20 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி – மனோ கணேசன்

நிலையான ஆட்சியை அமைப்பதன் மூலம் எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு தமது அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்வோம் என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சூளுரைத்துள்ளார்.

கொழும்பு – மோதரை கோயிலில் நேற்று (திங்கட்கிழமை) வழிப்பாட்டில் ஈடுபட்ட பின்னர், புதிய பிரதமரின் பதவியேற்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஜனநாயம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அராஜகத்தையும் அநீதியையும் எதிர்த்து நாம் பல போராட்டங்களை முன்னெடுத்தோம். ஜனாதிபதியுடன் போராட்டம் செய்தோம், நீதிமன்றங்களில் நீதிக்காக போராடினோம், தெருக்களில் போராட்டம் செய்தோம், எழுச்சிக்கூட்டங்களை நடத்தி மக்களை ஜனநாயக ரீதியில் அழைத்துச் சென்றோம் இன்று இறுதியாக எமக்கு வெற்றிக் கிடைத்துள்ளது.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றது எமது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியல்ல. அது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றியாகும். அத்தோடு விரைவில் நிலையானதொரு ஆட்சியை அமைக்க தாம் திட்டமிட்டுள்ளோம்.

நிலையான ஆட்சியை அமைப்பதன் மூலம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றிபெற்று, தொடர்ந்தும் 20 வருடங்களுக்கு தமது அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள்வோம்“ என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசிய முன்னனிக்குள்ளேயே இடம்பெற்று வந்த முரண்பாடுகளை தீர்த்துவைத்தமைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

அத்தோடு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்ந்த உறுப்பினர்களை தம்மோடு இணைந்துகொள்ளுமாறும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !