200 வருடங்கள் பழமை வாய்ந்த பிரான்ஸ் அரச நகைகளின் ஏல விற்பனை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று 200 வருடங்கள் பழமை வாய்ந்த பிரான்ஸிய அரச நகைகள் ஏல விற்பனைக்கு விடப்படவுள்ளன.

குறித்த நகைகள் பிரான்ஸின் அதிஷ்டமற்ற அரசி என வர்ணிக்கப்பட்ட 16 ஆம் லூயிஸ் மன்னனின் மனைவியான மகாராணி மேரி என்டொய்னெடேயின் நகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணி நகையானது, 49 கரட் இயற்கை முத்துக்கள், இரத்திணங்கள் பதிக்கப்பட்ட நகைகள் மற்றும் மாலைகள், பென்ட்கள், கை வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் போன்ற அனைத்தும் 1.5 டொலர்களிலிருந்து 3 மில்லியன் டொலர் வரை பெறுமதியைக் கொண்டவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிகத்தொன்மையான வரலாற்றுக் கதைகளை அதிகம் தாங்கிய இன்னுமொரு பிரம்மாண்ட ஏல விற்பனை இடம்பெறவுள்ளதாக பிரித்தானிய ஏல விற்பனையகம், குறித்த பிரான்ஸ் ஏல விற்பனையை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் பிரான்ஸ் நாட்டில் பரவலாக இடம்பெற்ற பிரான்ஸிய புரட்சியைத் தொடர்ந்து, கடந்த 1793 ஆம் ஆண்டு தம்பதி இருவரும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !