1000 கோடி ரூபாய் செலவில் ஷங்கரின் அடுத்த திரைப்படம்?

லைகா புரொடக்ஷனின் பிரமாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய ‘2.O’ திரைப்படம் நான்கே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்த நிலையில், அவருடைய அடுத்த திரைப்படமான ‘இந்தியன் ‘2 திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தைத் தொடர்ந்து,ஷங்கர் இயக்கும் திரைப்படத்தின் செலவு 1000 கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

இந்தத்திரப்படத்தை சீன நிறுவனம் ஒன்று பிரபல இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு தொடங்கும் என்றும் தெரிவிக்காப்பட்டுள்ளது.

உலகிலேயே ஆங்கில படங்களை அடுத்து பெரிய செலவில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் அர்னால்ட், ஜாக்கிசான் மற்றும் இந்தியாவின் பெரிய நச்சத்திரம் ஒருவர் இணைந்து நடிக்கவுள்ளதாகம் கூறப்படுகிறது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !