ஈழத்து நடன இயக்குனர் கௌரவிப்பு

உலக உருண்டையின் பல்வேறு பாகங்களில் வாழும் பலதரப்பட்ட படைப்பாளிகள் அன்றாட வாழ்வில் அதிக அளவு இரண்டறக் கலந்து பல சாதனைகளை படைத்து வரும் நிலையில் ஈழத்து கலைஞர்கள் எமது ஈழத்திலும் போற்றத்தக்க வகையில்  தமது பணியை உற்சாகத்தோடு முன் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், யாழ்ப்பாணத்தின் ஈழத்து சினிமாத்துறையில் பல பாடல்களுக்கு நடன அமைப்புகளை வழங்கி பல தடவை சிறந்த நடன இயக்குனர் என்ற விருதை வென்ற ஜான்சன் அவர்களுக்கு மறுபடியும் Western மயில் என்ற கௌரவம் கிடைத்துள்ளது.

ஈழத்து சினிமா துறை வளர்ந்து வருகின்ற காலப்பகுதிகளில் காணொளி பாடல் வாயிலாக தம்மை நிரூபிக்க வேண்டும் என்று நினைத்து ஜான்சனின் நடன அமைப்பில் எதிர்நீச்சல் என்ற பாடல் முதன்முதலாக காணொளி பாடலாக யுனிவர்சல் நடனக்கலை மன்றத்தினால் தயாரிக்கப்பட்டது

இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வெற்றியை பெறவே யுனிவர்சல் நடனக்கலை மன்றமானது சமூக வலைதள நண்பர்களால் UC DANCERS என்று செல்லமாக அழைக்கப்பட்டு யுனிவர்சல் நடன கலைஞர்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றனர்

பின்பு ஈழத்து சினிமாத்துறையின் ஒரு காணொளி பாடல் ஆகிய அஞ்சல என்ற பாடலுக்கு ஜான்சனின் நடன அமைப்பில் UC நடன கலைஞர்கள் நடனத்தை வழங்கினார்கள் அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவவே இன்னும் இவர்களுடைய பெயர் மக்கள் மத்தியிலே பேசப்பட்டது அத்துடன் இந்தப் பாடலுக்காக சிறந்த நடன இயக்குனர் என திரு ஜான்சன் அவர்கள் இரண்டு முறை விருதுகளை வென்றார்

இன்று வரைக்கும் கிட்டத்தட்ட 25 பாடல்களுக்கு மேலாக யுனிவர்சல் கலை மன்ற மாணவர்களின் நடனத்திலும் ஜான்சன் அவர்களின் நடன அமைப்பிலும் யாழ்ப்பாணத்திலே வெளிவந்துள்ளது அத்துடன் இந்தியாவில் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் உருவாகி வருகின்ற முழுநீள திரைப்படத்தில் ஜான்சனின் நடன அமைப்பில் ஒரு பாடல் உருவாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இன்னும் வரவேற்பை பெற்றுள்ளது.

 2009 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள மேலைத்தேய நடனக் கல்லூரி ஒன்றில் மேலைத்தேய நடனத்தை முறைப்படி கற்று விட்டு யாழ்ப்பாணத்தில்  மூன்று நடனக் கலைஞர்களுடன் யுனிவர்சல் நடன கலை மன்றம் என்ற ஒரு மேலைத்தேய நடன வகுப்பை திரு இ. ஜான்சன் ஆரம்பித்தார்.

கிராமங்களில் உள்ள வைபவங்களிலும் திருவிழாக்களிலும் விஷேட நிகழ்வுகளிலும் குழு நடனத்தை வழங்கிக் கொண்டிருந்தனர் 2010 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் குழு நடனம் மிகவும் அரிதாக இருந்தமையினால் யுனிவர்சல் நடனக் கலைஞர்களின் நடனம் வடமாகாணத்தின் பெரும்பகுதியான மக்களுக்கு பிடித்துப்போனது

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றமையால் உத்தியோகபூர்வமாக ஒரு நடன கழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் 2010ம் ஆண்டு  சித்திரை மாதம் ஏழாம் திகதி யுனிவர்சல் நடன கலை மன்றம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட அந்த நேரத்தில் 15க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மன்றத்தில் இணைந்து கொண்டனர். இன்று வரைக்கும் 50 மாணவர்கள் நடனம் கற்கின்றனர்.

2017 ,2018 களில் சிறந்த நடன இயக்குனர் விருதுகள் (2017 King of Dance, 2018 Western மயில்) Colombo   Universal Dance Studio, DD தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் (பகுதி நேர வேலை) diploma in counseling psychology

இவர்களுடைய பாதை வெற்றிப் பாதையாக அமைய வாழ்த்துவதோடு இன்னும் கலைத்துறையில் பல சாதனைகள் புரிந்து பல விருதுகளைப்பெற்று தமிழுக்கும்,தமிழர்களுக்கும் தமிழர் கலைக்கும் பெருமை சேர்த்து தரவேண்டும் என்று மனதார நாமும் வாழ்த்துவோம்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !