Main Menu

13 இராணுவ வீரர்கள் பலி! – உலங்கு வானூர்தியின் கறுப்பு பெட்டி மீட்பு!

மாலி நாட்டில் உயிரிழந்த 13 இராணுவ வீரர்கள் பயணித்த உலங்குவானூர்தியின் கறுப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.  விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கருப்பு பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளமை விசாரணைகளை துரிதப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடாமல் இராணுவ பேச்சாளர் Frederic Barbry இத்தகவலை இன்று புதன்கிழமை தெரிவித்திருந்தார்.  மாலி நாட்டின் எல்லை பிராந்தியமான. (Niger மற்றும் Burkina Faso க்கு இடையில்) Malian Liptako நகரில் வைத்து விபத்து இடம்பெற்றுள்ளது.  உயிரிழந்த 13 வீரர்களுக்குமான தேசிய அஞ்சலி நிகழ்வு டிசம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.