Friday, November 9th, 2018

 

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இன்று இடம்பெற்ற சம்பவங்களை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் காவல்துறையினரால் சுடப்பட்டு கைதுசெய்யப்பட்ட நிலையில் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் அதற்கு முன்னர் வாயு போத்தல்கள் நிரம்பிய தனது காரை வெடிக்க வைத்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் இதேவேளை குறிப்பிட்ட நபர் காவல்துறையினர் மீது தாக்குதலை மேற்கொள்ளமுயன்றவேளை அவர்கள் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.  குறிப்பிட்ட பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிவதையும் தங்களை தாக்க முயலும் நபர் ஒருவரை பொதுமக்கள் எதிர்த்து தாக்குவதையும் காண்பிக்கும் காணொளிகள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் காவல்துறையினர்மேலும் படிக்க…


தொடர் தோல்வியிலிருந்து மீண்டது அவுஸ்ரேலியா!

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்ரேலிய அணி 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய அவுஸ்ரேலிய அணி 48.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பில் Carey 47 ஓட்டங்களையும், அன்ரூவ் பின்ஞ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பதிலுக்கு 232 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களம் இறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை பெற்று 7 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலிய அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றி!

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒரேயொரு T-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகின்றது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நடைபெற்றது. இதில் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பிறகு நடைபெற்ற ஒரேயொரு T-20 போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. தற்போது இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நடைபெற்று வருகின்றது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, காலி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நாணயமேலும் படிக்க…


மலேசியாவில் கொத்தடிமையாக இருந்த 48 தமிழர்கள் மீட்பு

மலேசியாவில் சம்பளம், உணவு, தண்ணீர் கிடைக்காமல் 3 மாதங்களாக கொத்தடிமையாக வேலை செய்துவந்த 48 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மலைப் பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக மலேசியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட நெல்லை மாவட்டத்தினைச் சேர்ந்த 48 பேருக்கு ஒரு மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களுக்கு 3 மாதங்கள் சம்பளம வழங்கப்படவில்லை என்பதுடன் ஒருவேளை மட்டும் உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ள. அத்துடன் அவர்களது கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றi நிறுவனத்தின்வசமே காணப்பட்டது. இதனைத் தொடர்ந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது நிலை குறித்து கைத்தொலைபேசியில் ; வீடியோவாக பதிவு செய்து, உறவினர்களுக்கு அனுப்புpயிருந்தனர். இந்த காட்சிகள், மலேசியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டதனையடுத்து மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் முருகேசனின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அவரது முயற்சியால் 48 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர். நன்றி குளோபல் தமிழ்


அமெரிக்க ஜனாதிபதி நாளை பிரான்சிற்கு விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் பிரான்சிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 11ம் திகதி முதலாம் உலகப் போரில் நாசிப் படைகள் சரணடைந்த வெற்றி தினம் பிரான்சில் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று பல்வேறு நிகழ்வுகளிலும் இமானுவேல் மக்ரோன் பங்கேற்று வருகின்றார். இந்தநிலையிலேயே குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாளை (சனிக்கிழமை) பிரான்ஸிற்கு வருகை தரவுள்ளார். பிரான்சின் ஜனாதிபதி மாளிகையான எலிசே மாளிகைக்கு வரும் டொனால்ட் ட்ரம்புடன், இமானுவேல் மக்ரோன் பிரத்தியேகச் சந்திப்பொன்றை நாளை காலை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்து.


ஊழலை ஒழிக்க தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்: ஸ்டாலின்

எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மத்திய மாநில அரசுகளின் செயற்பாடுகளை கடுமையாக சாடிய ஸ்டாலின், தற்போதைய ஆட்சி ஊழல் ஆட்சி நிறைந்ததென குற்றஞ்சாட்டினார். அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யவேண்டுமென ஸ்டாலின் இன்போது கோரிக்கை விடுத்தார்.


இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது?

இலங்கை நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி சேவைநிலையமொன்று அறிவித்துள்ளது.நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவு வர்த்தமானியில் மைத்திரி ஒப்பமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனிடையே ஏற்கனவே தான் தெரிவித்திருந்தது போல், பூரணை தினத்திற்கு முன்னதாக அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டதாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற, புத்தக வெளியீட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், தனது தீர்மானம் சரியானதா என நாடாளுமன்றத்தில் அல்ல, மக்களிடமே வினவ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “ஏன் உங்களுக்கு 8 அல்லது 6 மாதங்கள் பொறுமையாக இருக்க முடியவில்லை என வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் என்னிடம் கேட்டனர். பொறுமையாக இருந்திருந்தால் 8 மாதங்களில் இலங்கையில் மீதமாவது என்ன என்பது தொடர்பில் பிரச்சினையுள்ளது. அனைத்தையும் பட்டியலிட்டு விற்பனை செய்யும் திட்டத்தில் அரசாங்கம் இருந்தது” எனவும் தெரிவித்துள்ளார்.


முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ செய்தி வாசிப்பாளரை சீன செய்தி நிறுவனம் அறிமுகப் படுத்தியது

நல்லதொரு சூட் அணிந்து, எந்திர மனிதனை ஒத்த குரலோடு மெய்நிகர் செய்தி தொகுப்பாளரை சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ளது. எல்லாரும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், “தொழிற்முறை செய்தி தொகுப்பாளரைப் போல செய்தியை இயற்கையாக இதனால் வாசிக்க முடியும்” என்று சின்குவா செய்தி நிறுவனம் கூறுகிறது. தன்னுடைய முதலாவது செய்தி அறிவிப்பின் தொடக்கத்தில் பேசும் இந்த மெய்நிகர் செய்தி தொகுப்பாளர் “ஹலோ, நீங்கள் ஆங்கில செய்தியை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறுகிறார். இதனை வடிவமைப்பதில் சீன தேடுதல் பொறியான சோகௌவின் ஈடுபட்டது. “தடையில்லாமல் எனது கணினியில் செய்தி தட்டச்சு செய்யப்படும்போது, நான் ஓய்வின்றி பணியாற்றி உங்களுக்கு தகவல்கள் வழங்குவேன்” என்று அறிமுக காணொளி ஒன்றில் இந்த செய்தி தொகுப்பாளர் கூறுகிறார். “மிகவும் புதிய செய்தி அனுபவங்களை வழங்குவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  புகைப்பட காப்புரிமை @XHNews@XHNEWSமேலும் படிக்க…


இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் இக்கட்டான தருணம் – கோட்டபாய

மிகவும் இக்கட்டான நிலையில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய வகிபாகத்தை மக்கள் கொண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவிக்கவுள்ள நிலையில், அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “ஒரு தேசத்தின் தலைவிதியை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். நாட்டின் முக்கியமான சூழ்நிலையில் முற்போக்கான எதிர்காலத்திற்கு மக்களின் உண்மையான சக்தி நிலையானதாக வழங்கப்படவேண்டும். இலங்கை மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என நம்புகிறேன்.” என கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் இ-வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையம் அமைக்கலாம் : மத்திய அரசு

இ வாகனங்கள் எனப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்களை தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் தொடங்கலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. எலக்ட்ரானிக் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் தொடங்குவதற்கு மத்திய அரசு இதுவரை எந்த தகுதியும் நிர்ணயிக்கவில்லை. இதனால் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் தொடங்க உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில் நாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் மையங்களின் தரம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க மத்திய மின்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்கஸ் போன்ற நிறுவனங்களும், ஓலோ, உபர் போன்ற வாடகை கார் இயக்கும் நிறுவனங்களும் நாடு முழுவதும் எலக்ட்ரானிக் வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால் சார்ஜ் ஏற்றும் நிலையங்கள்மேலும் படிக்க…


பெரும்பான்மையை நிரூபித்தாலும் இனி ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன்- சிறிசேனா திட்டவட்ட அறிவிப்பு

பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக பெரும்பான்மை இருந்தாலும் கூட மீண்டும் ரணில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார். ஆனால் இந்த நியமனத்தை ரணில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. நான் தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். இதற்கிடையே ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபித்தால் தான் அவரை பிரதமராக ஏற்க முடியும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதற்காக வருகிற 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது. ஆனால் ராஜபக்சேவுக்கு போதிய ஆதரவு இல்லை. எனவே எதிர்க்கட்சியில் உள்ள எம்.பி.க்களையும், ரணில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள எம்.பி.க்களையும் இழுப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார். எதிரணியில் இருந்து ஒன்றிரண்டு பேர் ராஜபக்சே அணிக்கு தாவிவிட்டாலும் கூடமேலும் படிக்க…


சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துப் பேசினார். அப்போது டி.டி.வி. தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.


தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேமுதிகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது- பிரேமலதா

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்று பண்ருட்டியில் நடந்த திருமண விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். பண்ருட்டியில் தே.மு.தி.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடலூர் மாவட்டம் தே.மு.தி.க.வின் கோட்டையாக திகழ்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஊழல் கட்சிகளாகும். அவர்கள் ஊழல் செய்த பணத்தில்தான் கட்சி நடத்துகின்றனர். விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் கட்சி நடத்துகிறார். விஜயகாந்த்தின் துரோகிகள் கூட அவரை கெட்டவர் என்று கூறமுடியாது. தமிழகத்தில் தற்போது எல்லா துறைகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. ஓ.பி.எஸ். மீதான வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி முருகன், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவரின் வழக்கை விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி ராஜேந்திரன் ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். முதல்-அமைச்சர் சி.பி.ஐ. விசாரணையில்மேலும் படிக்க…


சபரிமலை கோவிலுக்கு செல்ல 550 இளம்பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பம்

சபரிமலை கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 550 பேர் முன்பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல பூஜை மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும் மகரவிளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தம். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வருவது வழக்கம். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதும். அப்போது சபரிமலை சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசிக்க பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனை தவிர்க்க சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆன் லைன் தரிசன முறையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன்மேலும் படிக்க…


மெல்போர்ன் நகரில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி!

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் கார் டிரைவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரின் மத்திய பகுதியான ஸ்வான்ஸ்டன் தெருவில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் ஏராளமான மக்கள் ஷாப்பிங் செய்துகொண்டிருந்தனர். அப்போது அங்குவந்த ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் வெறித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை பிடிக்க வந்த போலீசாரையும் அவர் கத்தியால் குத்த முயன்றதால்  கார் டிரைவர் என கருதப்படும் அந்த நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.


பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

சுவிட்சர்லாந்தில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய பொலிஸ் அதிகாரியின் பதவியை பறித்துள்ளனர். சுவிஸ்-ஜேர்மன் மாகாணம் ஒன்றில் பொலிஸ் அதிகாரியாக செயல்பட்ட நபர் ஒருவர் 16 வயது கொண்ட சிறுவனுடன் தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போதுமான ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு 15 மாத சிறையும், பதவியையும் பறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இச்சம்பவத்தில் இரண்டு ஆண்டுகள் விசாரணைக்கு பின்னரே தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட நபரின் பதவியை பறித்த நிலையில், அவர் வேறு மாகாணம் ஒன்றில் குடியேறி மீண்டும் பொலிஸ் பணிக்கே திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை காலம் காலாவதியானது மற்றும் தனிப்பட்ட ஒருவரின் குற்றவியல் ஆவணங்கள் எதுவும் பொதுவெளியில் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அந்த பொலிஸ்மேலும் படிக்க…


தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தார்மீகத் தலையீடு வேண்டும்- ஜெயதேவ உயன்கொட

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு சகல மதங்களின் தலைவர்களும், சமூகத் தலைவர்களும், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மூத்த பிரஜைகளும் தலையீடு செய்ய முன்வரவேண்டும் என்று பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொழும்பு புதிய நகரமண்டபத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாதுளுவாவே சோபித தேரோ நினைவு நிகழ்வு இடம்பெற்றது. அங்கு நினைவுப்பேருரையை நிகழ்த்திய போதே பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சகல குழுக்களினதும் தார்மீகத் தலையீடு ஒன்றே இன்றைய தருணத்தில் எமக்குத் தேவை. தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் கட்சிகளினாலும் குழுக்களினாலும் மாத்திரம் தீர்வைக் கண்டுவிட முடியாது. வண. மாதுளுவாவே சோபித தேரோ தார்மீகத் தலையீடுகளைச் செய்யக்கூடியதாக இருந்த சிவில் சமூக இயக்கமொன்றின் செயற்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்திருந்தார். அதேபோன்ற அணுகுமுறையே இன்று- முன்னென்றும் இல்லாத வகையிலான அரசியல் நெருக்கடிக்குள்மேலும் படிக்க…


மைத்திரிக்கு எதிரான பிரேரணை தொடர்பில் மனோ கணேசன் எடுத்துள்ள முடிவு

ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்காது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குள் மேலும் தீ மூட்ட தயாராக இல்லை” என பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியல் குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Mano Ganesan@ManoGanesan Tamil Progressive Alliance (TPA) will not support any impeachment move against president @MaithripalaS. We are not in favour of adding more fire to current crisis. #lka 95 5:20 AMமேலும் படிக்க…


தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி: சம்பந்தன் நேரடிப் பேச்சு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.இது தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது, “அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் உரிய வகையில் தீர்வு காண இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தார். இந்த விடயம் தாமதிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்றுக்கொண்டார். கால சூழலுக்கு ஏற்ப விரைவில் தீர்வு காணுவேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, நீங்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படுங்கள் என்று அவரிடம் கூறினேன்.” என்று சம்பந்தன் இதன் போது தெரிவித்திருந்தார்.


மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்  அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க கருத்து வெளியிடுகையில், “பதவிகள், சலுகைகள், மற்றும் கறுப்புப் பணத்தை பயன்படுத்தி மைத்திரி- மகிந்தவினால் முன்னெடுக்கப்படும் இந்த சதித் திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும். முதலில் இந்த அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பதற்காகவே ஜேவிபி செயற்பட வேண்டியுள்ளது. இந்த சதித் திட்டம் நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேறும் தோற்கடிக்கப்பட வேண்டும். எனவே, நாளை ஜேவிபி நான்கு முக்கிய நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தவுள்ளது. பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை உடனடியாக சபாநாயகர் கூட்ட வேண்டும். சபாநாயகர் அண்மையில் வெளியிட்ட காட்டமான அறிக்கையை ஜேவிபி வரவேற்கிறது” என்றும் அவர்மேலும் படிக்க…


நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்! இல்லையேல் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும்! ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிருக்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை கூட்டி வாக்கெடுப்பின் மூலம் நம்பிக்கையை நிரூபிக்க தேவையான நடவடிக்கை எடுப்பதே தற்போது அவசியமானது என சர்வதேச சமூகம் வலியுறுத்த தொடங்கியுள்ளது.இல்லாவிடின் , நாட்டின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுவதோடு, முதலீட்டாளர்களையும் இழக்க நேரிடுமெனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சர்வதேசத்தின் எதிர்பார்ப்பின் படியே கூட்டமைப்பு நாடாளுமன்றில் மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் முடிவை எடுத்திருந்ததாக சொல்லப்படுகின்றது. ஆயினும் சர்வதேச கருத்துக்களை புறந்தள்ளி மைத்திரி நாடாளுமன்றினை கூட்ட மறுத்துவருகின்ற நிலையில் ஜரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.


12 முஸ்லிம் எம்பிக்கள் மக்காவுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் மாலை சந்தித்து விட்டு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். தற்போதைய அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பது குறித்து இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலை முடித்துக் கொண்டு, ஹக்கீம் தலைமையிலான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதன் தலைவர் றிசாத் பதியுதீன் தலைமையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மக்காவுக்கு புறப்பட்டுச்மேலும் படிக்க…


த.தே.கூ நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டுமெனக் கோருவது தவறு – சி.வி.கே.சிவஞானம்

“இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்க வேண்டுமெனக் கோருவது தவறு. அவ்வாறான கருத்து என்பதும் மஹிந்த சார்பான நிலைப்பாடாகவே அமையும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நீக்கிப் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி நியமித்துள்ளார். ஜனாபதியின் இந்தச் செயற்பாடானது அரசமைப்பை மீறிய செயற்பாடு என்றும், தானே தற்போதும் பிரதமர் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறி வருவதால் நாட்டில் தற்போது மிகப் பெரிய அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இதில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென்றதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதால் மஹிந்த, ரணில் இருவரும் ஆதரவைக் கோரி வருகின்றனர். ஆனால், மஹிந்த நியமனம் அரசமைப்பை மீறியுள்ளதால்மேலும் படிக்க…


காவற்துறைத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது

காவற்துறைத் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி என்பதனால் காவற்துறையும் அவரது கட்டுப்பாட்டுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. முன்னதாக அந்த திணைக்களம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவன்ச சத்தியப்பிரமாணம்

வீடமைப்பு மற்றும் சமூக நலன்புரி அமைச்சராக விமல் வீரவன்ச சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் படிப்படியாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை, வீடமைப்பு அமைச்சானது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாசவிடம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


அடிக்கடி செல்பி எடுத்தால் அழகுக்கு ஆபத்து..!

அடிக்கடி செல்பி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும் என ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. காலை எழுந்தது முதல் இரவு கண்ணை மூடும் வரை ஒரு செல்பியாவது செல்பி எடுத்து அதை சமூக வளைதளங்களில் பதிவிடவில்லை என்றால் பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும்.ஆனால் அடிக்கடி செல்பி எடுப்பதால் ஸ்மார்ட் போன்களில் இருந்து வெளிவரும் அதிகமான ஒளி மற்றும் கதிர்வீச்சினால் முகத்தில் விரைவில் சுருக்கம் விழுவது மட்டுமின்றி தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. செல்போன்களில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர் வீச்சு தோலில் உள்ள செல்களை அழிப்பதால் விரைவில் வயதானவர் போல் தோற்றமளிக்கும் நிலை ஏற்படலாம் எனவும்,ஒருவர் எந்த கையில் செல்போனை வைத்து செல்பி எடுக்கிறார் என்பதை அவரின் முகத்திலுள்ள சுருக்கங்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.ஏனெனில் இடதுமேலும் படிக்க…


வறட்சியான சருமம் உடையவர்கள் செய்யக் கூடாதவை?

நம்மில் பலருக்கும் வறட்சியான சருமம் இருக்கும். அப்படி வறட்சியான சருமம் உள்ளவர்கள் சில விஷயங்களை செய்யக் கூடாது. அப்படி எந்த மாதிரியான விஷயத்தை அவர்க செய்யக் கூடாது? நம்மில் பலருக்கும் வறட்சியான சருமம்இருக்கும். அப்படி வறட்சியான சருமம்உள்ளவர்கள் சில விஷயங்களை செய்யக் கூடாது. அப்படி எந்த மாதிரியான விஷயத்தை அவர்க செய்யக் கூடாது? வறட்சியான சருமம் கொண்டவர்கள், அடிக்கடி முகத்தைக் கழுவக் கூடாது. குறிப்பாக சோப்பு அல்லது ஃபேஸ் வாஷைப் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் இது வறட்சியை மேன்மேலும் அதிகரிக்கக்கூடும். எனவே அளவுக்கு அதிகமான சரும வறட்சியைக் கொண்டவர்கள், ஒரு நாளைக்கு 2 முறைக்கு மேல் முகத்தை நீரில் கழுவக்கூடாது சோப்புக்களில் அதிகப்படியான அமிலம் அல்லது pH அளவு அதிகமாக இருக்கும் சோப்புக்களைப் பயன்படுத்தக்கூடாது. வேண்டுமானால் கிளிசரின் கொண்ட சோப்புக்களைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது சருமத்தை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ளும். சூடானமேலும் படிக்க…


பாடுவோர் பாடலாம் – 02/11/2018

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பிரதான செய்திகளை தொடர்ந்து


புலம்பெயர் வாழ்வில் புதியதோர் ஆன்மீக உதயம்

புலம்பெயர் வாழ்வில் புதியதோர் ஆன்மீக உதயத்தையொட்டி ஆன்மீக வாதிகள் வர்த்தகப்பெருமக்கள் மெய்யடியார்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய மாபெரும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம். எனவே இக் கலந்துரையாடலில் ஆன்மீக பற்றாளர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். இங்ஙனம் புலம் பெயர் வாழ் மண் ஆன்மீக பற்றாளர்கள். காலம் 18/11/2018 நேரம் பிற்பகல் 3.30 மணி இடம் 50 Place Torcy 75018 Paris Metro : Marx Dormoy தொடர்புகளுக்கு 06 29 22 82 50 06 64 79 28 37


புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணர் படத்தை வீட்டில் வைத்தால் செல்வம் அழிந்து விடுமா?

வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லதா? மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்யும். அத்தோடு இந்த இசைக்கருவியைப் பார்க்கும் போதே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். அவர் தான் எப்போதும் புல்லாங்குழலை கையில் வைத்திருப்பவர். இத்தகைய புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பது நன்மையே! புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும். நன்மை 1: புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் வீட்டை விட்டு ஓடிவிடும். இதற்கு அந்த புல்லாங்குழல் மூங்கில் கொண்டு செய்யப்படுவது தான் காரணம். நன்மை 2: புல்லாங்குழலை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்திருந்தால் அது குடும்ப ஒற்றுமையை வலிமையாக்கும் மற்றும் வீட்டில் அமைதியானமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !