூசியா, கடல் மார்க்கமாக ஸ்பெயினுக்குள் நுழையும் ஆயிரக்கணக்கான ஆபிரிக்கர்களின் முக்கிய நுழைவு புள்ளியாகவும் இது விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதி மக்ரோனுக்கு தொடரும் எதிர்ப்பு: நோயாளர் காவு வண்டி சாரதிகளும் போராட்டம்!

ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனுக்கு எதிராக பிரான்ஸ் நோயாளர் காவு வண்டி சாரதிகள் நாடளாவிய ரீதியிலான போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதி மக்ரோனின் எரிபொருள் விலைத் திட்டம் மற்றும் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் எரிபொருள் வரி உயர்வு நாட்டில் போராட்டங்களுக்கு வித்திட்டதுடன், அது நாடளாவிய ரீதியில் பரவியது. இந்நிலையில், அதிகரித்துவரும் போராட்ட வன்முறைகள் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு எதிரான பொதுமக்களின் கோபம் காரணமாக ஜனாதிபதி மக்ரோன் தற்போது தனது பதவியை தக்கவைத்துக் கொள்வதிலும் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் போராட்டம் காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்ததுடன், 100இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததுடன், இதுவரை சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்குசெய்யுமாறு ஜனாதிபதி, பிரான்ஸ் பிரதமருக்கு நேற்று பணித்திருந்தமையும்மேலும் படிக்க…


காலநிலை மாற்றம் முன்னேறினால் மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா பொதுச்சபைத் தலைவர்

ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ள நிலையில் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பசுமை இல்ல வாயு வெட்டுகளை கண்காணிப்பதற்கான ஒரு விதிமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைத் தலைவர் மரியா எஸ்பினோசா தற்போதைய விகிதத்தில் காலநிலை மாற்றம் முன்னேறினால் மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நாங்கள் அவசரமாகவும் தைரியத்துடனும் செயல்பட வேண்டும்மேலும் படிக்க…


மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு இடைக்காலத் தடை?

பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தற்போதைய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லையென உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றன. இதன்போதே இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் 49 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பம் இடப்பட்ட நிலையில், குறித்த மனு கடந்த 23 ஆம் திகதி, தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வெள்ளிக்கிழமை, மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, விசாரணைகளைமேலும் படிக்க…


ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலை வலியுறுத்திய வைகோ கைது!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி சென்னையில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர். பேரறிவாளன் உள்ளிட் 7 பேரை விடுதலை செய்ய ஆளுனர் மறுத்து வருவது அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானதும், அவை கண்டிக்கத்தக்கது என்றும். உடனே அவர்களை விடுதலை செய்யக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சென்னை ஆளுநர் மாளிகை அருகே சின்னமலைப் பகுதியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்ததைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி,மேலும் படிக்க…


கைத்தொலைபேசி பயன்படுத்தாமல் உணவருந்தினால் இலவச உணவு – புதுமையான உணவகம்!

பொதுவாக நவீன காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் கைத்தொலைபேசியை வைத்துவிட்டு ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் உரையாடிக் கொண்டே உணவருந்துவது மிகவும் கடினமான, அரிதான விஷயமாகிவிட்டது.  ஆனால், இதை தனது புதுமையான வர்த்தக யோசனையின் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளது லண்டனைச் சேர்ந்த உணவகம் ஒன்று. குடும்பமாக செல்லும்போது பெற்றோர் தங்களது கைத்தொலைபேசி உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளை உணவக பணியாளர்களிடம் கொடுத்துவிட்டால் அவர்களது குழந்தைகளுக்கான உணவு இலவசமாக வழங்கப்படும். இதை லண்டனை சேர்ந்த உணவகமொன்று சோதனை ரீதியில் செயற்படுத்தி வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் போது, பெற்றோர்கள் தங்களது கைத்தொலைபேசிகளை வைத்துவிட்டு தங்களுடன் அதிக நேரத்தை செலவிடுவதையே குழந்தைகள் விரும்புவது தெரியவந்துள்ளதாக பிராங்கி & பென்னி (Frankie & Benny) என்ற அந்த உணவகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, 10 சதவீத குழந்தைகள் தங்களது பெற்றோரின் கைத்தொலைபேசிகளை மறைத்துவைத்து பெற்றோரின் கவனத்தை பெறுவதற்குமேலும் படிக்க…


இந்தோனேசியாவில் பாரிய மண்சரிவு – 7 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயிலும் 14 மாணவர்கள் வடக்கு சுமாத்ரா மாகாணத்துக்கு கல்விச் சுற்றுலா ஒன்றுக்கான சென்றிருந்தனர். அங்குள்ள காரோ மாவட்டம், டவுலு கிராமத்தில் உள்ள விடுதியில் அவர்கள் அனைவரும் தங்கியிருந்த போது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த பகுதியில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது. இதில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதியின் ஒருபகுதி மண்ணுக்குள் புதையுண்டது. தகவல் அறிந்து அங்கு சென்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ மீட்பு படையினர் காயங்களுடன் 7 பேரை மீட்டனர். இதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 7 மாணவர்களின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.


​மெக்ஸிகோ ஜனாதிபதியின் சொகுசு விமானம் விற்பனைக்கு!

மெக்ஸிகோவின் இடதுசாரி தலைவர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவருக்கான உத்தியோகபூர்வ, மிகப் பெரிய மற்றும் அதிசொகுசு விமானத்தை விற்பனைக்கு விட்டுள்ளார். நாட்டின் மேலதிக செலவினங்களை குறைக்கும் முதல் நகர்வாக புதிய ஜனாதிபதி 65 வயதான அண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோரின் (Andrés Manuel López Obrador) உத்தரவிற்கிணங்க குறித்த ஆடம்பர விமான மெக்ஸிகோ சிற்றியில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஔிப்படக் கலைஞர்களும், செய்தியாளர்களும் தங்கள் குழுக்களுடன் விமானத்திற்குள் நுழைந்து தமது பணிகளை மேற்கொண்டனர். விமானத்தின் உட்பகுதி சுவர்கள், தட்டையான திரைகள், கண்காணிப்பு அம்சங்கள், அதே போல் ஜனாதிபதி படுக்கையறை மற்றும் பளிங்கு குளியலறை, உத்தியோகபூர்வ அரசாங்க முத்திரைகள், விசாலமான உள்ளமைப்புகள் என்பன ஔிப்படக்காரர்களால் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2012 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மிகுந்த முயற்சியுடன் 218 மில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட குறித்தமேலும் படிக்க…


அவுஸ்திரேலியாவில் இலகுவாக குடியேறும் வகையில் புதிய விசா நடைமுறை!

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தமது பெற்றோர்களை அந்நாட்டுக்குள் அழைப்பதற்கான புதிய விசா நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. தற்காலிக பெற்றோர் விசா அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்விசா தொடர்பான சட்டமூலமான Migration Amendments (Family Violence and Other Measures) Bill இனை கடந்த 2016ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த லிபரல் முன்மொழிந்திருந்த நிலையில் தற்போது குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் உள்ள தங்களது குடும்பங்களைச் சந்தித்துக்கொள்ள இப்புதிய நடைமுறை விசா வழியேற்படுத்தும் என குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோல்மன் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் நிரந்தரமாக வசிக்கும் அனுமதியினைப் பெற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது பெற்றோரை 3 ஆண்டுகள் தற்காலிக விசாவில் வரவழைக்க 5000 அவுஸ்திரேலிய டொலர்கள் செலுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வரும் பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவில்மேலும் படிக்க…


சென்னையில் இன்று போராட்டம் – 70 அமைப்புகள் பங்கேற்பு!

தமிழக ஆளுநரைக் கண்டித்து சென்னையில் இன்று (திங்கள்கிழமை0 நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் 70 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள் என ம.தி.முக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். நேற்று (ஞாயற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் ஒவ்வொரு பகுதியாகச் சென்று மாவட்ட ஆட்சியர், பொலிஸ் கண்காணிப்பாளரை சந்திப்பது முறையல்ல. தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா நடக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தாமதம் செய்யும் ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தில் தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட 70 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள்” எனக் கூறினார்.


பிரான்ஸ் எதிர்ப்பு போராட்டம்: போராட்டக் காரர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு

அரசியல் தலைவர்களுக்கும் மஞ்சள் சட்டை போராட்டக்காரர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், பிரதமருக்கு பணித்துள்ளார். பிரான்சில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மஞ்சள் சட்டை போராட்டக்கார்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் வன்முறையாக மாறியுள்ள இந்நிலையில், ஜனாதிபதி மக்ரோன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவசர பாதுகாப்பு கூட்டமொன்றை கூட்டியிருந்தார். இதன்போது போராட்டக்காரர்களுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதமருக்கு பணித்த அதேவேளை, போராட்டங்களை எதிர்கொள்வதற்கு கூடுதல் பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைக்குமாறு உள்துறை அமைச்சருக்கும் உத்தரவிட்டுள்ளார். குறித்த கூட்டத்தின்போது நாட்டில் அவசரகால நிலையை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சர்கள், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இரண்டு வாரங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தின் எதிரொலியாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதுடன், பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்ளிட்ட நூறிற்கும் அதிகமானோர்மேலும் படிக்க…


இந்திய-அமெரிக்க விமானப்படை கூட்டு பயிற்சி இன்று ஆரம்பம்!

இந்திய-அமெரிக்க விமானப்படைகளுக்கு இடையேயான 12 நாட்கள் கூட்டு பயிற்சி மேற்கு வங்காளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது இந்திய-அமெரிக்க விமானப்படைகள் இன்று முதல் 12 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா, பானாகார் ஆகிய 2 விமானப்படை தளங்களில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. 2 தளங்களில் பயிற்சியில் ஈடுபடுவது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகளுக்கு இடையேயான இராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க, இந்திய விமானப்படைகள் அனைத்து ஒத்துழைப்பையும் உறுதி செய்யும். செயல்திறன் வெளிப்பாட்டை வழங்குவது, சிறந்த பயிற்சிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வது ஆகியவையே இந்த கூட்டு பயிற்சியின் நோக்கம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க கடற்படையின் எப் 15 மற்றும் சி-130 இராணுவ விமானம் ஆகியவற்றையும், இந்திய விமானப்படை ஜாகுவார், மிராஜ் 2000, சூ-30 எம்.கேஐ போன்றமேலும் படிக்க…


மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து 239 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை வரை 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் சில வாரங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 27ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் குறித்த புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை 109 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இதுவரையில் 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்தரிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதை தெரிவித்துள்ளனர். அகழ்வு இடம் பெறும் இடத்தில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.


அமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக மட்டக்களப்பில் உண்ணாவிரத போராட்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் அமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அடிவருடிகளினால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றினை மீட்டுத்தருமாறும் கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் 14ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. காத்தான்குடி அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி,கட்டிடம் 2014ஆம் ஆண்டு தம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குறித்த முன்பள்ளியைக்கொண்டு வேறு இடத்தில் நடத்திவருவதாக முன்பள்ளியின் தலைவர் எம்.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்துள்ளார். கடந்த 19வருடமாக குறித்த முன்பள்ளியை நடத்திவந்த நிலையில் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் அடிவருடிகள்,காத்தான்குடி பிரதேச செயலகத்தில் உள்ள சிலரின் உதவியுடன் குறித்த காணியையும் கட்டிடத்தினையும் அபகரித்தாகவும் அதனை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் முடியாமல்போனதாகவும் அவர் தெரிவித்தனர். குறித்த காணியை மீட்டுத்தருமாறு தாம் காத்தான்குடி பிரதேசமேலும் படிக்க…


வவுணதீவு பொலிஸார் கொலை: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – இராணுவ தளபதி

மட்டக்களப்பு- வவுணதீவில் பகுதியில்  பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலும் ஏதும் இல்லையென இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வவுணதீவில் பொலிஸார் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து  ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், தவறான செயற்பாடுகளுக்கு எதிராக பொதுமக்களும் குரல் கொடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் பிரிவினரும் சி.ஐ.டியினரும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றரெனவும் மகேஸ் சேனநாயக்க சுட்டிக்காட்டினார். ஆகையால் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்களெனவும் முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து தகவல்களும் படையினரிடம் உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


வவுனியாவில் குழு தாக்குதல்: மூவர் படுகாயம்

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் 17,19,25 வயதுடைய மூன்று இளைஞர்களே, படுகாயமடைந்த நி லையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடேமோதலுக்கு காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதி- பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும் இச்சந்திப்பு சுமார் 1 மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இதேவேளை மைத்திரி- மஹிந்த தலைமையில் எதிர்காலத்தில் அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் தற்போதைய அரசியல் சிக்கலுக்கு தீர்வை முன்வைப்பது தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடல் நடைபெற்றிருக்கலாமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மனிதனாக மாத்திரம் இருந்து மக்களுக்கு சேவையாற்றுவோம்: நிஷாந்த டி சில்வா

இனம் மற்றும் மதம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பால் மனச்சாட்சிக்கு உண்மையுள்ள மனிதனாக இருப்போமென குற்­றப்­பு­லனாய்வு பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த டி சில்வா தெரிவித்­துள்ளார். நிஷாந்த டி சில்வாவின் பூர்வீகம் தொடர்பில் கேள்வி எழுப்பும் வகையில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பொது­ஜன பெர­முன கட்­சியின் உறுப்­பி­னரும் ஓய்வு பெற்ற மேஜருமான அஜித் பிர­சன்ன கருத்தொன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அக்கருத்துக்கு பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “எனது பரம்­ப­ரையை சேர்ந்த தாத்தா மற்றும் அப்பா ஆகியோர் இந்நாட்டில் வாழ்ந்து இம்மக்களுக்காக சேவையாற்றியமையை எண்ணியும் எனது தந்தை தழிழர் என்பதை எண்ணியும் பெரு­மையடைகின்றேன். அந்தவகையில் நான் எப்போதும் இனம் மற்றும் மதம் ஆகியவற்றுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படும் மனிதனல்ல. அனைவரும் மனிதர்கள் என்ற எண்ணத்தில் மாத்திரமே எனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன். மேலும் மன­ச்சாட்­சிக்குமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !