Tuesday, June 12th, 2018

 

பரிஸ் பத்தாம் வட்டாரத்தில் பயணக்கைதிகளை பிடித்துவைத்துள்ள நபர் – குவிந்துள்ள காவல்துறையினர்

ஆயுததாரி ஒருவன் பத்தாம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் பயணக்கைதிகளை பிடித்து வைத்துள்ளான். காவல்துறையினர் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள rue des Petites Ecuries வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில், ஆயுததாரி ஒருவன் சில நபர்களை பயணக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். 16 மணிக்கு கட்டிடத்துக்குள் ஆயுதத்துடன் நுழைந்த குறித்த நபர் அங்கிருந்த நபர் ஒருவரின் முகத்தில்  பலமாக தாக்கியுள்ளான்.  தாக்கப்பட்ட நபர் தப்பி ஓட, தொடர்ந்து முன்னேறிய ஆயுததாரி கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்த அலுவலகம் ஒன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த சில அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளான். உடனடியாக சம்பவ இடத்துக்கு BRI படையினர் குவிக்கப்பட்டு, கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். தீயணைப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கடைகள், கஃபேக்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டு, பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுமேலும் படிக்க…


13 வருட தொடர்ச்சியான கல்வி திட்டத்திற்கு பின்லாந்து அரசு உதவி

கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுள்ள 13 வருட தொடர்ச்சியான கல்வி திட்டத்திற்கு பின்லாந்து அரசு உதவி செய்ய தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் பின்லாந்தின் பிரதி கல்வி அமைச்சர் பெட்ரி பெல்டோனஸ் ஆகியோர்கிடையில் கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி , தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக பின்லாந்து அரசின் உதவி எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.


இந்திய அணிக்கு சவாலாக ஆப்கானிஸ்தான் அணி

ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதி பெற்றதன் பின்னர் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்திய அணியுடனான இந்த போட்டி பெங்களுரில் இடம்பெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியுடனான இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு அஜின்கியா ரஹானே தலைமை தாங்குகிறார். இந்த நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை விட தமது அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் முன்னிலையில் உள்ளதாக ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு அவர்கள் மிகவும் சவாலாக விளங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கை வீரர்கள்

ஜப்பானில் வெற்றிவாகை சூடிய இலங்கை கனிஷ்ட மெய்வாண்மை போட்டியாளர்கள் இன்று நாடு திரும்புகிறார்கள். ஜப்பானில் நடைபெற்ற ஆசிய கனிஷ்ட மெய்வாண்மை விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை வீர வீராங்கனைகள் இன்றிரவு நாடு திரும்புகின்றார்கள். இந்த போட்டியில் இலங்கையின் சார்பாக மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலம் அடங்கலாக ஒன்பது பதக்கங்கள் வெல்லப்பட்டன. ஆசிய கனிஷ்ட விளையாட்டுப் போட்டியொன்றில் இலங்கை பெற்ற ஆகக்கூடுதலான பதக்கத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் பையூஜி மகராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியாரான பையூஜி மகராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தோரில் உள்ள தமது வீட்டில் பையூஜி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளார். மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜமீன்தார் குடும்பத்து வாரிசான பையூஜி மகாராஜ் மாடலிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு துறவறம் மேற்கொண்ட பையூஜிக்கு மத்தியப் பிரதேச அரசு சார்பில் கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்க முன் வந்த போதும், இதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இந்தோரில் ஆசிரமம் அமைத்துள்ள பையூஜி ஆடம்பர பங்களா மெரிசிடிஸ் பென்ஸ் கார் சகிதம் ஆடம்பர சாமியாராக வலம் வந்தவர் ஆவார்.


ஸ்ரீதேவியின் மகள் அறிமுகமாகும் திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி அறிமுகமாகும் இந்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாய்ரட் என்ற பெயரில் வெளியாகி மெகா ஹிட் அடித்த மராத்தி மொழி திரைப்படம், இந்தியில் தயாராகியுள்ளது. ”தடக்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் நாயகியாக, நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி அறிமுகமாகிறார். ஜூலை 20ஆம் தேதி வெளியாக உள்ள தடக் திரைப்படத்தின் டிரைலர் நேற்று யூ டியூப்பில் வெளியானது. காதல், இசை, நடனம் என கலகலப்பாக அமைந்துள்ள இந்த டிரைலர், பெரும் வரவேற்பைப் பெற்று வெளியான ஒரே நாளில் ஒரு கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.


மோசடிகளை மறைக்க மஹிந்த அணி சூழ்ச்சி! – அஜித் மான்னப்பெரும

கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கடந்த ஆட்சியாளர்கள் குற்றஞ்சுமத்தி வருகின்றனர் என சுற்றாடல் பிரதியமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டுள்ளார். அர்ஜூன் அலோஸியஸிடம் பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டும் அவ்வாறானதே என அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதியமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் அங்கிருந்து வெளியேறிய அஜித் மான்னப்பெருமவிடம், ”பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியிடம் 118 அரசியல்வாதிகள் பணம்பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நீங்களும் பணம் பெற்றுக்கொண்டீர்களா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”அர்ஜூன் அலோசியஸிடம் பணம் பெற்றதாக சிலர் கூறுவதை வைத்துக்கொண்டே எல்லோரும் கதைக்கின்றனர். அவ்வாறு பணம்பெற்றுக்கொண்டமை தொடர்பாக எவ்வித உத்தியோகபூர்வமான தகவல்களும் இல்லையென சபாநாயகரே அறிவித்துள்ளார். உண்மையில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில்மேலும் படிக்க…


தனித்து ஆட்சியமைக்கவே விரும்புகிறோம்! – நளின் பண்டார

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பாலானவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளதென பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். பொது நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சராக, நளின் பண்டார இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களின் வெற்றிடத்திற்கே நாம் நியமிக்கப்பட்டுள்ளோம். புதிதாக ஒரு அமைச்சுக்கூட உருவாக்கப்படவில்லை. எனினும், சில ஊடகங்கள் இதனை தவறாக சித்தரிக்கின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் சிறப்பாக செயற்பட்டே இந்த நியமனங்களை தற்போது வழங்கியுள்ளனர். இதனூடாக சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. அத்தோடு, கடந்த காலத்தில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அனைவருடனும் கலந்தாலோசித்தே இந்த பதவிகளை வழங்கியுள்ளோம் என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும். இதில் எந்தவொருமேலும் படிக்க…


பாதுகாப்பாக மீட்கப்பட்ட 629 அகதிகள்

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 629 அகதிகளை சர்வதேச தொண்டு நிறுவனமொன்று அவர்களது பொறுப்பில் ஸ்பெயின் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மோல்டோவின் கப்பல் மற்றும் இத்தாலியின் 2 கப்பல்களின் உதவியுடன் ஸ்பெயினுக்கு இவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த அகதிகளை அனுமதிப்பதற்கு இத்தாலி மற்றும் மோல்டோ அரசுகள் மறுத்த போதும் ஒருவாரத்திற்கு முன்பு பதவியேற்ற ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ ஹென்சியூ இவர்களை நாட்டிற்குள் வருவதற்கு அனுமதித்து பாதுகாப்பான துறைமுக வசதிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளமை விசேட அம்சமாகும் 600 அகதிகளுடன் இத்தாலித் துறைமுகம் நோக்கி வந்த ஆளேற்றும் கப்பலொன்றினை இத்தாலி அரசாங்கம் நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்தமையினால் குறித்த கப்பல் நடுக்கடலில் தத்தளித்து வந்தது மால்டோ தீவுகளுக்கு அருகாமையில் உள்ள மத்தியதரைக் கடற்பகுதியில் குறித்த கப்பல் நிலைக்கொண்டிருந்ததையடுத்து மால்டோ தீவிடம் குறித்த அகதிகளை அனுமதிக்குமாறு இத்தாலி அரசாங்கம் கோரிய நிலையில் மால்டோமேலும் படிக்க…


அமெரிக்க- வடகொரிய ஜனாதிபதிகளின் தைரியம் பாராட்டத்தக்கது: தென்கொரியா

அமெரிக்க- வடகொரிய ஜனாதிபதிகளின் தைரியத்தையும், துணிவுமிக்க தீர்மானங்களையும், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் பாராட்டியுள்ளதாக, ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதியின் அறிவிப்பு குறித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி இல்லத்தின் பேச்சாளர் இதனை குறிப்பிட்டுள்ளார். கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கு இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்காவும், வடகொரியாவும் இன்று உறுதியளித்தது. அதன்படி, அதன் பழைய எதிரிக்கு பாதுகாப்பு உதரவாதங்களை வழங்குவதற்கு வொஷிங்டன் உறுதியளித்தது. பல போராட்டங்களுக்கு மத்தியில் ட்ரம்ப்-கிம் வரலாற்று சந்திப்பு இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் அணுவாயுத பயன்பாட்டை நிறுத்துவதை இலக்காக கொண்ட முக்கிய ஆவணமொன்றில் ட்ரம்பும், கிம்மும் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


தமிழக மக்கள் மனங்களில் எந்த கட்சிக்கும் இடமில்லை: ஜெயக்குமார்

தாமரை, சூரியன், மய்யம் எதற்கும் தமிழக மக்கள் மனங்களில் இடமில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கே.வி.கே குப்பத்தில் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் ஜெயக்குமார் அதன்பின்னர் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, அ.தி.மு.க. விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளமை தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர், “அ.தி.மு.க. வை விமர்சனம் செய்பவர்கள் இந்த உலகத்தை உணர்ந்தவர்களாக இல்லை என்றுதான் கூற வேண்டும். மக்களுடன் மக்களாக இருந்தால் அவர்கள் எப்போதும் அ.தி.மு.க-வை ஏற்றுக் கொள்வார்கள். 27 வருடங்களுக்குமேலாக அ.தி.மு.க. தமிழகத்தை ஆட்சி செய்கிறது. வருங்காலத்திலும் அ.தி.மு.க-வே ஆட்சிசெய்யும். தாமரை, சூரியன், மய்யம் எதற்கும் தமிழக மக்கள் மனங்களில் இடமில்லை” என்று தெரிவித்துள்ளார்


அணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும் நன்மைகள் ஏராளம் – டிரம்ப் பேச்சு

அமெரிக்காவும் வடகொரியாவும் இணைந்து புதிய வரலாறு படைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர். பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார். பின்னர் டிரம்ப் பேசியதாவது:- இன்றைய நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான உயர்வான நாளாகும். புதிய வரலாறு படைக்கவும், புதிய அத்தியாயத்தை எழுதவும் நாங்கள் தயாராகி விட்டோம். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்தகாலம் வரையறுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் போரை ஏற்படுத்தலாம். ஆனால், விவேகமானவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.மேலும் படிக்க…


யாழ்.மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி உத்தரவு!

வடமாராட்சி கிழக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் வெளிமாவட்ட மீனவர்களது அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்பான, வட.மாகாண மீனவர்களினது எதிர்ப்பு போராட்டம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது வட.மாகாண மீனவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை காணுமாறு, அமைச்சர்களான மனோ கணேசனுக்கும், விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோருக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, வடமாராட்சி கிழக்கில் அத்துமீறியுள்ள வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் நேற்று ஜனாதிபதிக்கு மகஜரொன்றை கையளித்திருந்தனர். வெளிமாவட்ட மீனவர்களுக்கு எதிராக கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள், வட.மாகாண ஆளுனர் செயலகத்தில் ஜனாதிபதிக்கான தமது மகஜரினை ஆளுனரின் உதவிச்செயலாளர் ஏ.செல்வநாயகத்திடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் – வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை

உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்று அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கிம் ஜாங் அன் பேசுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றும் இந்த சந்திப்பு சிறப்பாக நடப்பதை உறுதி செய்த அமெரிக்கமேலும் படிக்க…


விவசாயத்துறை பிரதி அமைச்சராக அங்கஜன் நியமனம்

அமைச்சரவைக்கு மேலும் சில இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாயத்துறை பிரதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (புதன்கிழமை) இவர் பதவி பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். இரு இராஜாங்க மற்றும் ஐந்து பிரதி அமைச்சர்கள் இன்று புதிதாக நியமிக்கப்பட்டனர். விபரம் வருமாறு: ரஞ்சித் அலுவிஹார – சுற்றுலா அபிவிருத்து மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன் – புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் பிரதியமைச்சர்கள் அஜித் மன்னப்பெறும – சுற்றுச்சூழல் காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகாரங்கள் எட்வட் குணசேகர – உள்நாட்டு அலுவல்கள் மற்றும்மேலும் படிக்க…


16 பேருடன் சந்திப்பில்லை: கோட்டாபய திட்டவட்டம்

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தியை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கோட்டாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளதாக நேற்று பரபரப்பு தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பான செய்தி போலியானது எனத் தெரிவித்து கோட்டாபய நேற்று ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அரசாங்கத்திலிருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை சந்திக்கவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோள் தன்னிடம் முன்வைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில் வல்லுனர்கள், வர்த்தகர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு மக்கள் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது சாதாரண விடயம் என்றபோதிலும், ஊடகங்களில் பிரசாரம் செய்யப்பட்டது போன்று உத்தியோகப்பூர்வ சந்திப்பு எதுவும் இடம்பெறப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி உறுதியளித்த சட்ட மூலங்கள் எங்கே?- ஜே.வி.பி கேள்வி

பிணைமுறி மோசடியால் இழக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தை மீளப்பெறுவதற்காக ஜனாதிபதியினால் உறுதியளிக்கப்பட்ட சட்டமூலங்கள் ஏன் இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. பலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜே.வி.பி.-இன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது மாதம் ஒருமுறை ஆய்வு செய்யப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார். இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன. பெயர்கள் வெளியிடுவது ஒருபுறமிருக்க இழக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தை மீளப்பெறுவதற்கு மூன்று சட்டங்கள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கூறினார். ஆனால் இதுவரை எந்தவொரு சட்டமும்மேலும் படிக்க…


அபாயகரமான பணியில் இலங்கை சிறுவர்கள்!- சர்வதேச தொழிலாளர் அமைப்பு

இலங்கையில் 39 ஆயிரம் சிறுவர்கள் அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. உலக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”உலகளாவிய ரீதியில் 152 மில்லியன் குழந்தைகள், தங்கள் குழுந்தை பருவத்தை அனுபவிக்க முடியாதவாறு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை பெற்றுக் கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டு, அபாயகரமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துரதிஷ்டவசமாக அதிகமான சிறுவர்களை பணிக்கமர்த்தும் பிராந்தியமாக ஆசிய-பசுபிக் அமைந்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுமார் 62.1 மில்லியன் சிறுவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, அதில் 24.8 மில்லியன் பேர் அபாயகரமான வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணியில் அமர்த்தப்பட்டுள்ள குறிப்பிட்ட வயதை எட்டாத சிறுவர்கள், அப்பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இலங்கையில் பெரும்பாலான சிறுவர்கள் அபாயகரமான பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க…


விவசாயிகளை அச்சுறுத்துவது ஜனநாயக விரோத போக்கு- திருநாவுக்கரசர்

8 வழிச்சாலை பசுமை திட்டத்தில் விவசாயிகளை காவல் துறையினர் மூலம் அச்சுறுத்துவது ஜனநாயக மக்கள் விரோத போக்கு என்று திருநாவுக்கரசர் கூறினார். விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆய்வு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ராஜபாளையத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள் காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி, அவர்களின் நிலத்தை அபகரிக்க முயல்வது ஜனநாயக மக்கள் விரோத போக்காகும். சமீப காலமாக சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. இப்பிரச்சனை நிகழாமல் இருக்க மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காவல்துறை எண்ணிக்கையை அதிகரித்து மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்புமேலும் படிக்க…


ஜெயலலிதா பெயரை சொல்லி தமிழகத்தில் துரோக ஆட்சி நடக்கிறது – தினகரன்

தமிழகத்தில் தற்போது ஜெயலலிதாவின் பெயரை சொல்லி துரோகிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- நாம் அனைவரும் மதங்களை கடந்து தமிழர்கள், இந்தியர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு என்றுமே ஆதரவாக இருப்போம். வாக்குவங்கியை மனதில் வைத்துக்கொண்டு இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சிலர் அரசியல் பேசுகின்றனர். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்களுக்கு தெரியும். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வழியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். மதவாத, சாதியமேலும் படிக்க…


டிரம்ப் மற்றும் கிம் சந்திப்பு – உலகம் முழுவதும் பெரிய திரைகளில் பார்த்து ரசித்த மக்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பை உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் ஏராளமானோர் கண்டுகளித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர். சிங்கப்பூரில் குறிப்பிட்ட ஓட்டலை சுற்றி பல்வேறு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் இந்த சந்திப்பை கண்டனர். தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் அந்நாட்டு மக்கள் இருவரது சந்திப்பையும் பார்த்தனர். இதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் டிரம்ப்மேலும் படிக்க…


பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்கா, வடகொரியா இடையே ஒப்பந்தம்

சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் நிறைவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் இருவரும் அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். அதன்பின்னர் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தன. இதற்காக சிங்கப்பூரில் ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டது. எனினும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நீடித்தது. பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு சந்திப்பு உறுதிமேலும் படிக்க…


வட கொரியாவுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் டிரம்ப்

சிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வடகொரிய தலைவருடன் முக்கிய ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்ததாக இருவரும் தெரிவித்தனர். அதன்பின்னர், கிம் ஜாங் அன் – டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். மதிய உணவு அருந்திய பின்னர்மேலும் படிக்க…


டொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை முடிந்தது

சிங்கப்பூர் கேபெல்லா ஓட்டலில் நடைபெற்று வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது. டிரம்பும், கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இவர்கள் தங்களது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகளை நீக்குதல் உள்ளிட்டவை பற்றி பேச உள்ளனர். இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 45 நிமிடம் பேசினர். சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர். இந்த பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்மேலும் படிக்க…


அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு

சிங்கப்பூர் செண்டோசா தீவில் உள்ள ஓட்டலில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்தனர் வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார். இதற்கிடையே, டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சந்திப்பு நடக்கவுள்ள ஓட்டலுக்கு அமெரிக்க அதிபர்மேலும் படிக்க…


சென்னை முதல் சேலம் வரை நக்சலைட்டுகளால் நிரம்பியதா தமிழகம்?


வளர்ச்சி என்ற வார்த்தையை கவர்ச்சியாக பயன்படுத்துகிறீர்கள்..எது வளர்ச்சி? – சீமான் நேர்காணல்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !