‘2.O’ திரைப்படத்தை பார்வையிட விடுமுறை அறிவித்த பிரபல நிறுவனம்!

லைகா புரடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை பொட்டுக் கொண்டிருக்கும் நிலையில்,ஒரு பிரபல நிறுவனம் ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் – அக்ஷய் குமார் – எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ திரைப்படம் உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படம் முழுக்க முழுக்க 3டி-யில் 4டி சத்தத்துடன் வெளியாகி திரையரங்குகளை அதிரவைததுக் கொண்டுயிருக்கின்றது.

இந்தநிலையில், ரசிகர்கள் திருவிழா போல  ‘2.O’ திரைப்படத்தை கண்டுகளித்து கொண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள். ‘2.O’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் நிலையில்,   திரைப்படத்தை இன்று எப்படியும் பார்த்து விட வேண்டும் என்று  ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றார்கள் . ‘2.O’ திரைப்படத்தை பார்க்கும் முனைப்பில், இன்று வேலை நாள் என்பதானாலும், பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்து ஒரு பிரபல நிறுவனம் ஆச்சர்யத்தை  அளித்துள்ளது.

கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் இவ்வாறு பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !