18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று மாமிசம் சாப்பிட்ட கணவன்-மனைவி!

ரஷியாவைச் சேர்ந்தவர் டிமிட்ரி பக்சேவ் (35). இவரது மனைவி நடாலியா (48). நர்சாக இருந்தார்.
மனிதர்களை கொன்று அவர்களின் மாமிசத்தை சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டு வந்தனர். இந்த விவரம் வெளியே  தெரிந்தவுடன் அவர்களது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு 8 மனித உறுப்புகள் மற்றும் மனித  சதைகள் இருந்தன.
அவற்றை குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) பதுக்கி வைத்திருந்தனர். சிலவற்றை ஜாடியில் போட்டி ஊறுகாய் போன்று  ஊற வைத்திருந்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதை தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.  அப்போது 30 பேரை கொன்று அவர்களின் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறினார். கடந்த 18 ஆண்டுகளாக இச்செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !