Main Menu

12 அடி நீள மலைப்பாம்பை தோளில் போட்டு வாக்கிங் சென்ற இளைஞர்

பிரிக்டான் டவுன் என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் வாக்கிங் சென்றார்.

அப்போது, அவர் 12 அடி நீளமுள்ள பர்மிய மலைப்பாம்பை தோளில் மாலைபோல அணிந்து கொண்டு சென்றதால் அவருக்கு அருகில் சென்றவர் அச்சமடைந்தனர்.

அருகிலிருந்த கடைக்கு அவர் சென்றபோது, அச்சமடைந்த கடைக்காரர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இளைஞரைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் விசாரணைக்குப் பின்னர் அந்த இளைஞர் விடுவிக்கப்பட்டார்.