மே மாதத்தின் முதல் 18 நாட்களில் 80,421 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி,
நாட்டுக்கு அதிகளவாக 27,036 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 33.6 சதவீதம் ஆகும்.
ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,486 பேரும், ஜெர்மனியிலிருந்து 5,164 பேரும், சீனாவிலிருந்து 5,189 பேரும், பங்களாதேஷில் இருந்து 3,863 பேரும் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், மே மாதத்திற்கான அண்மைய புள்ளிவிபரங்களின் படி, 2025 ஆம் ஆண்டில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 977,305 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 184,095 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 109,675 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 92,539 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.