Main Menu

20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..!

தமிழ் மொழியை பேச மறந்துவரும் தமிழர்களே. எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும்? “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள்.

ஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவன்தான். இதற்கு காரணம் எம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாததுதான்.

முதலில் நாம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களை 20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லப்போகின்றேன்.

என்னுடன் சேர்ந்து பயணிக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அப்போதுதான் சில உண்மைகள் உங்களுக்கு புரியும்..

“குமரிக்கண்டம்“ இங்குதான் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது குமரிக்கண்டம்.

குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாக கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கூறப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பாகும்.

கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் வாழ்ந்துள்ளார். இங்கு மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றியுள்ளதாக எழுதியுள்ளனர்.

ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்கு உட்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கடந்த1960ஆம் ஆண்டு இந்து மாகடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆய்வில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றார்கள்.

1960 – 1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாகடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது.

அரபிக் கடலுக்கு தெற்கில், இலட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப்பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாக குறிப்பிடுகின்றது.

அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16,008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது.

இடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார் எனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் கூறப்படுகின்றது.

ராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது. திருவிளையாடல் புராணத்தின்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் ராமன், ராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.

சின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுள்ளனர். தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30,000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200 அடி வரை இருக்கிறது.

சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

மேலும் கந்தபுராணம் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் ‘குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் கூறப்படுகின்றது.

சித்தர்கள் சில பேர் குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. முன்று சங்கம் வைத்து தமிழை வளர்த்து வந்தனர் எம் முதாதையர்கள். இந்த 3 சங்கமும் இருந்த கண்டம்தான் குமரிகண்டம்.

சங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாக கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள்.

தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார் கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு கொண்ட கண்டம்.

தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு, கலை மற்றும் இலக்கியம் போன்றன இன்றும் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்ற காரணமான கண்டமாக விளங்கியுள்ளது குமரிக்கண்டம்.

தமிழர்கள் வானியலை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழ் இலக்கியங்கள் மூலமாகவே ஆரிய புராணங்களும் பல அரிய செய்திகளை கடன்பெற்று கதைகளாக உலகிற்கு வழங்கின.

தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, நாலடியார், திருக்குறள் இது போன்ற அரும்பெரும் பொக்கிஷங்கள் தோற்றம் பெற்றகாலம்.

குமரிகண்டம் இலக்கியத்தில் மட்டும் அல்ல, சிற்பம் செதுக்கல்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தன. பார்க்கும் திசைகளில் எல்லாம் சிற்பங்கள் கட்டடங்கள் என குவிக்கப்பட்டிருந்தன.

இந்த அளவு சிறப்பான நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள கோவில்களை இன்று பார்த்தாலும் தொழில்நுட்பம் தோற்றுவிடும் என்பது உறுதி.

அது மட்டும் அல்ல இவ்வாறான கட்டடங்களை அமைக்க 200 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என்பது உண்மையே…

இதற்கு எடுத்துக் காட்டாக தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கூறலாம்.

இதனை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு சிறப்பு அம்சங்கள் பல உண்டு.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப்பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை இராஜ இராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.

அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் இராஜ இராஜன். எதிரியும் மயங்கும் உன்னத கலை அம்சத்தை கொண்டுள்ளது.

அது மட்டும் இல்லை. இந்த தொழில்நுட்ப உலகில் நாம் எல்லாம் உடனடி தீர்வை நாடி இரசாயண மருந்துக்களை பயன்படுத்தி பின்னர் பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடுகின்றது.

ஆனால் அன்று தமிழன் மருத்துவங்களை பயன்படுத்திய விதம் வேறு…? எப்படி கண்டு பிடித்தான் மூலிகைகளை வைத்து தொற்றுநோய் கூட நொடியில் மறைக்க செய்யும் மருந்துகளை..?

இவற்றுக்கு எல்லாம் இன்று கூட விஞ்ஞானம் விடை தேடுகின்றது… எந்த ஒரு தொழில்நுட்ப உதவியும் இன்றி எப்படி அதை தமிழன் கண்டு பிடித்தான்.

இன்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமை கொள்ள வேண்டும். நாம் தமிழனாக பிறந்து விட்டோம் என்று.

பலவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவன்தான் தமிழன். தமிழன் தன் அதீத பகுத்தறிவின் ஊடாக தான் வாழ்ந்த நிலங்களை கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை, என ஐந்து திணைகளாகவும், தமிழ் இலக்கியங்களை அகம் , புறம் எனவும் தமிழரின் கலைகளை இயல், இசை, நாடகம் என்றும் எழுத்துக்களை கூட உயிர், மெய், உயிர் மெய் எனவும் வகுத்தான்.

மொழி அறிவியலை தமிழன் இத்தகைய அளவு கையாண்டதை போல யாரும் கையாலவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.

தமிழன் எப்படி முதலில் தோன்றினானோ அது போலவே தமிழ் மொழியும்தான் முதலில் தோன்றி இருக்க வேண்டும். உலகின் ஆதிமொழி தமிழ்தான் என்பது பலரின் கருத்து.

இத்தனை சிறப்புகளையும் கொண்ட “குமரிக்கண்டம்“ இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் ஒவ்வொரு தமிழனும் தொடர்பு இல்லாதவன் போல சிதைந்து கிடக்கின்றான்.

ஏன் வரலாற்றை தெரிந்து கொள்ள வில்லை. இனியாவது தலை நிமிர்ந்து நில் தமிழனென்று சொல். யாருக்கும் இல்லாத தனிப் பெருமை தமிழனுக்கு உண்டு. இதை காக்க வேண்டிய கட்டாயம் தனி மனிதனுக்கு உண்டு.

பகிரவும்...