20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தை
தேர்தல் தொடர்பில் ஜனநாயக தேசிய முன்னணியின் பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் மீண்டும் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், தொழிலாளர் தினத்தன்று தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படக்கூடும் என்று அதன் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்தான் அடுத்துவரவிருக்கும் தேர்தலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணி தேர்தல் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிவுக்கு வந்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.