157 பேருடன் எத்தியோப்பிய போயிங் 737 விமானம் விபத்து!

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்து, தகவல் தொடர்பை இழந்தது.

‘‘விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நேரிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது’’ என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்துள்ளது.

விமானத்தில் 149 பயணிகள் இருந்துள்ளனர். விமானிகள் மற்றும் பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர். அவர்களின் நிலை குறித்த தகவல்கள் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !