Sunday, December 24th, 2017

 

கடவுச்சீட்டு மாற்றத்துக்காக 500 மில்லியன் பவுண்ட் செலவீனம்: போலியான செய்தி

பிரித்தானிய கடவுச்சீட்டில் மேற்கொள்ளப்படும் மாற்றத்துக்காக 500 மில்லியன் பவுண்ட் நிதி செலவாகுமென்பது போலியான தகவலென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறிய பின்னர், பிரித்தானிய கடவுச்சீட்டில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஒக்டோபருக்கு பின்னர், இருண்ட நீல நிறம், தங்க நிறத்தில் பிரித்தானியக் கடவுச்சீட்டு அமையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் பவுண்ட் செலவாகுமென்று டுவீட்டர் செய்தி வெளியாகியிருந்தது. இருப்பினும், இச்செய்தி தவறானதெனவும், அவர் கூறியுள்ளார்.


மாலைதீவு முன்னாள் ஜனாதிபதிக்கு கொழும்பில் உயிர் அச்சுறுத்தல்!

இலங்கை வாழ் மாலைதீவு பிரஜைகளால், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஸீட்டிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனால், மாலைதீவு பிரஜைகளுடன் கொழும்பில் நடைபெறவிருந்த சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மாலைதீவு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள மொஹமட் நஸீட், பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார். இந்நிலையில், மொஹமட் நஸீட் தற்போது இலங்கைக்கு விஜயம் செயதுள்ளார். நாளை மறுதினம், கொழும்பு வாழ் மாலைதீவு பிரஜைகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட மொஹமட் நஸீட்டிற்கு, மாலைதீவு நீதிமன்றம் 13 வருட கால சிறைத்தண்டனை விதித்தது. தண்டனை காலத்தில் மருத்துவ தேவைக்காக பிரித்தானிய சென்றபோதே, அங்கு அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். அதன் பின்னர் அவர் மாலைதீவிற்கு திரும்பவேயில்லை இதேவேளை, இலங்கை பிரதமர் அண்மையில் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த போது, அவருடன் மாலைதீவின்மேலும் படிக்க…


புலம்பெயர் புத்திஜீவிகள் குரல் கொடுக்க வேண்டும்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

புலம்பெயர் புத்திஜீவிகள் எமது மக்களின் உரிமைப் போருக்கு குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் இன்றைய எமது போராட்டப் பாதையில் தம்மையும் இணைத்து கொள்ள வேண்டும் எனவும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.மேத்தா கோரிக்கை விடுத்துள்ளார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு நேற்று (சனிக் கிழமை) பிரான்ஸில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றும்போதே தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டளரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்பபுக் குழுவின் அங்கமான நந்தியார் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு சாந்திக்குமார் ஏற்றி வைத்தார். லெப். கேணல் அன்புக்குமரன் மற்றும் வீரவேங்கை தங்கமணி ஆகியோரின் சகோதரர்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். அதன் பின்னர் அகமேலும் படிக்க…


அனைவரும் சகோதரர்களாக வாழ வேண்டும்: பழனிசாமி

கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இயேசு பிரான் போதித்த தியாகம், மன்னிப்பு, அன்பு, சமாதானம், சேவை மனது போன்றவற்றை பின்பற்றி அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். கிறிஸ்துவ மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் புரட்சித் தலைவி அம்மா. அவர் மூலமாக இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிக்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி முறையில் செயல்படுத்தப்பட்டுவந்தது. அவர் வழியில் தற்போது செயல்படும் தமிழ்நாடு அரசு, தொடர்ந்து இத்திட்டத்தினை திறன்பட செயல்படுத்திவந்ததன் காரணமாக, இதுவரையிலும்மேலும் படிக்க…


அமெரிக்காவால் தேடப்படும் ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறைவு – இரு நாடுகளின் இராஜதந்திர நெருக்கடியில் சிக்கியது இலங்கை…

அமெரிக்காவால் தேடப்படும் கணிணி நிபுணரான ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறவானமை குறித்து அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஸய குடிமகனான இணைய திருட்டின் மூலம் மனோன் பெடெர் ரவுவோவிச் என்ற கணிணி நிபுணர், தனிப்பட்ட தகவல்களையும் நிதி தொடர்பான இரகசியங்களையும் ஹக்கிங் செய்தார் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க புளோரிடா நீதிமன்றம் அவரை நாடுகடத்தவேண்டும் என இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளது. ரஸ்ய குடிமகனான மனோன் பெடெர் ரவுவோவிச் இலங்கையின் வெலிகம பகுதியில் தங்கியிருந்த வேளை கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ளார். இவரை பிணையில் விடுதலை செய்தவேளை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிஜடியினரிடம ஆஜராகவேண்டும் என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் எனினும் அவர் கடந்த 4ம் திகதி சமூகமளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர். இந்தக் கணிணி நிபுணர் தொடர்பான நீதிமன்றமேலும் படிக்க…


மாணவர்கள் இருவர், புதுக்குடியிருப்பு கள்ளியடி பேராற்றில் மூழ்கிப் போயினர்…

புதுக்குடியிருப்பு கள்ளியடி பேராறு பகுதியில் நீராடுவதற்காக சென்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். இந்த சோக சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது. கள்ளியடி வயல் பகுதியில் பேராற்றில் நீராடுவதற்க்காக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் ஏழு மாணவர்கள் சென்றுள்ளனர். ஆற்றில் நீராடி கொண்டிருந்த சமயம் பயிர் செய்கைக்காக வெட்ட பட்ட குன்று ஒன்றில் அகப்பட்டு இரண்டுபேர் மூழ்கி பலியாகியுள்ளனர். அதனை தொடர்ந்து உடன்சென்ற நண்பர்களால் ஏனையவர்களுக்கு தகவல் வழங்கபட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு மக்கள் இணைந்து சில மணி நேர போராட்ட்ங்களுக்கு பின்னர் இருவரின் உடலங்களை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் (2019) வணிக பிரிவில் கல்வி கற்கும் புதுக்குடியிருப்பு சிவநகரை சேர்ந்த 17மேலும் படிக்க…


யாழ் நத்தார் நள்ளிரவு திருப்பலி, புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது

யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.  


ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்து ரோகித் சர்மா புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா பேட்டிங்கில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். குறிப்பாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ரோகித் 264 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையும் அவரையே சேரும். அவர் 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இவரைத்தவிர டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் ஒரே இன்னிங்சில் 16 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான ரோகித் தற்போதுமேலும் படிக்க…


எகிப்து: பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 9 தீவிரவாதிகள் கொன்று குவிப்பு!

எகிப்து நாட்டில் தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து நாட்டில் இயங்கி வருகிற மத அடிப்படையிலான தீவிரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்துகின்றனர். இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஷர்கியா மாகாணத்தில் உள்ள நைல் நதிக்கரையோரத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிப்பதற்காக பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒன்பது தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக எகிப்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். கொல்லப்பட்டது யார் என்பது பற்றி பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது மதமேலும் படிக்க…


தேர்தல் முடிவு: தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்த கூட்டுசதியின் வெளிப்பாடு: ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ் கூட்டறிக்கை

“சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் செய்த கூட்டு சதியின் வெளிப்பாடு. இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு பின்னடைவையோ ஏற்படுத்தாது” என்று ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சட்டமன்ற தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சந்தித்து இருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை தி.மு.க.வுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள். அதேவேளையில், அதற்கு பின்னணியாக தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டுசதியை அறிந்து, பதவி ஆசைக்காக இப்படியும் சதி செய்வார்களா? என்றுமேலும் படிக்க…


பிரபல இசைக்கலைஞர் மீது நான்கு பெண்கள் பாலியல் பலாத்கார புகார்!

சுவிஸின் பிரபல இசைக்கலைஞர் மீது நான்கு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லுசர்நே நகரை சேர்ந்த 81 வயதுடைய சார்லஸ் டுடோய்ட் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர் ஆவார். இவர் பல இசைக் குழு கச்சேரிகளை தலைமை ஏற்று நடத்தி வருகிறார். இந்நிலையில் இசைக்குழுக்களை சேர்ந்த 1 பெண் உட்டபட 3 பாடகிகள் “தங்களை இசையமைப்பாளர் சார்ளஸ் 1985 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரையிலான காலத்தில் அமெரிக்காவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக” குற்றம்சாட்டி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து முக்கிய இசைக்குழுக்களான சான் பிரான்சிஸ்கோ மற்றும் பாஸ்டன் சிம்பொனி இசைக்குழுக்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள இசையமைப்பாளர் சார்லர்சை தங்கள் குழுவிலிருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக இசை குழுவை சார்ந்தவர்கள் தெரிவிக்கையில்:- இந்த குற்றச்சாட்டில் தீவிரமான தன்மை உள்ளதால் இந்த நடவடிக்கைமேலும் படிக்க…


இலங்கை மக்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்: எட்டு பொருட்களுக்கு மானிய விலை!

எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருடப்பிறப்பு பண்டிகை காலத்தை முன்னிட்டு எட்டு அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள நுகர்வோர் வர்த்தக நிலையங்கள் மட்டுமன்றி சிறப்பு அங்காடிகளிலும் இவற்றை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக வணிக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி அனைத்துச் சதோச விற்பனை நிலையங்கள், ஆர்ப்பிகோ, லாப்ஸ், கார்கில்ஸ், கீல்ஸ் ஆகிய சிறப்புச் சந்தைகளில் எட்டு அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளமுடியும். ஒரு கிலோ நாடு அரிசி -74 ரூபா ஒரு கிலோ சம்பா அரிசி – 71 ரூபா ஒரு கிலோ பெரிய வெங்காயம் -135 ரூபா ஒரு கிலோ நெத்திலி – 415 ரூபா ஒரு கிலோ கிழங்கு – 139 ரூபா ஒரு கிலோ சீனி – 100 ரூபா ஒரு கிலோ பருப்பு -124 ரூபா 425மேலும் படிக்க…


அடுத்த தேர்தலில் டி.டி.வி தினகரன்- நாம் தமிழர் கூட்டணி சாத்தியமா?

தினகரனின் வெற்றிக்கு இவர் தான் காரணம் மக்களே!- வீடியோ சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனின் கை ஓங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இவை தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான அவரது ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களால் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பிறகு நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இணைப்பு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, ரெய்டு நடவடிக்கைகள், 2ஜி வழக்கு தீர்ப்பு என்று தமிழக அரசியல் களத்தில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.மேலும் படிக்க…


ஆர்.கே.நகரில் தினகரன் புதிய அவதாரம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தினகரன் புதிய அவதாரம் எடுத்துள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் களத்தின் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி. தினகரன் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி சாதித்து காட்டி உள்ளார். இது ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கும், எதிர்க் கட்சியான தி.மு.க.வுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் அவரது திடீர் மரணத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப் பட்டுவாடா புகாரால் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தல் கடந்த 21-ந்தேதி நடத்தி முடிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா விவகாரம் இந்த தேர்தலிலும் பூதாகரமாக எழுந்தது. ஆனால் அது தேர்தலுக்கு வேட்டு வைக்கவில்லை. பிளவுபட்ட அ.தி.மு.க. அணிகள் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்) இணைந்துமேலும் படிக்க…


அமெரிக்காவில் கிறிஸ்துமஸின் போது தாக்குதல் நடத்த சதி திட்டம் – முன்னாள் கடற்படை வீரர் கைது

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய முன்னாள் கடற்படை வீரர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பியர்-39 என்ற சுற்றுலா தலம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அங்கு ஏராளமானோர் கூடுவார்கள். எனவே அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து புலனாய்வு அமைப்பின் ‘எப்.பி.ஐ’ அதிரடி சோதனையில் ஈடுபட்டது. கலிபோர்னியா மாகாணம் மோடஸ்டோ பகுதியில் நடந்த சோதனையில் எவரிட் ஆரோன் ஜேம்சன் (26) என்பவர் சிக்கினார். அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் உயில் போன்றவை கைப்பற்றப்பட்டது. ஜேம்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பியர்-39 என்ற இடத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார் எனவே அவர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க கடற்படையான மரைன்மேலும் படிக்க…


சுனாமி நினைவுதினம்: மெரினா கடற்கரையில் மீனவர்கள் அஞ்சலிக்கு தடை

னாமி நினைவு தினத்தையொட்டி இந்தாண்டு மெரினா கடற்கரையில் மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்த போலீசார் தடை விதித்துள்ள நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் நடத்த அனுமதி அளித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் கடந்த ஆண்டு நடந்த போராட்டம் போலீசாரை திக்கு முக்காட செய்துவிட்டது. மாணவர்களும், இளைஞர்களும் மெரினா கடற்கரையில் அலை அலையாய் கூடினர். விவேகானந்தர் இல்லம் எதிரில் திரண்ட பல்லாயிரக்கணக்கானோரை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்குள் போலீசார் படாத பாடுபட்டனர். இதன் பிறகு அவ்வப்போது பல்வேறு பிரச்சினைகளுக்காகவும் இளைஞர்கள் மெரினாவில் திரள இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக விவசாயிகள் பிரச்சினை, மீத்தேன் விவகாரம் தொடர்பாக இளைஞர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வெளியான தகவல்களால் மெரினாவில் எப்போதுமே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேப்பியார் பாலத்தில் தொடங்கி கலங்கரை விளக்கம் விரையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மெரினாவில் தடையைமேலும் படிக்க…


6-ம் சுற்று நிறைவு: ஏறுமுகத்தில் டி.டி.வி தினகரன் – தொண்டர்களே காரணம் என்கிறார்

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆறாம் சுற்று முடிவடைந்த நிலையில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தற்போது ஆறாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கீழே:- டி.டி.வி தினகரன்- 29,267 அ.தி.மு.க-15,184 தி.மு.க-7,983 நாம் தமிழர்-1,245 பா.ஜ.க-408 சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார் என்பதுமேலும் படிக்க…


ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கத் தொடங்கியிருக்கிறது… ட்விட்டரில் ராமதாஸ்!

ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் முன்னிலை. ஏற்கனவே கூறியதைப் போன்று ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கத் தொடங்கியிருக்கிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தினகரன் முன்னிலை. ஏற்கனவே கூறியதைப் போன்று ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கத் தொடங்கியிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு குறித்து பதிவிட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 5 வது சுற்று முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 53.16% வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக 25.33% வாக்குகளும், திமுக 13.18% வாக்குகளும் பெற்றுள்ளனர். தினகரனே முதலிடத்தில் உள்ளதால் ஆளுங்கட்சி கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் மதுசூதனனை முதியுள்ளார் தினகரன். தினகரனிடம் மட்டுமல்லாது, ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிடவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது திமுக. எனவே மூன்றாவது இடத்திற்குத்தான்மேலும் படிக்க…


வாழும் எம்.ஜி.ஆராக மாறிய டிடிவி தினகரன்…! ஆதரவாளர்களிடையே ஒலிக்கும் அடையாள முழக்கம்….!

அதிமுகவின் தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்து வந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியை ஆதரித்து வந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக, அணிகளாக பிளவுபட்டது. இதன் பின்னர், அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சி தலைவி அணி என அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஓ.பி.எஸ்., – இ.பி.எஸ்., அணிகள் இணைப்பு நடைபெற்றன. டிடிவி தினகரன் தனித்து விடப்பட்டார். ஜெ. மறைவுக்குப் பிறகு அதிமுக நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆரும், ஜெயா தொலைக்காட்சியும் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்., அணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டு தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகிறார். ஆர்.கே.நகர் தொகுதிமேலும் படிக்க…


இடைத்தேர்தலில் எப்போதுமே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்பது மாயை – டி.ராஜேந்தர்…!

ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சி ஜெயிக்கும் என்பது மாயை எனவும் டிடிவி தினகரன் சரித்தம் படைத்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றது. சசிகலாவே அடுத்த சி.எம் என கூறி வந்த அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி அவரை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவியை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் ஆளுங்கட்சியினர். இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலையையும் கட்சியையும் எடப்பாடி பன்னீர் செல்வம் மீட்டனர். இதையடுத்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதைதொடர்ந்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குமேலும் படிக்க…


4-ம் சுற்று நிறைவு – 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் டி.டி.வி தினகரன் முன்னிலை

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் சுற்று முடிவடைந்த நிலையில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும். பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தற்போது நான்காம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்குகள் கீழே:- டி.டி.வி தினகரன்- 20,298 அ.தி.மு.க-9,672 தி.மு.க-5,091 நாம் தமிழர்-737 பா.ஜ.க-220 சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரன் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார் என்பதுமேலும் படிக்க…


மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைவான வாக்கு: சு.சுவாமி கிண்டல்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவ, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிட குறைவான வாக்குகளே பெற்றுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் , பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று முதல் தினகரனே முன்னிலையில் உள்ளார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் சற்று அதிகரித்து முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் பாஜகவோ நோட்டாவை காட்டிலும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக நோட்டாவை விட வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது. இது பொறுப்புணர்வுக்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். TN BJP record: A national ruling party gets a quarter of NOTA’sமேலும் படிக்க…


200 வருடமானாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது… தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து!

ஆர்.கே நகர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு நடிகர் ராதாரவி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ஆர்.கே நகரில் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் காலையில் இருந்து டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். தற்போது இதுகுறித்து நடிகர் ராதாரவி பேட்டி அளித்து இருக்கிறார். அதில் “ஆர்.கே நகரில் முன்னிலை வகிக்கும் தினகரனுக்கு வாழ்த்துகள். இந்த தேர்தல் மூலம் 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது தெரிய வந்து இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ”ஆர்.கே நகரில் போட்டியிடுவது குறித்து விஷால் தவறான முடிவு எடுத்தார். விஷால் எடுத்த முடிவு போலவே பாஜக போட்டியிட நினைத்த முடிவும் தவறானது” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


நடந்தது தேர்தலே இல்லை.. பதிவானது வாக்குகளே இல்லை.. எனவே பேசவும் ஒன்றுமில்லை: தமிழிசை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி முகத்தை நோக்கி முன்னேறிவரும் நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால் பணப் புழக்கம் எவ்வளவு தூரம் நடந்திருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பாஜக பின்தங்கியிருக்கிறதே என்று நீங்கள் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. ஏனெனில் தமிழகமே தன்மானத்தில் பின்தங்கியிருக்கிறது. அதிமுக, திமுக பின்தங்கியிருக்கின்றன. இங்கு நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை. அதில் பதிவானதும் வாக்குகளே இல்லை. அதனால் கருத்து சொல்வதற்கும் ஒன்றுமில்லை. கடைசி நிமிடம் வரை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எங்கள் வேட்பாளர் புகார் கூறினார். ரூ.20 நோட்டில் பணம் தருவதாக டிடிவி தினகரன் தரப்பினர் எழுதிக்மேலும் படிக்க…


ரஷ்ய- சிறிலங்கா இராஜதந்திர உறவுகளில் குழப்பம் – அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தம்

ரஷ்ய- சிறிலங்கா இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டை முன்னிட்டு, சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்படவிருந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த அஞ்சல் தலையை இடைநிறுத்தி வைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியிருப்பதாக அஞ்சல் மா அதிபர் றோகண அபேரத்ன தெரிவித்தார். எனினும், அதற்கான காரணங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார். சிறிலங்காவின் தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், இருதரப்பு இராஜதந்திர உறவுகளில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள சூழலிலேயே, சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரண்டு அஞ்சல் தலைகளை ரஷ்யா கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.


மீண்டும் ஐதேகவில் இணைகிறார் ரம்புக்வெல?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கண்டியில் எதிர்வரும் ஜனவரி 12ஆம் நாள் ஆரம்பிக்கவுள்ள ஐதேகவின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. 2001-2004 காலப்பகுதியில் ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல, பின்னர் மகிந்த ராஜபக்ச அரசுக்குத் தாவி அமைச்சர் பதவியைப் பெற்றார். அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில், அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி வகித்திருந்தார். தற்போது மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி

உள்ளூராட்சித் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் கட்சி போட்டியிடுவதாக, தமிழ் அரசுக் கட்சியின் இணைச்செயலரும், வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டணியின் மூன்று பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பகிரப்பட்ட ஆசனங்களில், தமிழ் அரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள், ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த வேந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்பட்டு விடக் கூடாது என்பதால் அதனைப் பலப்படுத்துவதற்காகவும், தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவும், தாம் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.


ஜேர்மனி பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை

ஜேர்மனியில் பெண்னை பலாத்காரம் செய்து கொன்ற ரோமானியா லொறி ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜேர்மனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாட்டின் பிரீபெர்க் நகரில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 27 வயதான பெண்ணொருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கேட்டலின் (40) என்ற லொறி ஓட்டுனர் பெண்ணை பலாத்காரம் செய்ததோடு இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த யூன் மாதம் தலைமறைவாக இருந்த கேட்டலின்-ஐ கைது செய்தனர். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த வந்த நிலையில், கடந்த 2014-ல் பிரான்ஸை சேர்ந்த பெண் ஆஸ்திரியாவில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கிலும் கேட்டலினுக்கு சம்மந்தம் இருப்பது தெரிந்தது. இந்த குற்றத்தையும் கேட்டலின் ஒப்பு கொண்டுள்ளதாக ஜேர்மனி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஜேர்மனி பெண் கொலைமேலும் படிக்க…


முன்னாள் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்: தானும் சுட்டுக்கொண்ட பரிதாபம்

பிரான்ஸில் தன் முன்னாள் மனைவியை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் Haute-Savoie பகுதியின் Annecy நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று(23-12-2017) காலை நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அப்பெண்ணின் முன்னாள் கணவரே அவரை சுட்டுக்கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அப்பெண்ணின் உடல் கிடைத்த சில நிமிடங்களில் அந்த நபரின் உடலும் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னாள் மனைவியை ரைபிள் ரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அந்த நபர் தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரிந்ததாக கூறப்படும் இந்த பிரான்ஸ் தம்பதியருக்கு 3 வயதுடைய ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும்மேலும் படிக்க…


கனடாவின் முதல் பெண் மேயர் ஜூன் றோலான்ட்ஸ் மரணம்

ரொறொன்ரோவின் முதல் பெண் மேயர் ஜூன் றோலான்ட்ஸ் தனது 93வது வயதில் மரணமானார். நீண்டகால பராமரிப்பு வசதியில் வியாழக்கிழமை இரவு இறந்து விட்டதாக இவரது மகள் தெரிவத்துள்ளார். 1991மேயராக தெரிவு செய்யப்பட்ட இவர் 1994-வரை பதவி வகித்தார். 1976-ல் மாநகர சபைக்கு தெரிவானதில் ஆரம்பித்த இவரது நீண்ட கால அரசியல் இவர் மேயராகும் வரை நீடித்தது. கவுன்சிலராக இருந்த காலத்தில் நகரத்தின் வரவு செலவுத்திட்ட தலைவராகவும் ரொறொன்ரோ போக்கு வரத்து கமிஷன் மற்றும் மெற்றோ போலிட்டன் ரொறொன்ரோ பொலிஸ் கமிஷன் ஆகியனவற்றின் முதல் பெண் தலைமை அதிகாரியாகவும் இருந்துள்ளார். றோலான்ட்ஸ் வழி கண்டு பிடித்து கூட்டி செல்லும் ஒருவர் என தற்போதைய மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். புது வருட தினத்தன்று ஒரு ஞாபகார்த்த சேவையை நடாத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.  


வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட 19 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

வெளிநாட்டில் இருந்து 19 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 19 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட19 பேரும் நேற்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது தலா 10000 ரூபாய் பிணை மற்றும் 2 இலட்சம் ரூபா 2 சரீர பிணைகளில் விடுவிக்குமாறு மினுவங்கொட நீதவான் ஷிலனி சத்துரன்தி பெரேரா உத்தரவிட்டுள்ளார். இரனவில், கொடிகாமம், திருகோணமலை, புல்மூட்டை, நீர்கொழும்பு, பேருவளை, வென்னப்புவ, உடப்பு, பொத்துவில், மூதூர் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 19 பேருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் மீண்டும் அடுத்த வருடம் ஜுன் மாதம் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனமேலும் படிக்க…


இந்தியர்களை வேலைக்கு அழைக்கும் கனடா அரசு..

டோரண்டோ: வெளிநாட்டு மக்கள் கனடாவில் எளிதாக வேலை பெறும் வகையில் அந்நாட்டு விசா நடைமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக நிறைய இந்தியர்கள் அங்கு எளிதாக வேலை வாங்க முடியும். எச்-1பி விசாவுக்கு எதிராக அமெரிக்கா நிறைய சட்டம் கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. தற்போது கனடாவின் இந்த செய்தி அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதன் காரணமாக இப்போதே பல இந்தியர்கள் கனடா நோக்கி படையெடுக்க சென்றுள்ளனர். இதன்முலம் ஒரே வாரத்திற்குள் கனடாவில் எளிதாக வேலை வாங்கிவிட முடியும். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை முன்னுரிமை அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே வெளிநாட்டு மக்களுக்கு எதிராக பல சட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. ”அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்” என்ற வசனத்துடன் அதிபர் நிறைய திட்டங்களை அறிவித்தார். அதன்படிமேலும் படிக்க…


அரசியலுக்கு லீவு விட்ட உலக ஞானி கமல்ஹாசன்

அரசியல்வாதியாக உருவெடுத்து பெரும் வரவேற்பை பெறுவதென்பது இந்திய அரசியலில் அவ்வளவு சாதாரணமானதில்லை. ஆனால் இந்த மரபை உடைத்துக் காட்டியவர் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களின் அபிமானத்தை வென்றதோடு போட்டியிட்ட இரண்டு தேர்தல்களிலும் முதல்வராக ஆனார். இவருக்கு அடுத்து அப்படியொரு பாக்கியத்தை கைவரப்பெற்றவர் கமல்ஹாசன். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராக ட்விட்டர் ஆயுதத்தை கையிலெடுத்து டிஜிட்டல் அரசியல்வாதியானார். ஆனால் குறுகிய காலத்தில் செம்ம்ம ரீச்சை கண்டார். சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேக்கள் சில அவர் ரஜினியையும் விஞ்சி நிற்பதை காட்டின. தொடர் மீடியா சந்திப்புகள், கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு, விவசாயிகளுடன் ஆலோசனை, அரசியலுக்கு வருவேன் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அண்டை மாநில முதல்வர்களுடன் சந்திப்பு என டாக் ஆஃப் தி நேஷனல் பாலிடிக்ஸாக இருந்தார். ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக திடீரென உலகநாயகனின் தலையை அரசியலரங்கில்மேலும் படிக்க…


பிக் பாஷ் கிரிக்கெட்: லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் வெற்றி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் தொடரின் லீக் போட்டிகளில் பெர்த் ஸ்கார்சர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் 19-ம் தேதி  தொடங்கியது. நேற்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. முதல் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் – பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் சிட்னி மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 18.4 ஓவரில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிட்னி அணியில் நிக் மேடின்சன் 31 ரன்களும், ஸ்வீவ் ஓ கீஃப், சீன் அபோட் ஆகியோர் தலா 23 ரன்களும் எடுத்தனர். பெர்த் அணி தரப்பில் அண்ட்ரூ டை 4மேலும் படிக்க…


40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்ந்தார்

40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் வாட்ஸ்-அப் தகவல் மூலம் மீண்டும் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்தார். கண்ணீர் மல்க உறவினர்கள் அவரை வரவேற்றனர். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவருக்கு இப்ராகிம் ராவுத்தர் (வயது 75), அப்துல் ஹமீத் (67), இஸ்மாயில் (59), பஷீர் அகமது (54) ஆகிய 4 மகன்களும், ஜெயினம்பூ (71) என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் இப்ராகிம் ராவுத்தர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை தேடி வெளியூருக்கு சென்றார். வெளியூர் சென்ற பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு தேடியும் இப்ராகிம் ராவுத்தர் கிடைக்காததால் அவர் உயிருடன் இருக்க மாட்டார் என்று குடும்பத்தினர் கருதினர். இந்த நிலையில் கடந்தமேலும் படிக்க…


ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

ஊழலில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை மறைமலைநகரில் நிம்ரோட் என்ற காண்டிராக்டர் அமைத்த சாலை தரமில்லாமல், சேதமடைந்து விட்டதாக மறைமலைநகர் பேரூராட்சி நிர்வாகம் குற்றம் சாட்டியது. அந்த சாலையை நிம்ரோட் சரி செய்து கொடுக்கவில்லை என்று கூறி அவரது காண்டிராக்ட் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் பேரூராட்சி நிர்வாகம் சேர்த்தது. மேலும், பேரூராட்சி நிர்வாகம் சாலையை சீரமைத்ததில் ஏற்பட்ட செலவு தொகையை காண்டிராக்டர் நிம்ரோட்டிடம் இருந்து வசூலிக்க மறைமலைநகர் பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நிம்ரோட் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பல அதிகாரிகளுக்கு கமிஷன் கொடுத்தது போக மீதமுள்ள தொகையில் தான் சாலை அமைக்கப்பட்டதாகவும், அதிக போக்குவரத்து காரணமாக சாலை சேதமடைந்துள்ளதாகவும்மேலும் படிக்க…


பிலிப்பைன்ஸ்: டெம்பின் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியை தாக்கிய டெம்பின் புயலால் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 20க்கும் புயல்களால் பாதிக்கப்படும் பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியை நேற்று முன்தினம் பிற்பகல் சக்தி வாய்ந்த வெப்பமண்டல புயல் தாக்கியது. இந்த புயலுக்கு டெம்பின் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மிண்டானாவ் தீவை துவம்சம் செய்தது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதியில் குடியிருந்த சுமார் 12 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததால் சில கிராமங்களில் கரை புரண்டு ஓடிய வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. டெல் நார்ட்டேமேலும் படிக்க…


இனவாதத்தை குறிக்கும் ஊசி பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்ட பிரிட்டன் இளவரசி

பக்கிங்காம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விருந்தின்போது இனவாதத்தை குறிக்கும் உடையில் குத்தும் ஊசியை பயன்படுத்தியதற்கு கெண்ட் இளவரசி மேரி கிறிஸ்டின் மன்னிப்பு கேட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பிரட்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் கிறிஸ்துமஸ் விருந்து அளிப்பது வழக்கம். இந்த விருந்தில் அரச குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள். இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக அனைத்து பிரட்டன் அரச குடும்பத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை பிரட்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் ராணி தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது. இதில் கேண்ட் அரண்மனையின் இளவரசியான மேரி கிறிஸ்டின் கலந்துகொண்டார். அவர் இந்த விருந்தில் கலந்து கொண்டபோது ஒரு வித்தியாசமான உடையில் குத்தும் ஊசியை பயன்படுத்தியுள்ளார். அந்த ஊசியானது கருப்பு இனத்தவரை அவமானபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அந்த ஊசியை அவர் உடையில் குத்தியிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதற்கு பலரும்மேலும் படிக்க…


பிலிப்பைன்ஸ்: வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 37 பேர் பலி!

தெற்கு பிலிப்பைன்சின் தவாவோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நகரின் துணை மேயர் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் தவாவோ என்ற நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை ஏராளமான மக்கள் குவிந்தனர். அப்போது அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் எதிர்பாராத விதமாக தீ பிடித்துள்ளது. இந்த தீயானது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியில் ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து, கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. எனவே தொடர்ந்து மீட்புப்பணிகள்மேலும் படிக்க…


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !