Saturday, October 13th, 2018

 

ஐநா. மனித உரிமை பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று இந்தியா, உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளது.  193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை பேரவைக்கு உறுப்பினராக தெரிவாக முடியும் என்கின்ற வகையில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கென ஐ.நா சபையில் மனித உரிமை பேரவையில் ஐந்து இடங்கள் காணப்படுகின்ற நிலையில நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று அதிக ஆதரவை பெற்றுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் 2019 ஜனவரி முதல் 3 ஆண்டுகளுக்கு பேரவையில்; உறுப்பினராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்தியாவுடன் சேர்த்து பசுபிக் பிராந்தியத்திற்கென பக்ரைன், பங்களாதேஸ்;, பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும்மேலும் படிக்க…


மன்னாருக்கு சென்றுள்ள மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு…

கரிற்றாஸ் வாழ்வோதய நிறுவனத்தினால் நடை முறைப் படுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வமத செயற்பாடுகளின் ஒரு பகுதியான மதத்தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (12.10.18) மாலை வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் மன்னார் வாழ்வோதயம் பொது மண்டபத்தில் இடம் பெற்றது. இவ் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயருடன் சிலாபம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மும்மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் சர்வ மத பிரதி நிதிகள் மற்றும் அரச ஊழியர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர். சமய தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான அறிமுக நிகழ்வும் அதனை தொடர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வும் இறுதியில் பொதுக் கலந்துரையாடல்களும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் மேலதிக செயற்பாடாக சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம்மேலும் படிக்க…


இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ளது. முதலாவது போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது போட்டி இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் இலங்கையுடனான போட்டியின் போது இங்கிலாந்து அணியினர் தங்களால் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கவேண்டும் என இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக தாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டுவந்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் சுழற்பந்து வீச்சாளாகளை சிறப்பாக எதிர்கொள்வதற்கு இங்கிலாந்து மைதானங்களிற்கும் இலங்கை மைதானங்களிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரசீத்கானிடம் சில விசேட திறமைகள் உள்ளன எனவும் அதனை இலங்கை மைதானங்களில் காணமுடியும் எனவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.


பிரித்தானியா, இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் – பிரித்தானிய இளையோர் அமைப்பு

இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கும் வகையிலான முன்பிரேரணை ஒன்று பிரித்தானிய பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரேரணையில் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கையொப்பமிட்டுள்ள நிலையில் மேலதிக கையொப்பங்களை பெறும் நடவடிக்கையில் புலம்பெயர் தமிழ் இளையோர் குழுவொன்று செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த  இளையோர் குழுவினர் பிரித்தானியா ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான கிறிஸ் பிலிப்பை நேற்று வெள்ளிக்கிழமை (12.10.18)  சந்தித்துள்ளனர்.  இதன்போது இனவழிப்பிற்கு காரணமான இலங்கை அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆயுதங்கள் விற்பனை செய்வதால், அவர்களின் கை மேலும் ஓங்கும் என்பதனால் இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப், இது தொடர்பில்  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவருவதாக தெரிவித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இறைச்சிக்காக வைத்திருந்த நாய்களை தத்தெடுக்கும் கனடா!

தென்கொரியாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் நாய் பண்ணையிலிருந்து, 71 நாய்கள் மொன்றியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கொண்டு வரப்பட்ட நாய்கள், கோட்-டெஸ்-நெய்ஸ்ஸில் உள்ள அவசர நாய் தங்குமிடத்தில், கால்நடை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது குறித்த நாய்கள் சிறந்த கவனிப்பை பெற்று வருவதாகவும், விரைவில் தத்தெடுப்புக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தென்கொரியாவிலிருந்து 200 நாய்கள் கொண்டு வரப்பட்டு, ஓட்டாவாவில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டுள வருகின்றது. இந்த நாய்களை அங்கிருந்து கனடாவிற்கு கொண்டு வர, தொலைக்காட்சியின் தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து 4200 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். நாய்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கு உலக நாடுகளில் இருந்து கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில், கனடா முன்னெடுத்த இத்திட்டமானது உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


ஜேர்மனியின் அதிவேக கடுகதி ரயிலில் தீ விபத்து!

ஜேர்மனியின் அதிவேக கடுகதி ரயிலொன்று பயணத்தின் இடைநடுவே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 510 பயணிகளுடன் பயணித்த ரயில் கொலோன் மற்றும் முனிச்சிற்கு இடைப்பட்ட பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் நேற்று (வெள்ளிக்கிழமை) விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த தீ விபத்தில் பயணிகள் எவருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்குள்ளான ரயில் சம்பவ இடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில். குறித்த பகுதியூடான ரயில் போக்குவரத்து இவ்வார இறுதி முழுவதும் தடை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பிரான்கோபோனி அமைப்பின் தலைவராக ருவாண்டா அமைச்சர்!- பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு

பிரெஞ்சு மொழியை தாய்மொழியாக கொண்ட நாடுகளின் சர்வதேச அமைப்பான பிரான்கோபோனியின் புதிய தலைவராக ருவாண்டா அமைச்சர் லூயிஸ் முஷிகிவாபோ நியமிக்கப்பட்டமைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரெஞ்சு மொழியை தாய்மொழியாக கொண்ட நாடுகளின் சர்வதேச அமைப்பின் தலைவராக ருவாண்டா அமைச்சர் நேற்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டார். பிரான்கோபோனியின் புதிய தலைவருக்கான நியமனம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”தனது நாட்டிற்குள் ஆண் பெண் சமத்துவத்திற்காக போராடி வெற்றி பெற்ற பெண்ணொருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை ஒரு சிறந்த விடயமாகும். இவரது நியமனம் எமது மொழிக்கும், அதன் மதிப்புகளுக்கும் நிச்சயமாக வினைத்திறனாக அமையும்” எனத் தெரிவித்தார்.


பாலியல் முறைப்பாடுகளை பகிரங்கமாக வெளியிடும் ‘Me Too’வலைத் தளத்துக்கு ராகுல் ஆதரவு

எந்ததொரு தரப்பினருக்கும் பயமின்றி பாலியல் முறைப்பாடுகளை பகிரங்கமாக தெரியப்படுத்தி வரும் ‘மீ டூ’ என்ற பெயரில் இயங்கும் சமூக வலைத்தளத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு வழங்கியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “பெண்களை மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்துவதை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். ஆகையால் அவ்வாறு இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். மாற்றத்தை கொண்டு வரும்பொருட்டு உண்மையை தெளிவாகவும், உரக்கவும் சொல்லும் நேரமும் இதுவாகும்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது சினிமாத்துறையில் பணிபுரியும் ஏராளமான பெண்கள் ‘மீ டூ’ என்ற பெயரில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பரும் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் அவர் பதவி விலக வேண்டுமென  எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


சீனாவிற்கு பாரிய நிலச்சரிவு எச்சரிக்கை!- 20 ஆயிரம் பேர் வெளியேற்றம்

சீனாவின் தென்மேற்கு பகுதியில் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பாரிய நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாங்சி ஆற்றுப்பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட பாரிய மண்சரிவினை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யாங்சி ஆற்றங்கரையை அண்மித்த பகுதிகளிலுள்ள கிராமங்களில் வாழும் சுமார் 20 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும், இதனால் எவ்வித உயிரிழப்புகளும் சம்பவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தங்கள் சொந்த இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட மக்கள், தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சீன அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மண்சரிவு அபாயங்களை தடுக்கும் வகையில் 11 மீட்பு வாகனங்கள் மற்றும் 60 தீயணைப்பு வீரர்கள் கொண்ட மீட்புக்குழு குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், வெளியேற்றப்பட்ட மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பதற்காகவும் மேலதிகமாக படையினரையும்மேலும் படிக்க…


வாக்குறுதிகள் பொய்த்துப் போனால் போராட்டங்கள் வலுப்பெறும்: வடக்கு- கிழக்கு மாணவர்கள் எச்சரிக்கை!

எமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும் என வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது. நீதிக்குப்புறம்பாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது. எனவே, இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றிமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !