2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளும் 16 ஆம் திகதிக்கு பின் ஆரம்பிக்கப்படும் – மன்னாரில் மஹிந்த
நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேளைத்திட்டங்களும் எமது அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னார் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும்,எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரித்த மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியனவில் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இடம்பெற்றது.
சிறிலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தன்,முன்னாள் பிரதி அமைச்சர் பிரபாகணேசன்,சிறி டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா,முன்னாள் வடக்கு கிழக்கு இணைந்த முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்,மன்னார் நகர சபை உறுப்பினர் லெ;வக்குமரன் டிலான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதியும்,எதிர்க் கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உங்களை சந்தித்து உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். கடந்த 30 வருட காலம் யுத்தத்தினால் பாதீக்கப்பட்டீர்கள்.குறித்த யுத்தத்ததை நிறுத்தி அதிலிருந்து விடுதலை பெற்று நாட்டை அபிவிருத்தி செய்தோம்.
இந்த மாவட்டத்தில் வீதி அபிவிருத்திகள் மற்றும் ஏதேனும் அபிவிருத்திகள் இடம் பெற்றிருந்தால் குறித்த அபிவிருத்திகள் அனைத்தும் எனது ஆட்சியின் கீழ் இடம்பெற்றது.
நாங்கள் மக்களுக்காக பல வேளைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தோம். ஆடைத்தொழிற்சாலை உற்பட பல தொழிற்சாலைகளை அமைத்துக் கொடுத்தோம். ஆனால் தற்போதைய காலத்தில் அவை எல்லாம் மூடப்பட்டுள்ளது.
நாங்கள் மக்களை ஏமாற்றுவது இல்லை.நாங்கள் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றி உள்ளோம்.ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு கருத்தையும்,சிங்கள மக்களுக்கு சிங்கள மொழியில் வேறு ஒரு கருத்தையும் சர்வதேச அரங்கிற்கு வேறு ஒரு கருத்தையும் சொல்லி வருகின்றார்.
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்லுகின்றார் ஐக்கியம் என்றால் யுனைட்டட் என்று வராது. அது வேறு ஒரு விடையம் என்று கூறுகின்றார். மக்களை ஏமாற்றுகின்ற ஒரு விதமான வித்தை.
இங்கே பல பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.1500 ரூபாய் நாளாந்த சம்பளம் தருவதாக கூறுகின்றனர்.ஆனால் குறித்த விடையம் அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை.எமது வேட்பாளர் முக்கியமாக அபிவிருத்தி எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது. விவசாயத்துரை, கல்வி, தேசிய நல்லிணக்கத்தை எவ்வாறு கட்டி எழுப்புவது , அச்சமின்றி சுதந்திரமாக எவ்வாறு வாழுவது உள்ளிட்ட சூழ்நிலைகளை எவ்வாறு ஏற்படுத்துவது என்பது தொடர்பாக தெழிவாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமாக எதிர் தரப்பு வேட்பாளர் கூறும் கதையை யாரும் இருந்து கேட்கக்கூடிய கதை இல்லை.நாட்டை பொறுப்பேற்கக்கூடிய ஒருவராய் எவ்வாறு பேசுவது என்று தெரியாதவருக்காய் இந்த நாட்டை ஒப்படைக்கப் போகின்றார்கள் என்கின்ற சந்தேகம் எழுகின்றது.தற்போது பொய்ப் பிரச்சாரம் பல எழுந்துள்ளன.
எங்களுக்குள் உள்ள உறவை குழைப்பதற்கு பொய்ப்பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகின்றது.
இன்று கூறுகின்றனர் கோத்தாபய ராஜபக்ஷ ஒரு அமெரிக்கன் பிரஜை என்று.விமானச்சீட்டு எடுத்துள்ளாராம் வெளி நாட்டிற்கு செல்வதற்க்கு.
அவர் விமானச்சீட்டு எடுத்தது வெளி நாட்டிற்கு செல்வதற்கு இல்லை.எதிர் வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் செல்வதற்கு என்பதனை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
உங்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது.குறிப்பாக காணிப்பிரச்சினை இருக்கின்றது.அந்த பிரச்சினைக்கு நிறந்தர தீர்வை நாம் பெற்றுத்தருவோம் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
புத்தளம்-இளவன் குளம் ஊடாக மன்னாருக்கான வீதியை முன்னுரிமை அழித்து அபிவிருத்தி செய்து தருவோம்.
தற்போதுள்ள பிரதமர் பொய்யான உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே பாதுகாப்பான ஒரு பிரிவை உறுவாக்குவதாகவும், சுபிட்சமான ஒரு முன்னேற்றமான பிரிவை உறுவாக்குவதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறான ஒரு பிரிவு உறுவாக்கப்பட்டுள்ளதா?அவ்வாறான ஒரு பிரிவை எதிர் வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் நாம் உறுவாக்கவோம்.
நாம் முதல் முறையாக 99 வீதமான மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுத்தோம்.அத்தோடு குடி நீர் பிரச்சினை தொடர்பான ஆராய்ந்து வருகின்றோம்.
சுத்தமான குடி நீரை நாங்கள் வழங்குவோம் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
குடி நீர் பிரச்சினை உள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு குடி நீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம்.அதே போன்று தான் 2015 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஒரு அபிவிருத்தி இடம்பெற்று உள்ளதா? ஏன்பதனை நீங்களே உங்கள் மனதை தொட்டு கூறுங்கள்.
எந்த ஒரு அபிவிருத்தி பணிகளும் இடம் பெறாத ஒரு காலப் பகுதியாகத்தான் 2015 ஆம் ஆண்டு முதல் இது வரை கருதப்படுகின்றது.நிறுத்தப்பட்ட அபிவிருத்திகளை மீண்டும் ஆரம்பிப்போம்.மொட்டுச்சின்னத்திற்கு வெற்றி என கூறி எனது உரையை முடித்துக் கொள்ளுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.