Wednesday, June 13th, 2018

 

நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? சட்டசபையில் விவாதம் – தி.மு.க. வெளிநடப்பு

சட்டசபையில் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன் என்பது பற்றிய விவாதத்தின்போது சபாநாயகர் பேச அனுமதிக்காததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நடிகர் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது ஏன்? என்று ஒரு பிரச்சினையை கிளப்பினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:- மு.க.ஸ்டாலின்: முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை தரக்குறைவாக பேசியதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சபாநாயகர்: நான் அரசிடம் இதுபற்றி விசாரித்தேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 20-ந்தேதி அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அதுபற்றி விவாதிக்க வேண்டாம். ஸ்டாலின்: எஸ்.வி.சேகர் போலீஸ் துணையுடன் சுதந்திரமாக நடமாடி வருகிறார். சபாநாயகர்: இது எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியாதது அல்ல. நீதிமன்ற நடவடிக்கையில் இருப்பதை நாம் இங்கு விவாதிப்பதுமேலும் படிக்க…


உலக கோப்பை கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை

ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறார்கள். உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறியமேலும் படிக்க…


அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல – கமல்ஹாசன் பேட்டி

அரசியல் வேறு, சினிமா வேறு. இதை குழப்பிக் கொள்ளக் கூடாது, இந்த இரு வி‌ஷயத்திலும் மற்றவர்கள் குழப்பம் அடைந்தால், அதற்கு நான் பொறுப்பு ஏற்க இயலாது என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். அரசியல் வேறு, சினிமா வேறு என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- இதற்கு முன்பு எனது சில படங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திட்டமிட்டு என் படங்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது அத்தகைய சூழ்நிலை இல்லை. முன்பு விஸ்வரூபம் படத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அரசியல் கலந்திருந்தது. இப்போதும் அதே மாதிரி அரசியல் கலக்குமானால் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன். இதற்காக நான் என்னை தயார்படுத்தியுள்ளேன். விஸ்வரூபம் படத்தின் 2-வது பகுதி முதல் பகுதிக்கு தொடர்ச்சியாக உண்மையானதாக இருக்கும். வாசீம்மேலும் படிக்க…


முன்னாள் புலிகள் விக்கி மற்றும் சிவாஜியின் கன்னங்களில் அறைந்துள்ளனர்

சிவில் பாதுகாப்புப் படையின் கேர்ணல் ரத்னபிரிய பந்துவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள், கண்ணீருடன் பிரியாவிடை வழங்கி, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்,கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை கன்னத்தில் அறைந்துள்ளனர் என, ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது,  இந்த உணர்வுகளுக்கு  தலைவணங்கி,  அவர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமெனவும், அவர் இன்று (12.06.18)   கொழும்பில் நடைபெற்ற எளிய அமைப்பின்  ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து நாட்டை மீட்ட இராணுவத்தை சர்வதேசத்துக்கு காட்டிக்கொடுத்து அவர்களை தண்டிக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றது. நாட்டு இராணுவம் இழைக்காத யுத்தக் குற்றவிடயங்களை அடியொட்டி உருவாக்கப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை ஒவ்வொன்றாகமேலும் படிக்க…


உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் நாளை ஆரம்பம்

32 அணிகள் பங்குபெறும் 21வது உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் நாளை ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது. 736 வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டித் தொடரின் முதலாவது போட்டி , ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.


நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு வீழ்ச்சி அடைகின்றமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும்

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு வீழ்ச்சி அடைகின்றமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற குழுத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும், காவற்துறையினர் தமது கடமைகளை மேற்கொள்வதில், தாமதம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இவை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


Saint-Lazare நிலையம் தடைப்பட்டதால் Gare du Nord இல் கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம்!

இன்று புதன்கிழமை காலை முதல் Saint-Lazare நிலையத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், கார்-து-நோரில் மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது.  கார்-து-நோர் நிலையத்தில் காலையில் இருந்தே வழக்கத்து மாறாக அதிகளவிலான பயணிகள் திரண்டுள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. முன்னதாக Paris Saint-Lazare நிலையத்தில் இருந்து La Garenne Colombes வரையான சேவைகளும்,  La Défense Grande Arche வரையான சேவைகளும் முற்றாக தடைப்படுள்ளதை தொடர்ந்து, பயணிகள் கார்-து-நோரில் குவிந்துள்ளனர். காலையில் இருந்து கார்-து-நோரில் இருந்து புறப்படும் அனைத்து தொடரூந்துகளும் முற்றாக பயணிகளால் நிரப்பப்பட்டே செல்வதாகவும் தெரிய வருகிறது. தவிர, Paris Saint-Lazare போக்குவரத்து தடை குறித்த மேலதிக தகவல்கள் எமது இணையத்தில் தொடர்ந்தும் வெளியாகும்.


வரலாற்று சந்திப்பை நிறைவுசெய்து பியோங்யாங்கை சென்றடைந்தார் கிம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் நாட்டை சென்றடைந்துள்ளார். ஏர் சீன விமானத்தின் மூலம், கிம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு பியோங்யாங்கிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இது தொடர்பான ஒளிப்படங்களை சிங்கப்பூர் தகவல்தொடர்பு மற்றும் தகவல் அமைச்சு வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் கல்வியமைச்சர் ஒங் யே கொங் ஆகியோர் விமானம் நிலையத்திற்கு வந்து, கிம்மை வழியனுப்பி வைத்துள்ளனர். பல போராட்டத்திற்கு மத்தியில் உலக நாடுகளின் எதிர்பார்ப்புமிக்க வரலாற்று முக்கியம்வாய்ந்த ட்ரம்ப்-கிம் சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் இடம்பெற்றது. இதன்போது, கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத பாவனையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய ஆவணத்தில் இருநாட்டு தலைவர்களும் கைச்சாத்திட்டதுடன், வடகொரியாவின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


ட்ரம்ப்-கிம் உடன்படிக்கைக்கு சர்வதேசத்தின் ஆதரவை வலியுறுத்தும் ஐ.நா.

அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டிற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். ட்ரம்ப்-கிம் உச்சிமாநாடு குறித்த ஐ.நா. பொதுச் செயலாளரின் அறிக்கையை வாசித்த, அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும் பற்றிக் கொள்ள வேண்டும் ஐ.நா. செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ள முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு அமைய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்த உலகளாவிய சமூகத்தின் ஆதரவு அவசியம் என்றும் பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளதாக, பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


சசிகலா, தினகரனின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அ.தி.மு.க.வில் வகித்துவந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது. சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றபோது வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனி அணியாக செயற்பட்டனர். அதன்பின்பு, இரு தரப்பினரும் ஒன்றிணைந்து கடந்த வருடம் செப்டெம்பர் 12ஆம் திகதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போது, அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் பொதுச்செயலாளர் என்ற பதவியும் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே சசிகலா மற்றும் தினகரன் தரப்பினர்மேலும் படிக்க…


உத்தர பிரதேசத்தில் கோர விபத்து: 17 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலை தடுப்பில் மோதி டிடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று (புதன்கிழமை) கலை வேகமாக பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து காரணமாக பஸ்ஸில் சிக்குண்டிருந்த பயணிகளை மீட்கும் பணிகளில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதேவேளை விபத்தில் 17 சம்பவ இட்த்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகள் திருமலையில்! – உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள், திருகோணமலையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகின்றது. திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று காலை சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின. அமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பாக, திருமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உறவுகளின் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் போனோர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், தற்போதைய செயற்பாடுகள் வெறும் கண்துடைப்பென பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வார்ப்பாட்டம் காரணமாக, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதிநிதிகள் சற்று தாமதமாகவே வருகை தந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட அமர்வில், திருமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களது கருத்துக்களையும் முறைப்பாடுகளையும் முன்வைத்து வருகின்றனர். காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் மொஹான் ஜீ பீரிஸ், அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் மக்களின் கருத்துக்களைமேலும் படிக்க…


வாக்குரிமை இருந்தாலும் செயற்படுத்த மாட்டேன்

வாக்குரிமை இருக்கின்ற போதிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு முதலாக யாருக்கும் வாக்களிக்காமல் செயற்பட்டு வருகின்றேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாத்தறை – தெனியாய பிரதேசத்தில் வாக்காளர்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றதன் பின்னர் வாக்கு வழங்குவதை நிறுத்திவிட்டேன் எனக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு எனது வாக்குரிமையினை வழங்கும் போது நான் பக்கசார்பாக செயற்பட்டு விட்டதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம் இதன் காரணமாகவே வாக்குரிமையினை நிறுத்திவிட்டேன்  எனவும் கூறியுள்ளார். இதேவேளை, தெனியாய மேல்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் மஹிந்த தேசப்பிரிய கலந்துகொண்டதோடு, ஆலய நிர்வாகத்தினரால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தெனியாயமேலும் படிக்க…


விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்க முடியாது – அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு

விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்குதல் தொடர்பான யோசனை ஒன்று அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த யோசனைக்கு அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதோடு, பல படுகொலைகளை மேற்கொண்ட புலிகளின் குடும்பத்தாருக்கு நட்ட ஈடு வழங்கவேண்டுமா என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சரவையின் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் சுவாமிநாதன் குறித்த நட்டஈடு தொடர்பான யோசனையை முன்மொழிந்து, நேற்று இது தொடர்பான அனுமதி கோரலினை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா?

தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்த அவர், “வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாச்சார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள். மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது. இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன். மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது.மேலும் படிக்க…


துயர் பகிர்வோம் – திருமதி. நாகம்மா கந்தையா அவர்கள் (13/06/2018)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களது தாயார் திருமதி.நாகம்மா கந்தையா அவர்கள் 13ம் திகதி ஜூன் மாதம்  புதன் கிழமை  இன்று இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களையும் இரங்கலையும் தமிழ் ஒலி வானொலி சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.


பணயக்கைதிகளை பிடித்து அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது

நேற்று மாலை பரிஸ் பத்தாம் வட்டாரத்தில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்து அச்சுறுத்தல் விடுத்த நபர் சற்று நேரத்தில் கைது செய்யப்பட்டான். குறித்த நபர் பத்தாம் வட்டாரத்தின்  rue des petits stables வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றுக்குள் மூன்று நபர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தான்.  கட்டிடத்தை சுற்றி வளைத்த BRI படையினர், சிறிது நேரத்துக்குள்ளாக குறித்த நபரினை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடைய மொராக்கோ நாட்டு குடியுரிமை கொண்டவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணயக்கைதிகளை பிடித்துவைத்துக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்தமைக்குரிய காரணம் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அதேவேளை குறித்த நபரினை காவல்துறையினர் முன் எப்போதும் அறிந்திருக்கவில்லை எனவும், S கண்காணிப்பு பட்டியலில் இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கட்டிடத்துக்குள் எவ்வித வெடிபொருட்களும் இல்லை எனவும், குறித்த நபர் கத்தி ஒன்றினையும், போலி துப்பாக்கி ஒன்றினைமேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !