Main Menu

2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள்(23/12/2015)

தாயகத்தில் இளவாலையைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் பாரிஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று (23/12/2015) அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர். வள்ளியம்மை கதிர்காமு அவர்களை நினைவு கூருபவர்கள்.

அன்புப் பிள்ளைகள் – கருணாகரன் (நோர்வே), பிரபாகரன் (கனடா), பிரேமா (பிரான்ஸ்).

மருமக்கள் – சிவராணி (நோர்வே) , சுதாசினி (கனடா) ,கைலாயநாதன் (பிரான்ஸ்)

பேரப்பிள்ளைகள் – வாகினி , சுபாங்கன் (நோர்வே) ,கோபிதன், ஜஸ்மிதன்,லக்சனா (கனடா) , சாரங்கன், விதுஷன், தீபிகா (பிரான்ஸ்)

மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்புத் தாயை இவ் வேளையில் நினைவு கூருகிறார்கள்.

 

ஆண்டுகள் இரண்டு என்ன 

இரு நூறு ஆண்டுகள் சென்றாலும் 

தேயாத நிலவாய் மனதில் பதிந்தாய் 

ஓயாத நினைவுகளை உள்ளத்தில் தந்தாய்

 

உங்கள் அழகான முகம் அன்பான மனம் 

உங்கள் குழந்தை குணம் கொடுக்கும் குணம் 

இதை எல்லாம் இரசித்துப் பார்க்க 

இந்த ஒரு ஜென்மம் எங்களுக்கு போதாது அம்மா! 

 

அன்பின் உறைவு நீயே 

பண்பின் பொக்கிஷம் நீயே 

உன் நினைவோ எம்மை விட்டு – என்றும் 

அகலாது அணையாது அம்மா!

– இப் பிரிவுத் துயரிலும் நினைவிலும் வாடும்  உங்கள் பிள்ளைகள்

 

2ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து தாயாரை நினைவு கூருகின்றோம்.

இன்று (23/12/2015) எமது வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருபவர்கள்,

அன்புப் பிள்ளைகள்:

கருணாகரன் சிவராணி குடும்பத்தினர். (மகன்)

பிரபாகரன் சுதாசினி குடும்பத்தினர் (மகன்)

கைலாயநாதன் பிரேமா குடும்பத்தினர். (மகள்)

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

bouquet-rond-roses