18 எம்.எல்.ஏக்களின் சட்டமன்ற விடுதிக்கு சீல் வைக்க உத்தரவு?

இன்று காலை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவு வந்ததில் இருந்தே தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 பேர்களும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும், சட்டமன்ற விடுதியை உடனடியாக காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் சட்டமன்ற விடுதியை காலி செய்ததும் அந்த அறைகளுக்கு சீல் வைக்கவும் விடுதி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக ஆளுனர் குடியரசு தலைவரை இன்று மாலை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் காரணமாக தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என கருதப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !