12 இராசிகளுக்குமான ஆங்கிலப் புத்தாண்டு பொதுப்பலன்கள் 2019

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆரம்பம் போர்! அப்புறம் ஜோர்!

குடும்பத்தினர் மீது பாசம் மிக்க மேஷ ராசி அன்பர்களே! 

நட்புக்கிரகமான  சுக்கிரன் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் நீங்கள் அஞ்ச வேண்டாம். அவரது 7-ம் இடத்துப்பார்வையால் நன்மை காண்பீர்கள்.

எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என கவலை கொள்ள வேண்டாம். அவர்  மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். இது சிறப்பான நிலை. அப்போது அவரால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள்.

நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் கூடும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.
தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.

சனிபகவான்  தனுசு ராசியில் இருப்பதால் எதிரிகளின் இடையூறு தலைதூக்கும், பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
ஆனால் அவர்  சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் 3,7,10-ம் இடங்களை பார்க்கிறார். இந்த மூன்று பார்வைகளும் சிறப்பாக உள்ளது. மேலும்  ஏப்.26 முதல்  செப்.13 வரை வக்கிரம்  அடைந்தாலும் தனுசு ராசியிலேயே இருக்கிறார். இந்த காலகட்டத்தில் கெடுபலன்கள் சற்று குறையும்.

மொத்தத்தில் ஆண்டின் முற்பகுதி சுமாராக இருந்தாலும், அதன் பின் படிப்படியாக நன்மை அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் செலவு அதிகரிக்கும். முயற்சியில் சிறு தடைகள் குறுக்கிடலாம். சமூகத்தில் மதிப்பு சுமாராகத் தான் இருக்கும். ஆனால்  மார்ச் 13க்கு  பிறகு மனதில் தெளிவு பிறக்கும். செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர வசதி பெருகும்.
குடும்பத்தில் கடந்த காலத்தில் இருந்த சண்டை, சச்சரவு மறையும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். உறவினர் வகையில் நல்ல அனுகூலமான போக்கு இருக்கும். அவர்கள் பகையை மறந்து ஒன்று சேருவர். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க வாய்ப்புண்டு. சிலர் வசதியான வீட்டுக்கு குடிபுகுவர்.  மே 19க்கு பிறகு உறவினர் வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை.

பணியாளர்களுக்கு ஆண்டு தொடக்கத்தில் வேலைப்பளு இருக்கலாம்.  வீண்அலைச்சல் ஏற்படலாம். ஆனால் உங்களின் அயராத உழைப்புக்கு தகுந்த பலன்கள் மார்ச்13ல் இருந்து  கிடைக்கும். பணியில் திருப்தி காண்பீர்கள். மேலதிகாரிகள் ஆதரவுடன் செயல்படுவர்.  முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் விடாமுயற்சி செய்தால் மட்டுமே வேலை கிடைக்க வாய்ப்புண்டு. அக்.26க்கு பிறகு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

வியாபாரம் செய்பவர்கள் சீரான வளர்ச்சி காண்பர்.  ராகுவால் எதிரிதொல்லை அவ்வப்போது தலைதூக்கலாம். ஆனால் பிப்.13க்கு  பிறகு பிரச்னை அனைத்தும் தடம் தெரியாமல் மறையும். சிலர் மூலதனத்தை அதிகப்படுத்தி வியாபாரத்தை விரிவுபடுத்துவர். வியாபார விஷயமாக வெளிநாடு செல்ல நேரிடும். பெண்களை பங்குதாரர்களாக கொண்ட வியாபாரம் தழைத்தோங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும்.

வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.  மே 19 முதல் அக்.26 வரை தடைகள் குறுக்கிட்டாலும் வெற்றி காண்பீர்கள்.

குருவின் பார்வைகளால்  தடைகளை தகர்ப்பீர்கள். வீண் விரயம் ஏற்பட வாய்ப்புண்டு. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். செவ்வாயால் ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அரசு வகையில் இருந்த  அனுகூலமற்ற போக்கு மறையும்.

கலைஞர்கள்  அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மார்ச்13ல் இருந்து மே19 வரை ரசிகர்களின் மத்தியில் நற்புகழ் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்க சற்று முயற்சி தேவைப்படும். ஆனால் பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.

மாணவர்கள் சிலர் அலட்சியப் போக்கால் படிப்பில் கவனம் செலுத்தாமல் போகலாம். இருப்பினும் குருவின் பார்வையால்  ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிறப்பான பலனைக் காணலாம். தேக்கநிலை மறையும். மேற்படிப்பு தொடரும். விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகள்  பிப்.13க்கு  பிறகு நற்பலனைக் காணலாம். நவீன வேளாண்மையை பின்பற்றி அதிக மகசூலும், வருமானமும் காண்பர்.

பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும். வீட்டுக்கு வெளியில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். மார்ச் 13ல் இருந்து மே19 வரை ஆன்மிக சிந்தனை மேலோங்கும். குடும்பத்துடன் புண்ணியத்தலங்களுக்கு சென்று வருவர். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பர்.

பரிகாரம்:

*  சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை
*  வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை வழிபாடு
*  சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) குருவால் குதூகலம்

கலை ரசனையுடன் செயல்பட்டு வரும் ரிஷப ராசி அன்பர்களே! 

ராசிக்கு நட்பு கிரகமான குருபகவான் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம் சிறப்பாக அமையும். 7-ம் இடத்தில் இருந்து குரு பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். அவரால் பொருளாதாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் குருவின் 5-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் கையில் அதிகரிக்கும்.  ஆடம்பர வசதி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு உயர்வு கிடைக்கும். குருபகவான்  மார்ச் 13ல் இருந்து மே 19வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அப்போது அவரால் நன்மை தர இயலாது. இந்நிலையில் பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதம் ஏற்படும். வாழ்வில் பல்வேறு தொல்லைகளை கொடுப்பார். ஆனால் அவரது 7-ம் இடத்துப்பார்வை மூலம் பிரச்னையை முறியடிக்கும் வலிமை கிடைக்கும். ஆற்றல் மேம்படும்.  மந்த நிலை மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவால் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. மேலும் அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

சனிபகவான் தற்போது 8-ம் இடமான தனுசு ராசியில் இருப்பது அவ்வளவு சிறப்பானதல்ல. அவர் முயற்சிகளில் சிறுதடைகளை உருவாக்குவார்.  உறவினர் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை வரலாம். ஏப்.26 முதல்  செப்.13 வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். ஆனால் கெடுபலன்கள் நடக்காது.

குடும்பத்தில் தெய்வ அனுகூலம் இருக்கும். மனதில் பக்தி உயர்வு மேம்படும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். எடுத்த முயற்சி வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.  பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. உறவினர்கள் வருகையும்  அவர்களால் நன்மையும் கிடைக்கும். மேலும் குருபகவானின் 5-ம் இடத்துப்பார்வை மூலம்  பொருளாதாரம்  மேம்படும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை  குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடலாம். கணவன்-, மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பொருள் இழப்பு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு  வரலாம். இருப்பினும் அவரது 7-ம் இடத்து பார்வையால் கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னைக்கு  தீர்வு கிடைக்கும்.

பணியாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் குருவின் பலத்தால் நல்ல வளத்தைக் காணலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக செயல்படுவர்.  சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.  மார்ச் 13ல் இருந்து மே 19 வரை வேலையில் பளு குறுக்கிடலாம். சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடலாம்.
அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். அவர்களுக்கு சலுகை, கடன் போன்ற கோரிக்கைகள் நிறைவேற தாமதமாகும். அக்.26க்கு பிறகு நிலைமை சீராகும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கோரிக்கைகள் நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல. பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரிகள் ராகுவால் தற்போது சீரான நிலையில் இருப்பர். நஷ்டம் தவிர்க்கப்படும். வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மார்ச் 13-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை ஓய்வு என்பதே இல்லாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை இழக்க நேரிடலாம். வீண் அலைச்சல் ஏற்படலாம். அரசு வகையில் எந்த உதவியும் கிடைக்காமல் போகலாம். மேலும் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.  சிலர் தற்போதுள்ள இடத்தை வேறு இடத்துக்கு மாற்றும் நிலை ஏற்படலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். எது எப்படியானாலும் அக்டோபர் 26-ந் தேதி முதல் உங்கள் நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். அதன்பின் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய வியாபாரத்தை தொடங்கலாம். வேலையின்றி இருப்பவர்கள் தொழில் ஆரம்பிக்கலாம்.

கலைஞர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சமூகத்தில் மதிப்பு பாராட்டு வந்து சேரும். சிலருக்கு அரசிடமிருந்து விருது, பட்டம் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல வளத்தைக் காண்பர்.
புதிய பதவி தேடிவரும். ஆனால் மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை சிரத்தை எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களுக்காக பணம் செலவழிக்க நேரிடும்.

மாணவர்கள் தேர்வில் தேர்ச்சியும், நல்ல மதிப்பெண்களும் பெறுவர். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம். சிலர் தகாதவர்களோடு சேர வாய்ப்புண்டு.
கவனம் தேவை. மே 19க்கு  பிறகு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் சேரும் பாக்கியம் உண்டு.

விவசாயிகள் ஆண்டின் தொடக்கத்திலும், இறுதியிலும் நல்ல பலனைக் காணலாம். மார்ச் 13 வரை நெல், கேழ்வரகு, பழ வகைகள், சோளம் போன்றவற்றின் மூலம் சிறப்பான மகசூல் கிடைக்கும். வழக்குகளின் முடிவு சாதகமாக அமையும். மார்ச் 13  முதல்  மே 19- வரை கால்நடை வளர்ப்பின் மூலம் அவ்வளவாக வருமானம் கிடைக்காது. வழக்கு,  விவகாரங்களில் சிலர் தங்கள் கையிருப்பை இழக்க நேரிடலாம். ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எள், உளுந்து, கொள்ளு, பனை போன்றவற்றில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு.

பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவர். உறவினர்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகிடைக்கும். கணவன் மற்றும் குழந்தைகளுடன் புனித தலங்களுக்கு சென்று வருவர். மார்ச் 13 முதல்  மே 19 வரை கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

பரிகாரம்:

*  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை
*  அஷ்டமியன்று பைரவருக்கு வடைமாலை
*  சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம்

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சோதனை என்றாலும் சாதனை படைப்பீங்க!

அனைவரிடமும் இதமாக பேசி பழகும் மிதுன ராசி அன்பர்களே

இந்த ஆண்டு தொடக்கம் சற்று சுமாராகவே இருக்கும். குருபகவான் 6-ம் இடத்தில் இருந்து மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார்  ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை சாதகமாக உள்ளது. குருவின் பார்வை மூலம் எந்த இடையூறையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் குருபகவான் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அப்போது அவர் நன்மை தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வாய்ப்பு, வசதிகள் பெருகும். பணியாளர்கள் உயர்வு பெறுவர்.

சனிபகவான் தற்போது 7-ம் இடமான தனுசு ராசியில் உள்ளார். இது சிறப்பானதல்ல. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில்  பிரச்னையை உருவாக்குவார். வீண்அலைச்சல் அதிகரிக்கும் வெளியூரில் தங்க நேரிடும். தீயோர் சேர்க்கையால் அவதியுறலாம். ஆனால் இந்த பொதுபலன்களைக் கண்டு
அஞ்ச வேண்டாம். சனிபகவான்  ஏப். 26 முதல்  செப்.13 வரை  வக்கிரம் அடைகிறார். இந்நிலையில் சனியால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில்  வக்ரத்தில் சிக்கும் போது கெடு பலன்கள் சற்று குறையும். மொத்தத்தில் சோதனை என்றாலும் வாழ்வில் சாதனையாளராகத் திகழ்வீர்கள்.

மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
ஆண்டின் தொடக்கத்தில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.  முக்கிய விஷயங்களில் குடும்ப பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகலாம். குருபகவானின் 9-ம் இடத்துப்பார்வை மூலம் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். அக்கம்பக்கத்தினர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
மார்ச் 13க்கு பிறகு பெண்களால் மேன்மை கிடைக்கும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். அதே நேரம் மே 19ல்  இருந்து அக்.26 வரை வீண்விவாதங்களை தவிர்க்கவும். கணவன்-, மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. நவம்பர்,டிசம்பர் மாதங்களில் பிரிந்திருந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சிலர் பதவியையோ அல்லது தாங்கள் வகித்து வந்த பொறுப்பையோ விட்டுவிடும் நிலை ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.

மார்ச் 13 முதல் மே 19 வரை  கூடுதல் நன்மையை எதிர்பார்க்கலாம். வேலையில் இருந்த தடைகள், திருப்தியின்மை  மறையும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக  செயல்படுவர். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். உங்களை பற்றி புரியாதவர்கள் கூட அனுசரணையாக நடந்து கொள்வர். உங்கள் திறமை பளிச்சிடும்.
சிலர் விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கப் பெறலாம். சம்பள உயர்வு கிடைக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்போருக்கு சிறப்பானதாக அமையும். மே 19 முதல் அக்டோபர் 26 வரை அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். அதன் பிறகு சக பெண்ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.  அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி எளிதில் கிடைக்கும். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை பெறுவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.

வியாபாரிகள்  சொல்ல முடியாத அளவுக்கு சிரமம் சந்தித்திருக்கலாம். எதைத் தொட்டாலும் வளர்ச்சியை விட சறுக்கலே அதிகமாக இருந்திருக்கும். வெளியூர் பயணம் வீணாக போயிருக்கும். மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
நீங்கள் பட்ட கடனை திருப்பி செலுத்தலாம். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. உங்களுக்கு பகைவர்களாக இருந்தவர்கள் உங்களை உணர்ந்து உங்களிடம் சரணடைவர். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். காய்கறி, தானியம், பாத்திர வியாபாரம் நன்கு வளர்ச்சி அடையும். இரும்பு தொடர்பான வியாபாரத்தை செய்பவர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
புதிய வியாபாரத்தை குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம்.
கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைப்பது அரிது. மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை சிறப்பான நிலையில் இருப்பர். கடந்த சிலமாதங்களாக கிடைக்காமல் போன பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள்,  சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனைக் காணலாம். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.

மாணவர்களுக்கு இந்த ஆண்டு சுமாராகத் தான் இருக்கும். அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். தேர்வு முடிவுகள் பாதகமாக அமைய வாய்ப்பு இல்லை. குருவின் பார்வையால் வெற்றி கிடைக்கும்.
ஆனால் அடுத்த கல்வி ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமையும்.
விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். நஷ்டம் என்ற நிலை  இருக்காது. செலவு அதிகம் பிடிக்கும் பணப்பயிரை தவிர்க்கவும். மார்ச் 13ல் இருந்து மே 19வரை நெல், சோளம் கொள்ளு, பழ வகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.
கைத்தொழில் செய்வோர் மனதில் நிம்மதி அடைவர். சேமிப்பு அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்காக விட்டுக் கொடுத்து போகவும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை பிள்ளைகளால் பெருமை காண்பர். புத்தாடை, அணிகலன்கள், ஆடம்பர பொருள் அதிகம் வாங்குவீர்கள். வேலையில் இருக்கும் பெண்கள் மேன்மை அடைவர். ஆகஸ்ட், செப்டம்பர்  மாதங்களில் வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர்.

பரிகாரம்:

*  வெள்ளியன்று மகாலட்சுமிக்கு நெய் விளக்கு
*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
*  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று

மனஉறுதியுடன்  செயல்பட்டு வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே! 

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு சனிபகவானின் நற்கருணையோடு இந்த புத்தாண்டு தொடங்குகிறது. ஆண்டின் பெரும்பாலான காலத்தில் அவரால் நன்மை உண்டாகும். குருபகவான் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருவார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் அவரது 5,7-ம் இடத்துப் பார்வைகள் சாதகமாக உள்ளதால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். ஆனால் குருபகவான் மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசிக்கு செல்வதால் நற்பலன் சற்று குறையலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். மனதில் தளர்ச்சி ஏற்படலாம்.

சனிபகவான் 6-ம் இடமான தனுசு ராசியில் நின்று நன்மைகளை வாரி வழங்குகிறார். முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார்.  பணப்புழக்கத்தைக் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இடம் தெரியாமல் ஆக்குவீர்கள். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் பொருளாதார வளம், காரிய அனுகூலம் உண்டாகும்.  தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். ஆனால் சனி ஏப்.26 முதல்  செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இதனால் அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம்.

மொத்தத்தில் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக்காற்று உங்கள் பக்கம் வீசும். ஆண்டுத்தொடக்கத்தில் கூடுதல் பலன் கிடைக்கும். அதற்காக பிற்பகுதியில் சுமாரான பலனோ எனக் கவலை கொள்ள வேண்டாம். எல்லாச் செயல்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தடைகள் வந்தாலும் அதை துாசி போல துடைத்தெறிவீர்கள். பொருளாதார வளம் இருந்து கொண்டே இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அவ்வப்போது செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கத் தான் செய்யும். மக்கள் மத்தியில் மதிப்பு உயரும். மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை மற்றவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். தம்பதியிடையே ஒற்றுமை ஏற்படும். புதிய சொத்து, வீடு, மனை வாங்க யோகம் உண்டு. கார், டூ வீலர் போன்ற வாகனங்களும் வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் மார்ச் 13க்குள் நல்ல வரனாக அமையும். அதன் பிறகு  அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து போகவும். தம்பதியிடையே மனக்கசப்புகள் வரலாம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். மே 19 முதல் அக்.26 வரை கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும்.

பணியாளர்கள் வேலையில் சீரான முன்னேற்றம் காண்பர். பணியிடத்தில் திறமை பளிச்சிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தானாக வரும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். ஆனால் மார்ச் 13 முதல்  மே 19 வரை வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். சிலர் மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பர். உங்கள் வேலையை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. மே 19 முதல் அக். 26-ந் தேதி வேலைப்பளு குறையும்.  சக பெண் ஊழியர்கள்  ஆதரவுடன் செயல்படுவர்.  பிப்.13க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும்.

வியாபாரிகள் சிறப்பான நிலையில் இருப்பர்.  புதிய வியாபார முயற்சி அனுகூலத்தை தரும். வியாபாரத்தை மேலும் விரிவுப்படுத்த லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும். வாடிக்கையாளர்களிடம் மதிப்பு உயரும்.
அரசிடம் இருந்து  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள்  சுயதொழில் தொடங்க வாய்ப்புண்டு. அதுவும் மார்ச் மாதத்துக்குள் ஆரம்பிப்பது நல்லது. மார்ச் 13 முதல்  மே 19-ந் தேதி வரை சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும்.

கலைஞர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவர்.  புதிய ஒப்பந்தங்கள் தடையின்றி கிடைக்கும். அரசிடமிருந்து விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு.  சிலர்  தொழில்ரீதியாக வெளிநாடு சென்று வரலாம். ஆனால் மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக கூடுதல் முயற்சி தேவைப்படும். அப்போது பணப்புழக்கத்திற்கு குறைவிருக்காது.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி, பாராட்டு கிடைக்கப் பெறுவர். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆனால் மார்ச் 13ல் இருந்து மே19 வரை விடாமுயற்சி தேவைப்படும். ஆனால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர்வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்

விவசாயிகள் சீரான முன்னேற்றம் காண்பர். ஆண்டின் தொடக்கத்தில் நெல், கோதுமை, கொண்டைகடலை, எள்,  கொள்ளு, பயறு வகைகளில் நல்ல  மகசூலைப் பெறுவர்.
மண்ணில் எதைப் போட்டாலும் அது பொன்னாக மாறும் காலம். புதிய சொத்துகள் வாங்கலாம். சிலர் நவீன விவசாயத்தை பயன்படுத்தி  வருமானத்தை பெருக்குவர். கூலி வேலை செய்பவர்கள் மன நிம்மதியும், பொருள் சேர்க்கையும் காண்பர்.
பிப்.12க்கு  பிறகு வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குதூகலமாக காணப்படுவர். குடும்பத்தில் உங்களது கை ஓங்கி நிற்கும்.  கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
பிள்ளைகளால் பெருமை சேரும். புத்தாடை, அணிகலன்கள் வாங்குவர். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர்.  சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வர். பெண்காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அக்கம்பக்கத்தினரால் தொல்லை ஏற்படலாம்.

உடல்நலம் சிறப்பாக இருக்கும். நோய்நொடி பறந்தோடும். ஆனால் மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை சிலர் வீண் கவலைக்கு ஆளாகலாம்.

பரிகாரம்:

*  திங்கட்கிழமையில் சிவாலய தரிசனம்
*  ராகு காலத்தில் காலபைரவர் வழிபாடு
*  செவ்வாயன்று முருகனுக்கு அபிஷேகம்

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சவாலே சமாளி சாதிக்கப் பலவழி

திறமையால் பிறரைக் கவரும் சிம்ம ராசி அன்பர்களே! 

ராசிக்கு 6-ம் இடத்தில் இருக்கும் கேதுவால் செயலில் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி பெற்றிருப்பீர்கள். மற்ற முக்கிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கேதுவின் பலத்தால் கடந்த ஆண்டு கவுரவமாக வாழ்ந்திருப்பீர்கள். இந்நிலையில் தான் இந்த ஆண்டு மலர்கிறது.

குரு 4-ம் இடமான விருச்சிக ராசியில் இருந்து மன உளைச்சல், உறவினர் வகையில் வீண்பகையை உருவாக்குவார். ஆனால் அவர் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசிக்கு செல்லும் போது குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக உள்ளதால்  நற்பலனைக் காணலாம்.  புதிய பதவி கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். வருமான உயர்வால் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

சனிபகவான் தற்போது 5-ம் இடமான தனுசு ராசியில் இருப்பது சிறப்பான இடம் அல்ல.  மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில்  இனம் புரியாத வேதனை குடிகொள்ளலாம். குடும்பத்தில் பிரச்னை குறுக்கிடலாம். சனி திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளதால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம்.
மேலும் சனிபகவான் ஏப்.26 முதல்  செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் கெடுபலன் சற்று குறையும். மொத்தத்தில் இந்த ஆண்டு எதிர்வரும் சவால்களை சமாளித்து  பலவழிகளிலும் சாதனை படைப்பீர்கள்.

மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
ஆண்டின் தொடக்கத்தில் கேதுவும், மத்திய பகுதியில் குருபகவானும், பிற்பகுதியில் ராகுவும் உறுதுணையாக இருப்பர்.
பொருளாதார வளம் சிறக்கும். அதே நேரத்தில் செலவுக்கும் பஞ்சமிருக்காது.  எனவே சிக்கனமாக இருப்பது நல்லது. மார்ச் 13 வரை  மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது.
வீண்விவாதத்தை தவிர்த்து பொறுமையாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். மார்ச் 13 முதல்  மே 19 வரை வீட்டில் சந்தோஷம் மேலோங்கும். தடைபட்ட திருமணம் போன்ற
சுபவிஷயங்கள் நடந்தேறும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். சிலர் தற்போதுள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடிபோகலாம். புதிய வாகனம் வாங்கலாம்.

பணியாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் சீரான நிலையில் இருப்பர். வேலைப்பளு கூடும். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். சக ஊழியர்களின் உதவியை நாடாமல் இருப்பது நல்லது. ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை உங்களுக்கு சாதகமான காற்று வீசும்.
மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு  கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். வேலையின்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உழைப்புக்கு ஏற்ப ஆதாயம் கிடைக்காமல் இருந்த நிலை மாறும்.  மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை தானிய வியாபாரம், தங்கம், மற்றும் உலோக வியாபாரம் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு எதிரிகளால் இடையூறு வரலாம். அதை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். நவம்பர், டிசம்பர், மாதங்களில் வெகுவான முன்னேற்றம் ஏற்படும். அரசு வகையில் உதவி கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கலாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேற்றம் காண்பர்.  சிலர் தொழில் விஷயமாக வெளிநாடுகளுக்கு செல்வர். ஆனால் மே 19  முதல் அக்.26  வரை  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். தட்டி பறிக்கப்பட்ட புகழ், பாராட்டு எல்லாம் மே மாதத்திற்கு பிறகு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள்  உன்னத நிலை அடைவர்.  எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். பிப்.13க்கு பிறகு பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.

மாணவர்கள் மார்ச் 12 வரை  சிரத்தை எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் குருவின் பார்வையால்  உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.அதன் பிறகு கல்வியில் வளர்ச்சி காணலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் ஏற்படும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம்.

விவசாயிகள் சீரான வருவாய் காண்பர்.  கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். மானாவாரி பயிர்களின் மூலம் வருமானம் காணலாம். ஆனால் பிப். 13க்கு பிறகு நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும். ஆண்டின் இறுதியில் புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான முடிவு கிடைக்கும்.  கைவிட்டுப்போன சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஆடம்பர செலவை தவிர்க்கவும். வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.  உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது. மார்ச் 13ல் இருந்து மே 19 வரை  நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.  தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும்.
தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.  சகோதர வகையில் உதவி கிடைக்கும்.  அண்டைவீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர்.

பரிகாரம்:

*  சனியன்று சனீஸ்வரருக்கு  எள் தீபம்
*  ஏகாதசியன்று பெருமாளுக்கு துளசி அர்ச்சனை
*  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு

கன்னி: (உத்திரம் 2,3,4 அஸ்தம், சித்திரை 1,2) சிந்தித்து செயல்பட்டால் சிகரம் தொடலாம்

பெற்றோர் மீது அதிக பாசத்துடன் நடக்கும் கன்னி ராசி அன்பர்களே! 

உங்கள் ராசிநாதன் புதன் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எனவே அவர் உங்களை நல்வழியில் அழைத்து செல்வார். உங்களுக்கு தற்போது 11-ம் இடத்தில் இருக்கும் ராகு  மூலம் காரிய அனுகூலம், பொருளாதார வளம் கிடைத்துக் கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பணஉதவி கிடைக்கும்.

குருவால் அவ்வப்போது தடைகள் குறுக்கிடலாம்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. இப்படி குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைகள் சிறப்பாக உள்ளன. எந்த இடையூறையும் அவரது பார்வை பலத்தால் உடைத்து எறிவீர்கள்.   2019 மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் குரு இருப்பதும் சிறப்பானது அல்ல. அவரால் மன உளைச்சல், உறவினர் வகையில் வீண்பகை உண்டாகும்.

சனிபகவான் தற்போது 4-ம் இடத்தில் இருப்பது சிறப்பான இடம் என சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் சனி இருக்கும் போது  வீண் விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும். தாயைப் பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை  மூலம் நன்மையை எதிர்பார்க்கலாம். மேலும் சனிபகவான் ஏப்.26 முதல்  செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். அப்போது அவரால் சிறப்பாக செயல்பட முடியாது.

ஆண்டின் தொடக்கத்தில் பிற்பகுதியில் ராகுவால் நல்ல பொருளாதார வளம் பெருகும். தேவைகள் அனைத்தும் தடையின்றி கிடைக்கும். எடுத்த செயலைச் செய்து
முடிக்கும் வல்லமை உண்டாகும். வாழ்வில் குறுக்கிடும் தடைளை சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். குருவின் பார்வையால் சிலருக்கு வீடு, மனை வாங்க யோகம் கூடி வரும். புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகும். மதிப்பு, மரியாதை சிறக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மார்ச் 13க்கு பிறகு வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை குரு நடத்தி வைப்பார். பெண்களால் மேன்மை கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர்.  புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மார்ச் 13 முதல் மே 19 வரை சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம்.
கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது. சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். அண்டை வீட்டார் வகையில் வீண்பகை ஏற்படலாம். ஆண்டின் இறுதியில் குடும்பத்தில்  பிரச்னைகள் தலைதூக்கினாலும்  விட்டுக் கொடுக்கும் பக்குவத்தால்  சமாளித்து முன்னேறுவீர்கள்.

பணியாளர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் தன்னம் பிக்கையுடன் ஈடுபடுவர். வேலைப்பளு குறையும்.  குருவின் பார்வை பலத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் வரும். சகஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில்  வேலை கிடைக்கும்.
ஆனால் மார்ச் 13 முதல்  மே 19 வரை சிலருக்கு வேலையில் வெறுப்பு வரலாம். வேலையில் பணிச்சுமை கூடும். அதன்பின் மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். ஆனால் சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்.

மே 20-ந் தேதியில் இருந்து சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலையில் ஆர்வம் பிறக்கும்.
கோரிக்கைகள் நிறைவேறும். விருப்பமான இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். ஜுன்,ஜூலை மாதங்களில் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

வியாபாரம் சீரான வளர்ச்சி பெறும். ஆனால் உழைப்புக்கு ஏற்ப வருமானத்தை காணலாம். புதிய வியாபாரத்தை தொடங்குவதை விட இருப்பதைச் சிறப்பாக நடத்துவது நல்லது. கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலப்படும்.  நிர்வாகத்தில் திடீர் செலவு ஏற்படலாம். செலவில் சிக்கனம் பின்பற்றவும்.  மார்ச் 13க்குள் அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். கடன், வங்கி நிதியுதவி போன்றவை கிடைக்கப் பெறலாம். எதிரிகள் தொல்லை இருந்தாலும் சாதுர்யமுடன் சமாளிப்பீர்கள். அதன் பிறகு வியாபாரத்தில் அலைச்சலும், பளுவும் இருக்கத் தான் செய்யும். அரசு வகையில் உதவி கிடைப்பது அரிது.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது, பாராட்டு பெற வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் பணியில் மேம்பாடு அடைவர். எதிர்பார்த்த பதவியும், பணமும் கிடைக்கும்.

மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு சிறப்பாக படிப்பர். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகள் நல்ல வளத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. நவீன இயந்திரங்கள் திட்டமிட்டபடி வாங்குவர்.  பிப்.13 வரை நெல், சோளம், கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். அதன் பின் மானாவாரி பயிர்களில் ஓரளவு வருமானம் காணலாம்.

பெண்களுக்கு பிள்ளை களால் வீண்செலவு ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வையால் தேவைகள் குறைவின்றி கிடைக்கும்.  தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.
மார்ச்13க்கு பிறகு உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். மே19  முதல் அக்.26 வரை குடும்பவாழ்வில் குதூகலம் நிலவும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். ஜுன், ஜூலையில் ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உடல்நிலை திருப்தியளிக்கும்.

பரிகாரம்:

*  பவுர்ணமியன்று அம்பிகைக்கு நெய் விளக்கு
*  சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை
*  வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு

துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) சந்தோஷச் சாரலில் சதிராட்டம் ஆடுவீங்க!

தர்மநெறி தவறாமல் வாழ்வு நடத்தும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில்  குருவால் ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். வருமானம் கூடும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவரின் சதி உங்களிடம் எடுபடாது. ஆனால் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை குரு அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருப்பது சுமாரானது என்றாலும் அவரது பார்வைபலத்தால் முன்னேற்றம் அடைவீர்கள்.   சனிபகவான் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் வளர்ச்சி முகத்தைக் காண்பீர்கள். மொத்தத்தில் ஆண்டு முழுவதும் சந்தோஷச் சாரலில் சதிராட்டம் ஆடுவீர்கள்.

பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் குருவாலும், பிற்பகுதியில் கேதுவாலும் பணவரவு வந்து கொண்டிருக்கும். அதன் மூலம் தேவையனைத்தும் பூர்த்தியாகும். அதே நேரம் மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அனாவசிய செலவு ஏற்படலாம். எடுத்த செயலைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். ஆனாலும் அவ்வப்போது தடைகள் வரலாம். அதை குருவின் பார்வையால் முறியடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. தம்பதியிடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.  மே 19க்கு பிறகு திருமணம் போன்ற சுபவிஷயங்கள் கைகூடும். அதுவும் மனதிற்குப் பிடித்த நல்ல வரனாக அமையும்.
கணவன், மனைவி இடையே அன்பு பெருகும்.  புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர்.  வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். உறவினர்கள் அனுகூலமாக இருப்பர். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பணலாபம் அதிகரிக்கும். மார்ச் 13 முதல் மே19 வரை மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் உறவினர் வகையில் நெருக்கம் வேண்டாம்.
சற்று ஒதுங்கி இருக்கவும். இந்த காலகட்டத்தில் சிலர் விடாமுயற்சியால் வீடு, மனை வாங்கலாம். அதற்காக கடன் வாங்கவும் நேரிடலாம். ஆனால் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் கையில் அதிகப்பணம் புழங்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.

பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். புதிய பதவியும் சிலருக்குத் தேடி வரும். வேலைப்பளு குறையும்.
விருப்பமான இடமாற்றம் கிடைக்கும்.  சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர்.  அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி  கிடைக்கும். மார்ச் 13 முதல் மே19 வரை சற்று வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகரிக்கும். அதே நேரம் உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.  ஆனால் மே19 ல் இருந்து அக்.26 வரை  நிலைமை உங்களுக்கு சாதகமாக அமையும்.  தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  வேலையின்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு சனி மற்றும் குருவின் பலத்தால் தொழில் வளர்ச்சி உண்டாகும். போதிய வருமானம் கிடைக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் வளம் காணலாம். எதிரிகளின் சதியை சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள்.
மார்ச் 13ல் இருந்து  மே19 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வீண் அலைச்சலும் ஏற்படலாம். முயற்சிக்கு தகுந்த நன்மை கிடைக்கும். மே மாதத்திற்கு பிறகு பணவிரயம் ஏற்படலாம். எனவே யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.  இந்த காலக்கட்டத்தில் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் ஓரளவு நன்மையை  எதிர்பார்க்கலாம். அதன் பிறகு அரசு வகையில் அனுகூலம் உண்டு.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள்  ஆதரவுடன் இருப்பர். அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் உண்டு. அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர்.

கேதுவால் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களின் பிடியில் இருந்து பிப்.13க்கு பிறகு விடுபடுவர். அதன் பிறகு படிப்படியாக நன்மை அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். கடந்த ஆண்டை விட கூடுதல் மதிப்பெண் கிடைக்கப் பெறலாம். குரு சாதகமாக காணப்படுவதால் தேர்வில் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். ஆனால் மார்ச்13ல் இருந்து மே19 வரை சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். அப்போது குருவின் பார்வையால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது.

விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். மஞ்சள், நெல், சோளம், கேழ்வரகு, கொள்ளு போன்ற பயிர்களில்  நல்ல வருமானம் கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். புதிய சொத்து வாங்க தருணம் வந்து விட்டது. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மார்ச் 13ல் இருந்து  மே 19 வரை அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும்.

பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் நன்மதிப்பை பெறுவர். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வர்.  சகோதரவழியில் நன்மை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் பெருமையுடன் இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு.
பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி மூலம் நிதியுதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து  மே 19வரை சிக்கனமாக இருப்பது நல்லது. இருப்பினும் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். கண் தொடர்பான உபாதை மறையும். தாயாரின் உடல்நிலை மேம்படும்.

பரிகாரம்:

*  ராகுவுக்காக வெள்ளியன்று துர்க்கை வழிபாடு
*  குருபகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை
*  சுவாதியன்று லட்சுமிநரசிம்மருக்கு நெய்தீபம்

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்நீச்சல் போடுங்க! முன்னேறிச் செல்லுங்க!

பரபரப்பும் சுறுசுறுப்புமாக பணிபுரியும் விருச்சிக ராசி அன்பர்களே! 

கேது சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. மனதில் பக்தி உயர்வு மேம்படும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். குருபகவான் தற்போது உங்கள் ராசியில் இருப்பது சுமாரான நிலையே. ஆனாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. அவர் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசிக்குச் செல்கிறார். இது சிறப்பான நிலை. அப்போது உங்களது ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். குடும்பத்தினரின் தேவையனைத்தும் நிறைவேறும்.  பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

சனிபகவான் குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். சிலருக்கு வீண்செலவும் ஏற்படலாம். ஆனால் சனிபகவானின் 10ம் இடத்துப்பார்வை சிறப்பாக  உள்ளதால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம். ஏப்.26 முதல் செப்.13 வரை அவர் வக்கிரம் அடைந்தாலும் தனுசு ராசிக்குள்ளேயே இருக்கிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது என்பதால் கெடுபலன்  குறையும். மொத்தத்தில் இந்த ஆண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் கூடுதல் நன்மையைக் காணலாம். கேதுபலத்தால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த முயற்சிகள் சிறப்பாக முடியும். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும்.
மதிப்பு, மரியாதை கூடும். மே19 முதல் அக்.26 வரை விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கியிருக்கவும். எதையும் விடாமுயற்சியால் மட்டுமே முடிக்க வேண்டியதிருக்கும். வீண்செலவும் அதிகரிக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் பணவரவில் பாதிப்பு இருக்காது.

குடும்பத்தினருடன் புனித தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர் வகையில் வாக்குவாதம் தவிர்ப்பது அவசியம். மார்ச் 13 முதல் மே 19 வரை மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும்.
ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடியேறவும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். அவர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். மே 19 முதல்  அக்டோபர் 26 வரை சுபநிகழ்ச்சிகள்  தடைபடலாம். தம்பதியிடையே கருத்து வேறுபாடு வரலாம்.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்திடும் சூழல் உருவாகும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.  இருப்பினும் குருவின் பார்வையால் வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பிப்.13க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். மார்ச்13 முதல் மே19 வரை சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
வேலைப்பளு குறையும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலைப்பார்த்துக் கொண்டே பக்கத்தொழில் செய்பவர்கள் கூடுதல் வருமானம் காணலாம். மே 19ல் இருந்து அக்.26 வரை வேலையில் அலைச்சலும், பளுவும் இருக்கும். வேலையில் வெறுப்புணர்ச்சி கூட ஏற்படலாம். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம்.

தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். மார்ச் 13 முதல் மே19 வரை இரும்பு, கம்ப்யூட்டர், அச்சுத்தொழில், இயந்திரம் தொடர்பான தொழில்கள் வளர்ச்சி பெறும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.எதிரி தொல்லை  மறையும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் குடும்பத்தினர் பெயரில் தொடங்கவும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அறிந்து நிறைவேற்றுவது நன்மையளிக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைக்கவும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஊர் திரும்புவர்.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். மார்ச் 13க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.  அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். ஆனால் பணப்புழக்கத்திற்கு  குறைவிருக்காது. விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நல்ல பொருளாதார வசதியுடன் காணப்படுவர். புதிய பதவியும் தேடி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பில் அக்கறை கொள்வது நல்லது. விரும்பிய பாடம் கிடைக்க விடாமுயற்சி தேவைப்படும்.  இருப்பினும் குருவின் பார்வையால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். மார்ச்13ல் இருந்து மே19 வரை போட்டி, பந்தயத்தில் ஈடுபட்டு வெற்றி காண்பர். நல்லவர் நட்பு மற்றும் ஆசிரியர் அறிவுரை உங்களை உயர்த்தும். விரும்பிய பாடம் கிடைக்கும்.  நவம்பர்,டிசம்பர் மாதங்களில் நற்பெயர் கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. சிலர் நவீன முறையில் விவசாயம் செய்து கூடுதல் லாபம் காண்பர். மே 19 முதல் அக்.26 வரை எதிலும் கூடுதல் முதலீடு போட வேண்டாம். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும்.  இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். குருவின் பார்வையால் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பொருளாதார வளம் பெருகும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர்.  மார்ச்13 முதல் மே 19 வரை ஆடை, ஆபரணம் வாங்குவர். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:

*  வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
*  சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
*  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் –1) பட்டாலும் பார்வையால் தப்பிக்கலாம்

ஆன்மிகத்தில் ஆர்வம் மிக்க தனுசு ராசி அன்பர்களே!   

ஆண்டின் தொடக்கத்தில் குருபகவானால் பொருள் விரயம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண்அலைச்சல் ஏற்படும். இதனால் நீங்கள் மனம் ஒடிந்து போய் விட வேண்டாம். குருபகவான் கெடுபலனை செய்யும் போது அது முடிவில் நன்மையாக இருக்கும். மார்ச் 13ல் இருந்து மே19 வரை  குருபகவான் அதிசாரம் பெற்று உங்கள் ராசியில் இருக்கிறார். இதுவும் சிறப்பானதல்ல. அப்போது அவரால் கலகம், விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் கூறப்படுவதுண்டு. குருபகவான் சாதகமற்று இருந்தாலும் அவரது பார்வைகள் சிறப்பாக உள்ளன. குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு.

சனிபகவான் உங்கள் ராசியில் இருப்பதால் உடல்நலம் பாதிக்கப்படலாம். உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். வெளியூரில் தங்க நேரிடும். இருந்தாலும் சனி நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3ம் இடத்துப்பார்வை சிறப்பாக உள்ளது. மேலும் சனிபகவான் ஏப்.26 முதல்  செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவர் கெடுபலன் தரமாட்டார்.

ராகு, உறவினர் வகையில் பிரச்னைகளை உருவாக்கியிருப்பார். முயற்சியில் தடை ஏற்பட்டிருக்கும். பிப்.13ல் ராகு 7-ம் இடமான மிதுனத்திற்கு வருகிறார். இங்கு அவரால் இடப்பெயர்ச்சி, அவப்பெயரை சந்திக்கலாம். கேது, அரசு வகையில் பிரச்னை ஏற்படுத்திருக்கலாம். பொருள் திருடு போயிருக்கலாம். பிப்.13ல்  கேது உங்கள் ராசிக்கு வருவதும் சிறப்பான இடம் என சொல்ல முடியாது. அவரால் காரிய தடை, உடல் உபாதை ஏற்படலாம். மொத்தத்தில் சிரமப்பட்டாலும் கூட குருவின் பார்வை பலத்தால் விரைவில் தப்பி விடுவீர்கள்.

மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.
பொருளாதாரம் சீராக இருக்கும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண் விரோதத்தை தவிர்க்கவும். மார்ச் 13 முதல்  மே 19 வரை குருவின் பார்வையால் கெடுபலன் உண்டாகாது.

குடும்பத்தில் தம்பதியிடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது.
உறவினர் மத்தியில் மனக்கசப்பு ஏற்படலாம். சற்று விலகி இருக்கவும்.  திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். மார்ச் 13க்கு பிறகு குருவின் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.
உறவினர் உதவிகரமாக இருப்பர். குருவின் 5-ம் இடத்துப்பார்வையால்  சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.
பெண்களால் மேன்மை கிடைக்கும். மார்ச்,ஏப்ரல் மாதங்களில் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். மே19ல் இருந்து அக்.26 வரை ஆடம்பரச் செலவை குறைப்பது நல்லது. பிள்ளைகளால் பிரச்னை வரலாம். எனவே அவர்கள் நடத்தையில் சற்று கவனம் தேவை.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வீண்அலைச்சலும் இருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்துப் போகவும். உங்கள் கோரிக்கை நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும்.
பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடலாம். மார்ச்13ல் இருந்து மே19 வரை சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். இருப்பினும் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் பின்தங்கிய நிலை மாறும். வேலைப்பளு படிப்படியாக குறையும்.
அதிகாரிகளின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். அக்.15 முதல் நவ.15 க்குள் அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி  கிடைக்கும்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.  வியாபாரிகள் எவ்வளவோ முயன்றும் போதிய வருமானம் கிடைக்காமல் தவிப்பர். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். மார்ச் 13 முதல் தொழிலில்  வளர்ச்சியைக் காணலாம்.  கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயம் கிடைக்கும். அச்சகம், பத்திரிகை, பப்ளிகேசன், கட்டுமான ஆலோசகர் போன்ற தொழில்கள் வளர்ச்சி பெறும். மே19ல் இருந்து அக்.26 வரை வாடிக்கையாளரை  தக்க வைக்க விடாமுயற்சி தேவைப்படும்.

கலைஞர்கள் திறமைக்கு ஏற்ற நற்பெயரும், புகழும் கிடைக்காமல் வருந்துவர். விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மறைமுகப் போட்டிகள் நிலவும்.
மார்ச் 13க்கு தட்டிப் பறிக்கப்பட்ட புகழ் கிடைக்கப் பெறுவர். கையில் பணம் புழங்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். கடுமையான முயற்சிக்கு பலன் கிடைக்காமல் போகாது. ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. இருப்பினும் மார்ச் 13க்கு பிறகு குருவின் பார்வையால்  முன்னேற்றம் காணலாம். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

விவசாயிகள் சீரான மகசூலைக் காண்பர். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். வழக்கில் முடிவு பாதகமாக அமைய வாய்ப்புண்டு. புதிய சொத்து வாங்க அனுகூலம் இல்லை அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். மார்ச்13க்கு பிறகு  மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூலும், வருமானமும் கிடைக்கும்.

மே 19 ல் இருந்து அக்.26 வரை  சுமாரான பலன் கிடைக்கும். ஆனால் நவம்பரில்  கைவிட்டுப் போன சொத்து கிடைக்க வாய்ப்புண்டு.

பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். மார்ச் 13க்குப் பிறகு குருபார்வையால் நினைத்தது நிறைவேறும். உறவினர் உதவிகரமாக இருப்பர். சுய தொழிலில் ஈடுபடும் பெண்கள் முன்னேற்றம் அடைவர். அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரின் மத்தியில் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்கள் பதவி உயர்வு காண்பர்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடக்கும்.  மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய வீடு-மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.

மே19ல் இருந்து அக்.26 வரையில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். அக்.15 முதல் நவ.15 வரை சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். உடல்நிலை அதிருப்தியளிக்கும்.

பரிகாரம்:

*  சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
*  உத்திர நட்சத்திரத்தன்று சாஸ்தா வழிபாடு

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) எரிமலை பாதி! பனிமலை மீதி!!

மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காத மகர ராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு உச்சமாக இருக்கும் செவ்வாய் நன்மை தரும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. ஆண்டின் தொடக்கம்  சிறப்பாக அமையும். ராசிநாதன் சனிபகவான் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருக்கிறார். கேதுவும் நன்மை தரும் இடத்தில் இல்லை. ஆனால் குருபகவான் உங்களை கீழே விழாமல் தாங்கி பிடித்திருப்பார்.

குருபகவான்  வெற்றி பல தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக உள்ளன. அதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். ஆனால் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரமாகி குருபகவான் தனுசு ராசியில் இருக்கிறார். இது சுமாரான இடமே. அப்போது அவரால் பணவிரயம் ஏற்படும். வீண்அலைச்சல் ஏற்படும்.

சனிபகவானால் பொருளாதார இழப்பு வரலாம். அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிதொல்லை குறுக்கிடலாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரின் 7-ம் இடத்துப்பார்வை மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் பொருளாதாரம் பெருகும். உங்கள் ஆற்றல் மேம்படும். தனுசு ராசியில் இருக்கும் சனிபகவான் ஏப்.26 முதல் செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் கெடுபலன் தர மாட்டார்.   மொத்தத்தில் இந்த ஆண்டில் எரிமலை பாதியாகவும்,  பனிமலை மீதியாகவும் நன்மை, தீமை கலந்திருக்கும்.

ஆண்டின் முற்பகுதியில் குருவாலும், பிப்.13க்கு  பிறகு ராகுவாலும் நற்பலன் காணலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பொருளாதார வளம் சிறக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அதே நேரம் மார்ச் 13ல் இருந்து  மே19 வரை குரு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. புதிய வாகனங்கள் வாங்க யோகமுண்டு. ஆனால் அதற்கு விடாமுயற்சி தேவைப்படும்.

குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் சிறப்பாக நடக்கும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் உண்டாகும். சகோதரிகளால் பொன், பொருள் சேரும். உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. மார்ச்13ல் இருந்து  மே19 வரை திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். முயற்சி எடுத்தால் மட்டுமே செயல்  நிறைவேறும்.
பணியாளர்களுக்கு திருப்திகரமான நிலை இருக்கும்.  தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர். வழக்கமான பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். குருவின் 9-ம் இடத்துப்பார்வையால் செல்வாக்கு மேம்படும். மார்ச் 13ல் இருந்து  மே19 வரை வேலையில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம்.  எனவே பொறுமையும் நிதானமும் தேவை. அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் பணியாற்றுவது நல்லது. முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

வியாபாரத்தில் சீரான ஆதாயம் கிடைக்கும். வெளியூர் பயணம் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பெண்கள் வகையில் இருந்த இடர்ப்பாடுகள் மறையும். அதே பெண்கள்  தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் அடையும்.  பணத்திற்காக நீங்கள் கையேந்தி நிற்கும் நிலை மாறுவதோடு, பிறரை உங்களை அண்டி நிற்கும் நிலை உருவாகும். தரகு, கமிஷன் போன்ற தொழில் சிறப்பாக நடக்கும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை  எதிரிகளின் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம். தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவை பயன்படுத்தி வருமானம் காணலாம். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். வீண் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.  கவனம் தேவை.

கலைஞர்கள் ரசிகர்களின் மத்தியில் புகழ், பாராட்டைப் பெறலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மார்ச் 13ல் இருந்து மே 19 வரை  தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். தொண்டர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.  சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்புண்டு. குருவின் 9-ம் இடத்துப் பார்வை மூலம் பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். ஆனால் மார்ச் 13 முதல் மே19 வரை  விடாமுயற்சி தேவைப்படும்.  ஆசிரியர்களின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நல்லது.

விவசாயத்தில் உழைப்பிற்கு ஏற்ற பலனைக் காணலாம்.  பிப்.13க்கு  பிறகு மகசூல் அதிகரிக்கும். குறிப்பாக நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் அதிக ஆதாயம் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர் வகையில் இருந்த தொல்லை மறையும்.

பெண்கள் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். பிறந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருட்கள், சொத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. சகோதர வழியில்  பணஉதவி கிடைக்கும். குருவின் 9-ம் இடத்துபார்வையால் சுப நிகழ்ச்சிகள் பற்றி பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் கருணையால் பதவி உயர்வு கிடைக்கும்.  மார்ச் 13 முதல் மே 19 வரை  தனியார் துறையில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து நடக்கவும்.

பரிகாரம்:

*  சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
*  வளர்பிறை சஷ்டியில் முருகனுக்கு அர்ச்சனை
*  பவுர்ணமியன்று அம்மன் கோயிலில் தீபம்

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) தொட்டது துலங்கும் வருமானம் கொட்டும்

குணத்தில் குன்றாக நிமிர்ந்து நிற்கும் கும்ப ராசி அன்பர்களே! 

சனி, ராகு ஆகிய கிரகங்கள் சாதகமாக நின்று நற்பலன் தரும் நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. சனிபகவானால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு இது மிக சிறப்பான காலமாக அமையும். முன்னேற்றம் காண்பீர்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் பொருள் நஷ்டம், மனசஞ்சலத்தை ஏற்படுத்தினாலும், அவரது 5-ம் இடத்துப் பார்வை  சிறப்பாக உள்ளது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து சாதனை புரிவீர்கள். அவர்  மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசியில் இருக்கிறார். அப்போது அவரால் பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும். மேலும் அவரது 7 மற்றும் 9ம் இடத்துப் பார்வைகள் மூலம் நற்பலன் அளிக்கும்.

ராகு உங்களை தீயோர் சேர்க்கையில் இருந்து விடுவித்து முன்னேற்றத்துக்கு வழிவகுத்திருப்பார். காரிய அனுகூலத்தைக் கொடுத்திருப்பார். ராகு பிப்.13ல் 5-ம் இடத்திற்கு வருவதால் நன்மை தர மாட்டார். இதனால் மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம்.

கேதுவால் பொருள் விரயம், உடல் உபாதை ஏற்பட்டிருக்கும். பிப்.13ல் கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான தனுசு ராசிக்கு போகிறார். அவர் நல்ல வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் கிடைக்கும்.
மொத்தத்தில் தொட்டது துலங்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கொட்டும்.  மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.

எந்த ஒரு முயற்சியும் வெற்றிகரமாக முடியும். பெரியோர்களின் ஆலோசனை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். கையில் பணப்புழக்கம் எப்போதும் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். புதுவீடு கட்டுதல், நிலம் வாங்குதல் நடந்தேறும்.

ஆண்டின் தொடக்கத்தில் வீண்செலவு ஏற்படலாம். எனவே சிக்கனமாக இருக்கவும். குடும்பத்தில் கணவன், மனைவி  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். மார்ச்13 முதல் மே 19 வரை கணவன், மனைவி இடையே பிரச்னை மறைந்து அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர் வகையில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். வீண்விரயம் மறைந்து சேமிப்பு அதிகரிக்கும். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் வாழ்க்கையில் வளம் காணலாம். ஆனால் மே20ல் இருந்து அக்.26 வரை சுபநிகழ்ச்சிகள் தாமதப்படலாம். சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்வீர்கள். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு.

பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலை அடைவர். மார்ச்13 முதல் மே19 வரை பணியிடத்தில் செல்வாக்கு உயரும். விரும்பிய பணிமாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் முயற்சித்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர்.  டிச.16க்கு பிறகு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் பொருளாதாரம் சிறக்கும். அச்சுத்துறை, கம்ப்யூட்டர் போன்ற தொழில்கள் சிறப்படையும். உங்கள் முன்னேற்றத்துக்கு உதவிகரமாக இருந்த பெண்கள் மே மாதத்திற்கு பிறகு சிரமத்திற்கும் காரணமாக இருப்பர்.  எனவே  ஆண்டின் பிற்பகுதியில் அவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கவும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்கலாம்.
புதிய தொழிலை ஆரம்பிக்க வேண்டாம். அக்.26க்கு  பிறகு லாபம் அதிகரிக்கும். தொழில் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் தரும்.

கலைஞர்கள் சீரான வளர்ச்சி காண்பர். தொழில்ரீதியாக வெளியூர், வெளிநாடு சென்று வெற்றியுடன் திரும்புவர். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஆனால் மார்ச்13க்கு பிறகு எதிர்பார்த்த பாராட்டு, விருது கிடைக்கும்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படிக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் குருவின் பார்வை பலத்தால் தரத்தேர்ச்சி காணலாம்.
ஆசிரியர்களின் அறிவுரை  வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மார்ச் 13க்கு பிறகு  சிலர் தேர்வில் ரேங்க் பட்டியலில் இடம் பெறுவர்.
விவசாயிகள் நெல், கேழ்வரகு, சோளம், கோதுமை, மஞ்சள் மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூலைக் காணலாம். புதிய சொத்து வாங்க யோகமுண்டு. பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லை மறையும். வழக்கு,  விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். கடந்த காலத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் உதவிகரமாக செயல்படுவர்.
உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. மே19ல் இருந்து அக் 26 வரை பணியில் பொறுப்பு அதிகரிக்கும். வெளியில் பெருமையாகப் பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

இல்லையென்றால் மனஉளைச்சலுக்கு ஆளாவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
மே மாதத்துக்கு பிறகு வயிறு தொடர்பான உபாதை வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.

பரிகாரம்:

*  வெள்ளியன்று ராகுகாலத்தில் துர்க்கை தரிசனம்
*  ஏகாதசியன்று விரதமிருந்து ரங்கநாதர் வழிபாடு
*  திங்களன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

திறந்த மனதுடன் நட்பு பாராட்டும் மீன ராசி அன்பர்களே!

ராசிநாதனான குருபகவான் சாதகமாக இருக்கும் சூழலில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. ஆரம்பமே சுபமங்களமாக இருக்கும். குருபகவானால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.  இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நற்பலன்கள் கிடைக்கும். குருபகவான்  மார்ச் 13ல் இருந்து மே 19 வரை அதிசாரம் பெற்று தனுசு  ராசியில் இருக்கிறார். இது சிறப்பான நிலை என சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நற்பலனை அள்ளித் தர முடியாது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப்பார்வை  சிறப்பாக உள்ளது. இதனால் மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும்.  பகைவர்சதி உங்களிடம் எடுபடாது.

சனிபகவானால் தொழிலில் சிறு பின்னடைவுகள் ஏற்படலாம். செல்வாக்கு முன்பு போல இல்லாமல் போகலாம். உடல் உபாதையால் சிரமப்படலாம். இதை கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் ஏப். 26 முதல்  செப்.13 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரது கெடுபலன்கள் சற்று குறையும்.

ஆக மொத்தத்தில் நாளைய சரித்திரம் உங்களின் வெற்றியை சொல்லும் விதத்தில் விடாமுயற்சியுடன் பாடுபடுவீர்கள்.
பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்கலாம். எடுத்த செயலைத் துரிதமாக முடிப்பீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஓ கோ எனப் புகழ்வர். ஆனால் மார்ச்13 முதல்  மே19 வரை வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். உறவினர் மத்தியில் இருந்த கருத்துவேறுபாடு மறையும்.  தடைபட்ட திருமணம்  கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதிய வீடு, சொத்து  வாங்கலாம். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு புண்ணிய தலங்களுக்கு சென்று வரலாம். மார்ச்13 முதல் மே19 வரை  பொறுமையைக் கடைபிடிக்கவும். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
அக்கம்பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம், அதன் பின் கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும். சொந்தபந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி நிலைக்கும்.
பணியாளர்களின் திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும்.
விரும்பிய இடத்துக்கு பணிமாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு  நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அரசு ஊழியர்கள் விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பர். மார்ச்13 முதல்  மே19 வரை வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வு வழக்கம் போல் இருக்கும்.  வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய நேரலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர்.

வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் சிறக்கும்.  அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வங்கியில் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மார்ச் 13 முதல்  மே 19 வரை செலவு அதிகரிக்கும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதை விட அறிவை பயன்படுத்தி வருமானம் தேடுவது நல்லது.  சிலர் தொழில் நிமித்தமாக இருப்பிடத்தை  மாற்ற நேரிடலாம்.

சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்கலாம். மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் காண்பர்.
கலைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். மார்ச் 13ல் இருந்து மே19 வரை விடாமுயற்சி தேவைப்படும். புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.  வரவேண்டிய விருது  தட்டிப் பறிக்கப்படலாம். அதே நேரம் பணவிஷத்தில்  பின்னடைவு இருக்காது. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனைக் காண்பர். பிப்.13க்கு  பிறகு எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் சற்று தாமதம் ஏற்படலாம்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஆசிரியர்களின் மத்தியில் மதிப்பு உயரும்.  விரும்பிய  நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். மார்ச்13க்கு பிறகு முதல் மே19 வரை மெத்தனம் வேண்டாம். சிரத்தை எடுத்து படிப்பது அவசியம். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை பெறுவர்.

விவசாயிகள்  நல்ல வளத்தோடு காணப்படுவர். நெல், கோதுமை, கேழ்வரகு, கடலை மற்றும் மானாவாரி பயிர்கள் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. பிப்.13க்கு பிறகு கடின உழைப்பு தேவைப்படும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் எடுப்பர். உறவினர் மத்தியில் சுமுகநிலை ஏற்படும். தோழிகள் உதவிகரமாக  செயல்படுவர். மனம் போல திருமணம் கைகூடும். கணவனிடத்தில் அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும்.
புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள்

வரப் பெறலாம்.  அதே நேரம் மார்ச்13 முதல்  மே19 வரை குடும்ப நன்மைக்காக பெண்கள் சற்று பொறுமையுடன் நடப்பது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் சீரான வருமானம் பெறுவர். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். உடல்நிலை திருப்தியளிக்கும்.
மருத்துவ செலவு வெகுவாக குறையும்.

பரிகாரம்:

*  தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு
*  வளர்பிறை சஷ்டியில் முருகனுக்கு நெய்தீபம்
*  பவுர்ணமியன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை

நன்றி தினமலர்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !