Saturday, August 26th, 2017

 

கேபியுடன் தலைவர் பிரபாகரன் உரையாடியதை ஒட்டுக்கேட்டோம் – கோத்தாபய ராஜபக்ஷ!

யுத்தம் நிறைவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் கேபியிற்கும் இடையில் இடம்பெற்ற தொலைத்தொடர்பு உரையை நாம் ஒட்டுக்கேட்டோம் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அதில் யுத்தத்தை கைவிட்டு விட்டு வெளிநாடொன்றுக்கு ஓடி விடுங்கள். பிறகு ஒரு நேரம் வந்து நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரபாகரன், என்னால் நிலைமைகளை மாற்ற முடியும், ஆயுதங்கள் தேவைப்படுகின்றது எனக் கூறினார். இந்த உரையாடலில் இருந்து நாம் விளங்கிக் கொண்டது பிரபாகரனுக்கு ஒருபோதும் சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதாகும் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், இறுதியாக 50 விடுதலைப்புலிகள்மேலும் படிக்க…


திமுக எம்.எல்.ஏக்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு

ஆளுநர் வித்யாசாகர் ராவ் திமுக எம்.எல்.ஏக்களை ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் மாளையில் சந்திக்க உள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். நாளை சென்னை வர உள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை வரவேற்கவே ஆளுநர் சென்னை வந்துள்ளார் என தகவல் வெளியாகி இருந்தாலும், சென்னையில் தங்கியுள்ள ஆளுநரை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தித்து தமிழக சட்டப்பேரவை உடனடியாக கூட்டச்சொல்லி வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு திமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அதையொட்டி, ஆளுநர் திமுக எம்.எல்.ஏக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். அதன்படி, ஆளுநர் வித்யாசாகர் ராவை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30க்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சந்திக்கிறார். துரைமுருகன் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சந்திக்கின்றனர். முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு ஆளுநரைமேலும் படிக்க…


அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் 1989-ல் அதிமுகவில் இணைந்தார். பணகுடி நகரச் செயலாளார், திருநெல்வேலி மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் 2001ல் முதன் முறையாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று போக்குவரத்துத் துறை அமைச்சரானார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான 19 எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே சசிகலா, தினகரனை ஆதரித்து வந்த அதிமுகமேலும் படிக்க…


ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார். அவரை சந்திக்க திமுக நேரம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஓபிஎஸ், எடப்பாடி அணிகள் இணைந்த பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்வர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என கடிதம் கொடுத்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை இழந்துவிட்டதால் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டது. இதே போன்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கோரிக்கை வைத்து ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளன. ஆளுநர் சட்டப்பேரவையை கூட்ட உத்தரவிடாவிட்டால் நாங்கள் குடியரசுத் தலைவரை சந்திப்போம்மேலும் படிக்க…


வட-கிழக்கில் 1,60,000 ஆயிரம் வீடுகள் தேவை – டி.எம்.சுவாமிநாதன்!

வட-கிழக்கு மாகாணங்களில் ஒரு இலட்சத்து அறுபதினாயிரம் வீடுகள் தேவைப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 78 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இவர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கவேண்டுமென்பதே எமது நோக்கமெனவும், அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டிய பொறுப்பு தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று வடக்கில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

சர்வதேச காணாமல்போனோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாள் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வடமாகாணம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்அவர் தெரிவிக்கையில், எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம். அன்றைய தினத்தில் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டத்தில் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். போர் கால பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர். தமிழ் மக்களில் நூற்றுக்கு ஒருவர் அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர். இறுதி போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தும் , இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதில் பலர் குடும்பமாக இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க…


குழந்தையுடன் தொடரூந்துக்கு முன்னால் பாய்ந்த பெண்!

Viry-Châtillon தொடரூந்து நிலையத்தில் வியாழக்கிழமை இரவு பெரும் பரபரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இளம் பெண் ஒருவரையும் அவரது ஏழுமாத குழந்தையையும் காப்பாற்ற காவல்துறையினரும் தொடரூந்துக்கு முன்னால் குதித்துள்ளனர். குறித்த நாள் இரவு, பெண் ஒருவர் RER D வருகைக்காக காத்திருந்துள்ளார். அவருடன் அவரின் 10, 13 வயதுடைய இரு பிள்ளைகளும் 7 மாதம் கொண்ட குழந்தையும் இருந்துள்ளனர். அவரிடம் தொடரூந்து பாதுகாப்பு அதிகாரிகள் பயணச்சீட்டை காண்பிக்கும் படி கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் பயணச்சிட்டை இருக்கவில்லை. அதனால் அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் குறித்த பெண் எந்த பதிலும் அளிக்கவில்லை. பின்னர் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடத்திலும் பேச மறுத்துவிட்டார். அப்போது எதிர்பாரா விதமாக குறித்த பெண், அவரின் ஏழு மாத குழந்தையுடன் தொடரூந்து தண்டவாளத்தில் குதித்துள்ளார். இதனால் அவ்விடம் மிக பரபரப்பானது. அதைத் தொடர்ந்துமேலும் படிக்க…


மக்கள் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்

பாரிசில்  நேற்று வெள்ளிக்கிழமை இரவு மக்கள்மீது பெற்றோல் எரிகுண்டு வீசிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனால் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என காவல்துறைனர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Barbés மெற்றோ நிலையத்துக்கு அருகே நின்றிருந்த மக்கள்மீது நபர் ஒருவர் கண்ணாடி போத்தலில் பெற்றோல் நிரப்பப்பட்ட எரிகுண்டு வீசியுள்ளார். மூன்று தடவைகளுக்கு மேல் இந்த எரிகுண்டை வீசியுள்ளார் எனவும், ஆனால் அதிஷ்ட்டவசமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் காவல்துறையினரால் சிறிது நேரத்துக்குள்ளாக கைது செய்யப்பட்டுள்ளார்.


பெல்ஜியம் நாட்டில் பாதுகாப்பு படையினரை தாக்கி துப்பாக்கிச்சூடு

பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரின் மையப்பகுதியில் பாதுகாப்பு படையினரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார். பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரின் மையப்பகுதியில் பாதுகாப்பு படையினரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு இருமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரின் மையப்பகுதியில் நேற்று பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரை மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளான். பின்னர், தன்னிடமிருந்த துப்பாக்கியால் அங்கு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். ஆனால், இதில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை. அங்கு விரைந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்நபர் பின்னர் உயிரிழந்தான். இது தீவிரவாதமேலும் படிக்க…


எம்.எல்.ஏ.க்களை நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை: புகழேந்தி

எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்டு செய்யும் அதிகாரம் மட்டுமே சபாநாயகருக்கு உள்ளது, நீக்கும் அதிகாரம் இல்லை என்று கர்நாடக அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி கூறினார். புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதற்காக கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி புதுவை வந்தார். அவர் எம்.எல்.ஏ.க்களை சந்தித்ததற்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:- தினகரனை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு அரசு கொறடா பரிந்துரை செய்து இருக்கிறார். எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிப்பதற்கு சபாநாயகருக்குதான் அதிகாரம் உள்ளது என தவறாக கூறுகின்றனர். அவருக்கு சஸ்பெண்டு செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது. பதவியை நீக்கம் செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை. நாங்கள் சபாநாயகரை மதிக்கிறோம். அரசு கொறடா தரும் புகார்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது தவறானது. அவர் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். 19 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாகமேலும் படிக்க…


`கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்த அஜித்தின் `விவேகம்’

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்’ படம் `கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் – அக்‌ஷரா ஹாசன் – விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்நாள் வசூலிலும் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `கபாலி’ படத்தின் முதல்நாள் சாதனையை `விவேகம்’ படம் முறியடித்திருக்கிறது. சென்னையில் `கபாலி’ படம் முதல் நாளில் ரூ.1.12 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், `விவேகம்’ படம் ரூ.1.21 கோடியை வசூலித்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறது. விஜய்யின் தெறி ரூ.1.05 கோடியுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. கேரளாவில் மட்டும் முதல்நாள் வசூலாகமேலும் படிக்க…


விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை: தாயாரை சமாதானப்படுத்திய பேரறிவாளன்

விடுதலை கிடைக்கும் வரை திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறி பேரறிவாளன் தனது தாயாரை சமாதானம் செய்தார். ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவை சேர்ந்தவர் குயில்தாசன் (வயது 76). இவரது மனைவி அற்புதம்மாள் (68). இவர்களுக்கு அன்புமணி (48), பேரறிவாளன் (46) என்ற 2 மகன்களும், அருள்செல்வி (44) என்ற மகளும் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் 19 வயதில் இருந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். பல சட்ட போராட்டங்களுக்கு பிறகே நேற்று முன்தினம் அவருக்கு பரோல் கிடைத்தது. செப்டம்பர் 23-ந் தேதி வரை 30 நாள் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரவு 10-30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் பேரறிவாளன் அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் அவரை ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றனர். அங்குமேலும் படிக்க…


காஷ்மீரில் போலீஸ் குடியிருப்பை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்: பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த இரு மாதங்களில் பலமுறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக தாக்கினர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இன்று காலை சுமார் 4:30 மணியளவில் புல்வாமா மாவட்ட போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியதாக போலீசார் மற்றும் உள்ளூர்மேலும் படிக்க…


சோமாலியா: அமெரிக்க கூட்டுப்படை தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

சோமாலியாவில் அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை எதிர்த்து அல் கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆப்பிரிக்க யூனியனை சேர்ந்த கூட்டுப்படையினர், பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டுப்படையினருக்கு அமெரிக்கா அரசு ஆதரவளித்து வருகிறது. கூட்டுப்படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சோமாலிய தலைநகர் மொகடிஷு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அல் ஷபாப் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று, அப்பகுதியில் கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்மேலும் படிக்க…


உயர்­தர மாணவி வெட்டிக் கொலை

இறக்­கு­வாணை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட எந்­தானை, கொட­கும்­புர பிர­தே­சத்தில் இம்­முறை க.பொ.த உயர்­த­ரத் தில் பரீட்­சைக்கு தோற்றிய மாணவி இனந்­தெ­ரி­யா­தோரால் வெட்டிக் கொலை செய்­யப்­பட்­டுள்ளார். மேற்­படி சம்­பவம் நேற்­றுமுன்தினம் இடம்­பெற்­றுள்­ளது. பெல்­ம­துளை தர்­மா­லோக்க மாகா வித்­தி­யா­ல­யத்தில் க.பொ.தர. உயர்­த­ரத்தில் (கலைப்­பி­ரிவு) கல்வி கற்று இம்­முறை நடை­பெற்று வரும் உயர்­தரப் பரீட்­சைக்கு தோற்றிய் எந்­தானை கொட­கும்­புர பிர­தே­சத்தை சேர்ந்த கே.டபிள்யு.தீபிகா பிய­தர்­ஷனி எனும் 19 வயதடைய  மாண­வியே இவ்­வாறு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். மேற்­படி சம்­பவம் குறித்த மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கொலை செய்­யப்­பட்ட மாண­வியின் தந்தை நேற்­று­முன்­தினம்  காலை வேலைக்கு சென்று விட்டு பகல் 2 மணி­ய­ளவில் வீட்­டுக்கு வந்­த­போது பிள்ளை கழுத்து வெட்­டப்­பட்ட நிலை­யில வீட்டில் பலி­யாகி கிடந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பலி­யான பிள்­ளையின் தாய் இறந்து ஒரு வரு­டமும் ஒரு மாதமும் எனவும் மேலும் தெரி­ய­வந்­துள்­ளது.


நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் மூலம் நாட்டை குழப்புவதற்கு முயற்சி ; விஜயகலா மகேஸ்வரன்

தற்போதைய நிலையில் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை குழப்புவதற்கு தீயசக்திகள் முயல்கின்றன.  நல்லாட்சி அரசாங்கம் ஐந்து வருடங்கள் தனது ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்யும். அரசாங்கத்தின் மக்கள் பணியும் தொடரும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொது எதிரணியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நேற்று நடத்தினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் கருத்து தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராகமேலும் படிக்க…


இனிவரும் காலங்களில் தேர்தல்களில் விருப்புவாக்குகள் இல்லை!

நாடாளுமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் விருப்பு வாக்கு முறைகள் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதனால் ஒரே கட்சிக்குள் மோதல் நிகழ்வதற்கு இடமிருக்காது எனவும், பண விரயமும் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமக்குச் சாதகமாக தேர்தல் முறையை மாற்றி அமைத்தது. அத்துடன், சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தது. விருப்பு வாக்கு முறையினால் பண விரயம் அதிகமாகும். அதனை நீக்கவுள்ளோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள எமது ஆட்சியில், நாம் சிறிய கட்சிகளின் பிரதிநித்துவத்தைப் பாதுகாத்தோம். தனி அதி­கார ஆண­வத்­து­டன் செயற்­ப­ட­வில்லை.மக்­க­ளின் நன்­ம­திப்பைப் பெற்­றுக்­கொள்ளக் கூடிய முறை­யாக புதிய தேர்­தல் முறைமை அமை­யும் எனத் தெரிவித்தார்.


வடகொரியவின் ஏவுகணை சோதனைகள் தோல்வியில் முடிந்தன! – அமெரிக்கா

வடகொரிய ராணுவம், நேற்று நடத்திய மூன்று ஏவுகணை சோதனைகளும் தோல்வியல் முடிந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. தற்போது, போர்பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகள் தோல்வியடைந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரியாவின் கிட்டயராங் பகுதியில் இருந்து மூன்று ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. அந்த ஏவுகணைகளில் முதலாவது மற்றும் மூன்றாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள், பறக்க தவறியதாவும், இரண்டாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணை, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுடன் தொடர் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வடகொரியா இன்று காலை புதியமேலும் படிக்க…


சிறிலங்கா வரலாற்றில் முதல் பெண் நீதியமைச்சர்!

சிறிலங்காவின் முதலாவது பெண் நீதியமைச்சராக தலதா அத்துகோரள சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் நேற்று அமைச்சர் தலதா அத்துகோரள பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 54வயதுடைய தலதா அத்துகோரள சிறிலங்காவின் நீதி அமைச்சராகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். சட்டத்தரணியான தலதா அத்துகோரள, 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார்.


அமெரிக்க லாட்டரியில் ஆஸ்பத்திரி பெண் ஊழியருக்கு ரூ.4940 கோடி பரிசு!

அமெரிக்காவில் ஆஸ்பத்திரி பெண் ஊழியருக்கு ரூ.4940 கோடி ஜாக்பாட் பரிசு லாட்டரியில் கிடைத்தது. அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த பெண் மாவிஸ் எல் வாங்சிக். இவர் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிகிறார். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவில் ‘பவர் பால்’ என்றழைக்கப்படும் மிக அதிக ஜாக்பாட் தொகையுடன் கூடிய லாட்டரி டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது. அதில் அவர் வாங்கிய ஒரு லாட்டரி சீட்டு மூலம் ரூ.4940 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்தது. இதை அறிந்ததும் வாங்சிக் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தனக்கு இவ்வளவு பெரிய தொகையுடன் ஜாக்பாட் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. அந்த தொகையை வைத்து ஏதாவது நல்ல காரியம் செய்ய இருப்பதாகவும் அது குறித்து யோசித்து வருகிறேன் என்றார். அவர் பாஸ்டன் அருகேயுள்ள சிகோபி என்ற நகரில் லாட்டரி சீட்டைமேலும் படிக்க…


கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும்!- சீமான்

ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும் என்று வேதாரண்யத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார். வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது; நீட் தேர்வால் இனி தமிழன் யாரும் மருத்துவராக ஆக முடியாது. நீட் தேர்வு, விவசாயம், மீனவர் பிரச்சனை பற்றி அ.தி.மு.க.விற்கு அக்கறை இல்லை. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடத்தான் நேரம் சரியாக இருக்கிறது. 2 மாதமாக வைகோ கனவில் கருணாநிதி வந்தால் அதன்பேர் கனவா? வயதான காலத்தில் கண்டகண்ட கனவு வருகிறது. கருணாநிதிக்கு பிறகு தி.மு.க.வும் உடையும். தமிழக மீனவர் மீது இலங்கை ராணுவம் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் எல்லைமேலும் படிக்க…


விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி டெல்லியில் தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று சிறிய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் மண் குவியலில் 3 விவசாயிகள் கழுத்து அளவுக்கு புதைந்து தங்களது போராட்டத்தை நூதனமாக வெளிப்படுத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று அவர்கள் சிறிய விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் அருகில் கொட்டப்பட்டிருந்த மண் குவியலில் 3 விவசாயிகள் கழுத்து அளவுக்கு புதைந்து தங்களது போராட்டத்தை நூதனமாக வெளிப்படுத்தினர். அப்போது, காப்பாற்றுங்கள் அய்யா… காப்பாற்றுங்கள்… என அவர்கள் கோஷமிட்டனர். அதை தொடர்ந்து ஜந்தர் மந்தர் சாலையில் விநாயகர் சிலையுடன் விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின்போது, ‘விவசாயிகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல எண்ணத்தை கொடு விநாயகரே’ எனமேலும் படிக்க…


திருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)

பிரான்சில் வசிக்கும் திரு.திருமதி.ஹெங் தம்பதிகளின் செல்வப் புதல்வன் விஷ்ஷத் அவர்களும் திரு.திருமதி.ரவிக்குமார் லாலா தம்பதிகளின் செல்வப் புதல்வி அஷ்வினி அவர்களும் 26ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள். இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் விஷ்ஷத் & அஷ்வினி தம்பதிகளை அன்பு அப்பா, அன்பு அம்மா, மாமா, மாமி, மச்சான்மார், மச்சாள்மார், தம்பிமார், தங்கைமார், அண்ணா, அண்ணி, பெரியம்மாமார், பெரியப்பாமார், மாமாமார், மாமிமார், அன்ரிமார், சித்தப்பாமார், மற்றும் உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள். இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் விஷ்ஷத் & அஷ்வினி தம்பதிகளை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள் TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள். இன்றையமேலும் படிக்க…


எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எல்லை நிர்ணயத்தின் போது யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கணக்கிலெடுக்குமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் முஸ்தபா ஆகியோரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்லை நிர்ணயம்தொடர்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், ‘வெளி­நா­டு­க­ளில் உள்ள 14 லட்­சம் தமிழ் மக்­கள் கணக்­கில் எடுக்­கப்­ப­டா­மல் எல்லை நிர்­ண­யம் மேற்­கொள்­ளப்­பட்­டது. தமிழ் பிர­தி­நித்­து­வம் வெகு­வாக வீழ்ச்­சி­ய­டை­யும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. எல்லை நிர்ணயம் செய்யும்போது இனப் பரம்பல் மற்றும் இடப் பரம்பலைக் கருத்திலெடுத்தே மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால், இவை எவையும் மேற்கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !