13ஆவது நாளாக தொடரும் முருகனின் உண்ணாவிரதப் போராட்டம்

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் முருகன்  இன்று (வியாழக்கிழமை) 13 ஆவது நாளாகவும் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் அதேவேளை நளினி நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

தொடர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுப்பட்டு வரும் முருகன் மற்றும் நளினி ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில்  சிறை வளாகத்தில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவரின் உடல்நிலையையும் பரிசோதிக்க வைத்திய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த உணவுதவிர்ப்பு போராட்டத்தின் போது தான் சிறையில் இறந்துவிட்டால் தனது உடலை அரச வைத்தியசாலைக்கு முதலமைச்சர் வழங்க வேண்டும் என முருகன் சிறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், உண்மையை கண்டறிய விசாரணை நடத்த கோரியும் முருகன் சாகும் வரையிலான உண்ணாவிர போராட்டத்தை மேற்கொண்டுவருவதுடன், நளினி தனது கணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !